Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | நெறிமுறை வடிவமைப்பு நுட்பங்கள்
   Posted On :  20.09.2022 02:03 am

11வது கணினி அறிவியல் : அலகு 6 : விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம்

நெறிமுறை வடிவமைப்பு நுட்பங்கள்

நெறிமுறைகளை வடிவமைப்பதற்கான சில அடிப்படை கோட்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் உள்ளன.

நெறிமுறை வடிவமைப்பு நுட்பங்கள் (Algorithm Design Techniques)


நெறிமுறைகளை வடிவமைப்பதற்கான சில அடிப்படை கோட்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் உள்ளன.


1. விவரக்குறிப்புகள் (Specification): சிக்கல் தீர்பதற்கான முதல் படி சிக்கலைத் துல்லியமாக அறிந்துகொள்ள வேண்டும். ஒரு சிக்கலானது கொடுக்கப்பட்ட உள்ளீடு மற்றும் வெளியீட்டின் அடிப்படையில் குறிப்பிட வேண்டும். விவரக்குறிப்புகள் கொடுக்கப்பட்ட உள்ளீடுகளின் பண்புகளையும், உள்ளீடு மற்றும் வெளியீட்டிற்கும் இடையேயான தொடர்பையும் குறிப்பிட வேண்டும்.


2. அருவமாக்கம் (Abstraction): ஒரு சிக்கல் நிறைய விவரங்களை உள்ளடக்கியது ஆனால் ஒரு சிக்கலை தீர்க்க அதன் எல்லா விவரங்களும் தேவையில்லை. ஒரு சில விவரங்கள் மட்டுமே போதுமானது. தேவையற்ற விவரங்களைப் புறக்கணித்து அல்லது மறைத்து வைத்திருப்பது அதன் முக்கிய பண்புகளை மட்டுமே பயன்படுத்துவது என்பது அருவமாக்கம் என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக, நாம் ஒரு செயல்பாட்டின் நிலையை குறிப்பிடுகையில் சிக்கலுக்கு அவசியமான மாறிகள் மட்டும் தேர்ந்தெடுக்கிறோம் மற்றும் அவசியமற்ற விவரங்களை புறக்கணிக்கிறோம்.


3. ஒருங்கிணைப்பு (Composition): ஒரு நெறிமுறை மதிப்பிருத்து மற்றும் கட்டுப்பாட்டு பாய்வு கூற்றுகளை உள்ளாக்கியது. ஒரு கட்டுப்பாட்டு பாய்வு கூற்று ஒரு நிபந்தனையின் நிலையை சோதித்து அதன் மதிப்பு அடிப்படையில் அடுத்த கூற்று நிறைவேற்றப்பட வேண்டும் என்று முடிவு செய்கிறது.


4. பிரித்தல் (Decomposition): நாம் முக்கிய நெறிமுறைகளை செயல் கூறுகளாக பிரிக்கிறோம். முக்கிய நெறிமுறை மற்றும் பிற செயல் கூறுகளாக தனித்தனியாக ஒவ்வொரு செயலையும் கட்டமைக்கிறோம். இறுதியாக, நாம் செயல்கூறுகளை பயன்படுத்தி முக்கிய நெறிமுறையை கட்டமைக்கிறோம். நாம் செயல்பாடுகளை பயன்படுத்தும் போது, செயல்பாட்டின் விவரக்குறிப்பை தெரிந்துகொள்வது போதுமானது. செயல்கூறு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை அறிய வேண்டிய அவசியம் இல்லை.



11th Computer Science : Chapter 6 : Specification and Abstraction : Algorithm Design Techniques in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 6 : விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் : நெறிமுறை வடிவமைப்பு நுட்பங்கள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 6 : விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம்