அன்றாட வாழ்வில் விலங்குகள் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு | 7th Science : Term 3 Unit 5 : Animals in Daily Life
விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு
விலங்குகளைப் பாதுகாத்தல் என்பது நமது குழந்தைகளையும், பெற்றோரையும் பாதுகாப்பதற்கு நிகரானது அவை மனிதர்கள் போன்ற உயிரிகளாகும். இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பது மனிதர்களின் கடமை. விலங்குகளைப் பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்புணர்வு மனிதர்களாகிய நமக்கு இருக்கிறது.
உணவுக்காக பயன்படுத்தப்படும் விலங்குகள்
ஒரு விலங்கின் உடல் சதைக்காகவும் அவற்றிலிருந்து பெறப்படும் பிறப்பொருளுக்காக மனிதனால் நுகரப்படுகின்றன. இவை தான் விலங்கு உணவு என்றழைக்கப்படுகிறது
அகிம்சைப் பட்டு
அகிம்சை என்பது வன்முறை அல்லாதது ஆகும். இது புதுமாதிரி கண்டுபிடிப்பு ஆகும். ஏனெனில் பட்டுப்புழுக்களை அளிக்கப்படாத செயல்பாட்டில் துணி தயாரிக்கப்படுகிறது
உடைக்காக பயன்படுத்தப்படும் விலங்குகள்
விலங்குகளின் தோல் ஒரு சில ஆடைகள் அல்லது தோலிலானப் பொருள்கள்செய்ய பயன்படுகின்றன
கோழி வளர்ப்பு
கோழி வளர்ப்பு - உள்நாட்டில் அல்லது வணிக ரீதியாக இறைச்சி, முட்டை மற்றும் இறகுகள் முதன்மையானதாகும்
விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு
விலங்கின் நலனைப் பாதுகாப்பது என்பது அதன் உடல் மற்றும் மன தேவைகளை பூர்த்தி செய்வது ஆகும்
விலங்குகளின் இனப்பெருக்கத்தை ஆய்வுசெய்தல் மற்றும் அவற்றின் பராமரிப்பு பற்றிப் படிக்கும் பிரிவிற்கு விலங்கு வளர்ப்பு (Animal Husbandry) என்று பெயர்.
நமது சுற்றுச்சூழல், காடு மற்றும் தட்ப வெப்பநிலை மற்றும் மாற்ற சார்ந்த அமைச்சகம், விலங்குகளைத் துன்புறுத்துதலில் இருந்து பாதுகாக்க 1960 ஆம் ஆண்டு, நான்கு புதிய சட்டங்களை கொண்டுவந்தது அவற்றுள் வீட்டில் நாய் வளர்ப்பவர்கள், விலங்குகளை சந்தையில் விற்பனை செய்பவர்கள், செல்லப் பிராணிகள் மற்றும் மீன்கள் வளர்ப்பவர்கள் போன்றவர்களுக்காக உருவாக்கியது. விலங்குகளைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும் என்ற பல்வேறு குழுக்களின் கூட்டுமுயற்சியால்தான் அரசு இச்சட்டங்களை இயற்றியது. நம்மையும், நம் சுற்றுச் சூழலையும் பாதுகாத்துக் கொள்ள, விலங்குகளை நாம் பாதுகாக்க வேண்டும். ஆகையால், நாம் விலங்குகளின் மீது அக்கறை, அன்பு கொண்டு அவற்றைப் பாதுகாக்க வேண்டும், நம் குடும்பத்திலுள்ள ஓர் உறுப்பினர் போல் விலங்குகளையும் நாம் பேணிக்காக்க வேண்டும்.