Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | கோழிப் பண்ணை அமைத்தல்

அன்றாட வாழ்வில் விலங்குகள் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - கோழிப் பண்ணை அமைத்தல் | 7th Science : Term 3 Unit 5 : Animals in Daily Life

   Posted On :  11.05.2022 08:30 pm

7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 5 : அன்றாட வாழ்வில் விலங்குகள்

கோழிப் பண்ணை அமைத்தல்

வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளான கோழி, வாத்து, வான்கோழி போன்றவற்றை அவற்றின் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்ப்பது பண்ணை அமைத்தல் எனப்படும்.

கோழிப் பண்ணை அமைத்தல்

வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளான கோழி, வாத்து, வான்கோழி போன்றவற்றை அவற்றின் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்ப்பது பண்ணை அமைத்தல் எனப்படும். கோழிப் பண்ணை அமைத்தல் என்பது, கோழிகளின் எண்ணிக்கையை அதிக அளவில் பெருக்குவது ஆகும். இவற்றை நாம் இரு வகைகளாகப் பிரிக்கலாம். 

i. முட்டையிடுபவை 

ii. பிராய்லர் (இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை). 

கோழிப்பண்ணைகள் அமைக்கப் போதுமான, பாதுகாப்பான இடம் தேவைப்படுகின்றது. கோழிகளை அடைக்கக் கூடுகள், தேவையான நீர், காற்றோட்டம், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் நிறைந்த உணவுப்பொருள்கள் போன்றவை தேவைப்படுகின்றன. கோழித் தீவனம் என்பது மக்காச்சோளம், கோதுமை, கம்பு மற்றும் அரிசித் தவிடு இவற்றை நன்கு மசித்துத் தரவேண்டும். இதோடு, நிலக்கடலை, கொண்டைக்கடலை போன்றவற்றையும் உடைத்துத் தரலாம்.


நோய்கள்

சில நோய்க்கிருமிகள் கோழிப் பண்ணையில் உள்ள கோழிகளைத் தாக்கி நோய்களை உண்டாக்குகின்றன. இதைத் தவிர்க்க, கோழிகள் வாழும் இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கோழிகளுக்குத் தடுப்பூசி போட வேண்டும். கோழிப் பண்ணையில் உள்ள கோழிகளுக்குப் பொதுவாக உண்டாகும் நோய்கள் பின் வருமாறு.



Tags : Animals in Daily Life | Term 3 Unit 5 | 7th Science அன்றாட வாழ்வில் விலங்குகள் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 3 Unit 5 : Animals in Daily Life : Poultry Farming Animals in Daily Life | Term 3 Unit 5 | 7th Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 5 : அன்றாட வாழ்வில் விலங்குகள் : கோழிப் பண்ணை அமைத்தல் - அன்றாட வாழ்வில் விலங்குகள் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 5 : அன்றாட வாழ்வில் விலங்குகள்