கணினி அமைப்பு | கணினி அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 11th Computer Science : Chapter 3 : Computer Organization
கணினிகளின் அடிப்படைகள்
கணினி அமைப்பு
மதிப்பாய்வு
பகுதி - ஆ
குறு வினாக்கள்
1. ஒரு நுண்செயலின் பண்புகளைக் குறிக்கும்
காரணிகள் யாவை?
விடை:
(i) கடிகார வேகம் (Clock Speed)
(ii) கட்டளை தொகுப்பு (Instruction Set)
(iii) வேர்டு அளவு (Word Size)
2. அறிவுறுத்தல் என்றால் என்ன?
விடை: கணிப்பொறியில் தரவை
செயற்படுத்த கொடுக்கும் கட்டளையே அறிவுறுத்தல் எனப்படும்.
3. நிரல் கவுண்ட்டர் என்றால் என்ன?
விடை: நிரலின் அடுத்து செயற்படுத்த
வேண்டிய கட்டளையின் முகவரியை மையச் செயலகத்தில் சேமித்து வைக்கும் ஒரு சிறப்பு பதிவேடு
தான் நிரல் பதிவேடு ஆகும். மையச் செயலகத்திலுள்ள கணித ஏரணச் செயலகம் செயற்படுத்த வேண்டிய நினைவக
முகவரியை, நினைவக முகவரி பதிவேட்டில் (Program Counter) சேமித்து வைக்கும்.
4. உயர் வரையறை பல்லூடக இடைமுகம்
(HDMI) என்றால் என்ன?
விடை: உயர் வரையறை பல்லூடக
இடைமுகம் ஒலி/ ஒளி இடைமுகம் சுருக்கப்படாத ஒலி மற்றும் ஒளி தரவுகளை கணிப்பொறி திரையகத்திற்கு, LCD புரொஜக்டர், டிஜிட்டல் தொலைக்காட்சிக்கு கொடுக்கப்
பயன்படுகின்றது.
5. EPROM- உள்ள தரவை எவ்வாறு அழிப்பாய்?
விடை: EPROM உள்ள தரவை புற ஊதா ஒளி மூலம் அழிக்கப்படுகிறது.
பகுதி - இ
சிறு வினாக்கள்
1. கணிப்பொறி அமைப்பு,
கணிப்பொறி கட்டமைப்பு வேறுபடுத்துக.
விடை:
(i) கணிப்பொறி
அமைப்பு என்பது கணினியின் வன்பொருள் கூறுகளை உள்ளடக்கியது. இதில் உள்ளீட்டு/வெளியீட்டு சாதனங்கள், மையச் செயலகம் (CPU), சேமிப்பு சாதனங்கள்
மற்றும் முதன்மை நினைவகம் ஆகியவை அடங்கும்.
(ii) இது கணினியின் பல்வேறு பாகங்களை எப்படி செயல்படுத்துகிறது என்பதை பொறுத்தது. இது ஒரு கணினியின் அனைத்து வன்சாதனங்களும்
எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றியும், மேலும் பல்வேறு பாகங்களின் இணைப்பு
பற்றியும் விளக்குகிறது.
(iii) கணினியின் கட்டமைப்பு என்பதும், கணிப்பொறியின் அமைப்பு என்பதும்
ஒன்றே. ஆனால் கணிப்பொறியை வடிவமைப்பதில் ஈடுபட்டிருக்கும் பொறியியல் கருதுகோளுடன்
கணினி கட்டமைப்பு உள்ளடக்கியது. அதே நேரத்தில் கணினி அமைப்பானது, நிரலருக்கு வன்பொருள் கூறுகளை
வெளிப்படையாக விளக்குகிறது.
2. தரவின் அகலத்தை பொருத்து நுண்செயலியை
வகைப்படுத்துக.
விடை: தரவின் அகலத்தைப்
பொருத்து நுண்செயலி கட்டளைகளை செயலாக்கும். நுண்செயலியைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
(i) 8- பிட் நுண்செயலி
(ii) 16-பிட் நுண்செயலி
(iii) 32-பிட் நுண்செயலி
(iv) 64-பிட் நுண்செயலி
3. கட்டளையின் தொகுதியின் அடிப்படையில்
நுண்செயலியின் வகைகளை எழுதுக.
விடை:
(i) குறைக்கப்பட்ட கட்டளை தொகுதி கணினிகள் (RISC)
(ii) சிக்கலான கட்டளை அமைக்கப்பட்ட கணினிகள் (CISC)
4. PROM மற்றும்
EPROM வேறுபடுத்துக.
