நெறிமுறைசார் சிக்கல்கள் (Algorithmic Problems)
நெறிமுறைகளை கட்டமைப்பதற்கான சில கொள்கைகளும் உத்திகளும் உள்ளன. நாம் பொதுவாக ஒரு சிக்கலை இயற்கையான நெறிமுறை என்கிறோம், எனெனில் அதன் தீர்வு ஒரு படிமுறை கட்டமைப்பாகும். சில வகையான சிக்கல்கள் உடனடியாக நெறிமுறை என அங்கீகரிக்க முடியும்.
எடுத்துக்காட்டு 6.2. நமக்கு பிரபலமான ஆடு, புல் மற்றும் ஓநாய் சிக்கலை எடுத்துக் கொள்வோம் :
ஒரு விவசாயி அவரிடம் உள்ள ஆடு, புல்லுக்கட்டு மற்றும் ஓநாய் ஆகியவற்றுடன் ஒரு ஆற்றை கடக்க விரும்புகிறார் ஆனால் அவரது படகில் ஒரே சமயத்தில் ஏதேனும் ஒன்றை மட்டுமே அவருடன் எடுத்து செல்ல முடியும். அதனால் அவர் ஒரு ஆற்றைக் கடக்க பலமுறை ஆற்றின் குறுக்கே பயணம் செய்ய வேண்டும். மேலும் அவர் ஆடு மற்றும் ஓநாய் அல்லது ஆடு மற்றும் புல்லுகட்டு கணக்கீட்டுகளை செயல்முறைபடுத்தி, ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து விட்டு செல்லக் கூடாது. (ஏனெனில் ஓநாய் ஆட்டை தின்றுவிடும், அல்லது ஆடு புல்லுகட்டை தின்றுவிடும்.) ஆகவே விவசாயி தன்னுடன் உள்ள மூன்றையும் அக்கரைக்கு எடுத்து செல்லவேண்டும்? இந்த சிக்கலை எவ்வாறு தீர்ப்பாய்? ஆரம்பத்தில், நான்கு பேர் ஆற்றின் ஒரே பக்கத்தில் இருப்பதாக நாம் கருதிக்கொள்வோம். கடைசியாக, நான்கு பேரும் எதிர் பக்கத்தில் இருக்க வேண்டும். விவசாயி ஆற்றை கடக்கும்போது அவர் படகில் இருக்க வேண்டும். அவருடன் யார் அல்லது என்ன கடக்க வேண்டும் என்பதை குறிக்கும் கட்டளைகளின் வரிசையைக் கொண்டது ஒரு தீர்வு. எனவே, இது ஒரு நெறிமுறையை சார்ந்த சிக்கல். இச்சிக்கலுக்கான தீர்வு கட்டளைகள் இவ்வாறு இருக்கலாம்
விவசாயி ஓநாயுடன் ஆற்றை கடந்து செல்ல வேண்டும். அல்லது விவசாயி மட்டும் தனியாக ஆற்றை கடக்க வேண்டும்.
இருப்பினும், சில நெறிமுறை சிக்கல்களுக்கு நெறிமுறைகளை உருவாக்கத் தேவையில்லை. அதற்கு பதிலாக, ஒரு படிமுறை வழங்கப்படுகிறது. நாம் அதன் பண்புகள் சிலவற்றை நிரூபிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு 6.3. குரோம்லேண்டின் |பச்சோந்திகள் சிக்கலை எடுத்துக்கொள்வோம்
குரோம்லேண்ட் தீவில் மூன்று வெவ்வேறு வகையான பச்சோந்திகள் உள்ளனசிவப்பு பச்சோந்தி, பச்சை பச்சோந்தி மற்றும் நீல பச்சோந்தி. வெவ்வேறு நிறங்களின் இரண்டு பச்சோந்திகள் சந்திக்கும்போது, அவை இரண்டும் மூன்றாவது நிறத்தில் உள்ள பச்சோந்தி நிறத்துக்கு தங்களை மாற்றிக்கொள்ளும். சிவப்பு, பச்சை மற்றும் நீல பச்சோந்திகள் எத்தனை முறை சந்திக்கும்போது அவை அனைத்தும் ஒரே நிறத்தில் காணப்படும்.
இது ஒரு நெறிமுறையை சார்ந்த சிக்கலாகும், / ஏனென்றால் பச்சோந்திகள் தங்களுக்கிடையே / இடையில் சந்திக்க செய்ய ஒரு நெறிமுறை உள்ளது. நெறிமுறையின் சில பண்புகளை பயன்படுத்தி, நாம் பச்சோந்திகளின் ஆரம்ப எண்ணிக்கையை கண்டுபிடிக்க முடியும், இலக்கையும் அடைய முடியும்.