(i) நிரல்படுத்தக்கூடிய படிக்க மட்டும்
நினைவகம்.
(ii) சிப் ஒருமுறை நிரல்படுத்தக் கூடியது.
(iii) புற ஊதா ஒளியை செலுத்தி PROMன் உள்ளடக்கத்தை அழித்தும், மீண்டும் வேறு நிரல்களை மறுபடியும் எழுதலாம்.
(iv) மலிவானது.
(i) அழிக்கக்கூடிய நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம்.
(ii) சிப் இனப்பெருக்கம் செய்யக் கூடியது.
(iii) EPROM-ல் தகவல்கள் புறஊதா ஒளிசெலுத்தும் வரை தகவல்களை சேமித்து வைக்கப்படுகின்றது.
(iv) PROM உடன் ஒப்பிடும்போது விலை அதிகம்.
5. கணிப்பொறியில் பயன்படுத்தப்படும்
இடைமுகம் மற்றும் தொடர்பு முகங்களை எழுதுக.
விடை:
(i) தொடர் தொடர்புமுகம்
(ii) இணையான தொடர்புமுகம்
(iii) USB தொடர்பு முகம்
(iv) VGA இணைப்பான்
(v) ஆடியோ பிளக்ஸ்
(vi) PS/2 Port
(vii) உயர் வரையனை பல்லூடக இடைமுகம் (HDMI)
(viii) SCSI Port.
6. CD மற்றும்
DVD வேறுபடுத்துக.
(i) CD-ன் விரிவாக்கம் Compact Disc
(ii) ஒரு சாதாரண CD-ன் கொள்ளளவு 700 MB
(iii) CD- வெள்ளி நிறம் கொண்டது.
(i) DVD-ன் விரிவாக்கம் Digital Versatile Disc
(ii) ஒரு DVD-ன் கொள்ளளவு 4.7 GB
(iii) DVD-தங்கம் மற்றும் வெள்ளி நிறம்
கொண்டது.
7. ஃபிளாஷ் நினைவகம் மற்றம்
EEPROM எவ்வாறு வேறுபடுத்துவாய்?
விடை:
(i) இது வேகமாக அணுகல் நேரத்தை வழங்குகிறது.
(ii) இதில் மெதுவான NAND- வாயில் பயன்படுத்தப்படுகிறது.
(iii) இதில் பிளாக் அடிப்படையில் தரவுகள் அழிக்கப்படும்.
(iv) இதன் கொள்ளளவு 1GB- யிலிருந்து 2 டெராபைட்ஸ் வரையில் கிடைக்கும்.
(i) இது மெதுவான அணுகல் நேரத்தை வழங்குகிறது.
(ii) இதில் வேகமான NOR- வாயில் பயன்படுத்தப்படுகிறது.
(iii) இதில் பைட் அடிப்படையில் தரவுகள் அழிக்கப்படும்.
(iv) இதன் கொள்ளளவு 1KB- யிலிருந்து சில MB வரையில் கிடைக்கும்.
பகுதி - இ
நெடு வினாக்கள்
1. நுண்செயலியின் பண்பு கூறுகளை விளக்குக.
விடை:
நுண்செயலின் பண்பியல்புகள்: ஒரு நுண்செயலின் செயல்பாடு, கீழ்க்காணும் அதன் பண்பியல்களை
அடிப்படையாக கொண்டது.
(i) கடிகார வேகம் (Clock Speed)
(ii) கட்டளை தொகுப்பு (Instruction
Set)
(iii) வேர்டு அளவு (Word Size)
(i) கடிகார வேகம் (Clock
Speed): ஒவ்வொரு நுண்செயலிலும் உள்ளே ஒரு கடிகாரம் உள்ளது. கணிப்பொறியின் ஒவ்வொரு கட்டளையும்
நிறைவேற்றுதலின் வேகத்தை இந்த கடிகாரம் கட்டுப்படுத்துகிறது. இதுவே கடிகாரத்தின் வேகம் எனப்படும். கணிப்பொறியின் வேகத்தை மெகா ஹெர்ட்ஸ்
(Mega Hertz) மற்றும் ஜிகா ஹெர்ட்ஸ் (Giga Hertz) அளவில் அளக்கப்படுகிறது.
(ii) கட்டளைதொகுப்பு
(Instruction Set): ஒருதரவின் மீது செயல்பாடுகளைச் செயல்படுத்துவதற்காக, கணிப்பொறிக்கு கொடுக்கப்படும்
கட்டளைகளே அறிவுறுத்தல் எனப்படும். நுண்செயலியைச் செயல்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட அடிப்படை இயந்திர
நிலை அறிவுறுத்தல் தொகுதிகளைக் கட்டளைத் தொகுப்பு என்கிறோம்.
இந்த கட்டளைகளின் தொகுதி பின்வரும் செயல்களை செயல்படுத்துகிறது.
1. தரவு மாற்றம்
2. எண் கணித செயல்முறைகள்
3. தருக்க செயல்முறைகள்
4. கட்டுப்பாட்டு
நகர்வு
5. உள்ளீடு / வெளியீடு
(iii) வேர்டு அளவு (Word Size): வேர்டின் அளவு என்பது ஒருதடவை செயலி செயற்படுத்தும் பிட்டுகளின் அளவாகும். ஒருவேர்டு அளவு என்பது கணிப்பொறியின்
முதன்மை நினைவகம் (RAM) செயற்படுத்தும் கட்டளையின் அளவையும், நுண்செயலியில் உள்ள ஊசிகளின் (Pins) எண்ணிக்கையை பொருத்ததாகும். மொத்த உள்ளீடு மற்றும் வெளியீடு
ஊசிகளின் மொத்த எண்ணிக்கை நுண்செயலியின் கட்டமைப்பை தீர்மானிக்கிறது.
2. படித்தல்
/ எழுதுதல் (READ
/ WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது?
விளக்குக.
விடை: நினைவக தரவு பதிவேடின்
அளவு 8 பிட்டாக இருந்தால் நினைவகத்தில் இதை8-பிட் அளவிலான ஒருவேர்டுடன் இணைக்கலாம். நினைவக தரவு பதிவேட்டிலிருந்து
ஒரு வேர்டிற்கும் அல்லது வேர்டில் இருந்து நினைவக தரவு பதிவேட்டிற்கும் தரவு பரிமாற்றம்
செய்ய தரவு பாட்டை 8 இணைக் கம்பிகள் கொண்ட கட்டுபாட்டின் (படிக்க அல்லது எழுத அடிப்படையாக
செயல்படுகிறது.
இந்தக் கட்டளை சமிஞ்சை R/W என்று பெயரிடப்பட்டிருக்கும். இதில் 1 என்றால் படிப்பதற்கும் 0 என்றால் எழுதுவதற்கும் உரிய செயல்பாட்டைக்
குறிக்கும். READ செயல்பாட்டிற்கு முன்னர் நினைவக தரவு பதிவேட்டின் உள்ளடக்கத்தையும்
மற்றும் வேர்டின் உள்ளடகத்தையும் காட்டுகிறது. READ செயல்பாட்டிற்கு பிறகு
நினைவக தரவு பதிவேட்டின் உள்ளடக்கத்தையும் மற்றும் வேர்டின் உள்ளடகத்தையும் காட்டுகிறது.
READ செயல்பாடு தரவு (பிட்டுகளை) வேர்டில் இருந்து நினைவக தரவு பதிவேடுகளுக்கு அனுப்பும். WRITE செயல்பாடு தரவு (பிட்டுகளை) நினைவக தரவு பதிவேகளில் இருந்து
வேர்டிற்கு அனுப்பும்.
3. இயக்க நேரத்தின் அடிப்படையில் நினைவக
சாதனங்களை ஏறுவரிசையில் அமைக்கவும்.
விடை: கணிப்பொறி நினைவகம்
என்பது மனித மூளை யைப் போன்றதாகும். கணிப்பொறி நினைவகம்தரவுகளையும் கட்டளைகளையும் சேமித்து வைக்கப் பயன்படுகிறது. நினைவகத்தில் சேமித்து வைக்கப்பட்ட
தரவு மற்றும் கட்டளைகள் இரண்டு வகையில் கையாளப்படுகின்றது (படிக்க/எழுது, அவை தொடர்ச்சியான மற்றும் நேரடி
அணுகல் முறையாகும். தொடர்ச்சியான அணுகல் முறையில் நினைவகம் முதலிலிருந்து கடைசிவரை ஒவ்வொன்றும்
வரிசையாக அணுகும். ஆனால் நேரடி அணுகல் முறையில் நினைவகம் ஒவ்வொன்றாக அணுகுவதற்கு பதிலாக
நேரடியாக அணுகும். பல வகையாக நினைவகச் சாதனங்கள், அதன் கொள்ளளவு, வேகம் மற்றும் விலையின் அடிப்படையில்
வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
4. ROM ன் வகைகளை பற்றி விளக்கமாக
எழுதுக.
விடை:
படிக்க மட்டும் நினைவகம் (ROM) : கணிப்பொறியின் ஒரு சிறப்பு நினைவகம். இது உருவாக்கப்படும் போதே, தரவுகள் பதிவு செய்யப்பட்டு விடுவதால்
அதில் மாற்றம் செய்ய முடியாது. இதில் சேமிக்கப்படும் நிரல்கள் கணினியைத் துவக்கவும் மற்றும் தொடங்கும்
போது செய்ய வேண்டிய செயல்கள் போன்றவை இத்தகைய நினைவகங்களில் வைக்கப்படுகின்றன. ROMல் கணினியைத் துவங்குவதற்கான மிக
முக்கிய நிரல்களைச் சேமித்து வைக்கும். ஒரு முறை தரவுகளை இதில் எழுதிவிட்டால் அதை மாற்றவோ அல்லது அழிக்கவோ
முடியாது. ஆனால் படிக்கமட்டும் முடியும். ROM ன் உள்ளடக்கம் மின்சாரம்
நிறுத்தப்பட்டாலும் அழிவதில்லை. இதனால் ROM யை அழியா நினைவகம் என்று அழைக்கப்படுகிறது.
(i) நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம் (Programmable Read-Only Memory - PROM): நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம், ஒரு அழியா நினைவகம் ஆகும். இதில் தரவுகள் ஒரு முறைமட்டும்
எழுத முடியும். PROM - ல் ஒரு முறை நிரல்களை எழுதிவிட்டால் எப்பொழுதும் அழியாமலிருக்கும். முதன்மை நினைவகம் போன்று அல்லாமல்
கணினியின் செயல்பாடு நிறுத்தப்பட்டாலும். PROM -ன் உள்ளடக்கம் அழியாமல் இருக்கும்.
PROM - ROMல் இருந்து மாறுபட்டதாகும். PROM தயாரிக்கப்படும் பொழுது
ஒரு காலி நினைவகமாக தயாரிக்கப்படும். ஆனால் ROM தயாரிக்கும் பொழுதே அதில் நிரல்கள் சேமிக்கப்படுகின்றது. ஆனால் PROMல் நிரலருக்கு தேவைப்படும் பொழுது
நிரல்களை எடுத்துக் கொள்ளலாம். PROM Burner என்ற மென்பொருளை பயன்படுத்தி PROM சிப்பில் தரவுகள்
எழுதப்படுகின்றது. இந்த வகையான PROM-ன் நிரலாக்கம் PROM-ல் எழுதுதல் என்றழைக்கப்படும்.
(ii) அழிக்கக்கூடிய நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம் (EPROM) Erasable Programmable - Read-Only Memory: அழிக்கக் கூடிய நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம், ஒரு PROM வகையான சிறப்பு நினைவகம் ஆகும். ஆனால் அதில் புற ஊதா ஒளி மூலம் தகவல்கள் அழிக்கப்படுகிறது. EPROM-ல் தகவல்கள் புற ஊதா ஒளி செலுத்தும் வரை தகவல்களைச் சேமித்து வைக்கும். புற ஊதா ஒளியை செலுத்தி PROM-ன் உள்ளடக்கத்தை அழித்தும், மீண்டும் வேறு நிரல்களை மறுபடியும் எழுதலாம்.
PROM ஒரு முறை எழுதப்பட்டபின் அதை அழிக்க முடியாது, அதனால் EPROM, PROM லிருந்து மாறுபட்டது. EPROM பொதுவாக தனியாள் கணினியில்
பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் உற்பத்தியாளர்கள் கணினியை வழங்குமுன் PROM-ன் உள்ளடக்கத்தை மாற்றி, மேம்படுத்தி அல்லது நீக்க வேண்டியவற்றை
அழிக்க முடியும்.
(iii) மின்சாரத்தால் அழிக்கும் மற்றும் நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம் (EEPROM) Electrically Erasable Programmable Read-Only Memory: EEROM ஒரு சிறப்பு PROM வகையைச் சார்ந்த நினைவகம்
ஆகும். இதில் உள்ள தரவுகளை மின்சாரத்தைச் செலுத்தியே அழிக்கலாம். மற்ற PROM வகையைப் போலவே மின்சாரம்
நிறுத்தப்பட்டாலும் தரவுகள் அழியாது. மற்ற ROM வகைகளை ஒப்பிட்டால், EEPROM ஒரு மெதுவாக இயங்கும் நினைவகம் ஆகும்.