தாவரச் சூழ்நிலையியல் - தாவரவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 12th Botany : Chapter 7 : Ecosystem
தாவரவியல் : தாவரச் சூழ்நிலையியல்
பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்
15. ஆழ்மிகு மண்டலத்தின் உற்பத்தித்திறன் குறைவாக இருக்கும். ஏன் ?
* லிம்னெடிக் மண்டலத்திற்கு கீழே காணப்படும் குளத்தின் ஆழமான பகுதி ஆழ்மிகு மண்டலம் எனப்படுகிறது.
* இது பயனுள்ள ஒளி ஊடுருவல் இல்லாத பகுதி
* எனவே இப்பகுதி சார்பூட்ட உயிரிகளையும் மிகக் குறைந்த உற்பத்தியாளர்களை கொண்டுள்ளது.
* இதனால் ஆழ்மிகு மண்டலத்தின் உற்பத்தித் திறன் குறைவாக இருக்கும்.
16. நிகர முதல்நிலை உற்பத்தி திறனைவிட மொத்த முதல் நிலை உற்பத்தித்திறன் மிகவும் திறன் வாய்ந்தது விவாதி.
* மொத்த முதல் நிலை உற்பத்தித்திறன் எனப் படுவது சூழல்மண்டலத்திலுள்ள தற்சார்பு ஊட்ட உயிரிகளால் ஒளிச்சேர்க்கையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மொத்த உணவு ஆற்றல் அல்லது கரிமப்பொருட்கள் அல்லது உயிர்த்திரள் மொத்த முதல்நிலை உற்பத்தித்திறன் எனப்படுகிறது.
* ஆனால் நிகர முதல்நிலை உற்பத்தித்திறன் எனப் படுவது தாவரத்தின் சுவாசச் செயலால் ஏற்படும் இழப்பிற்குப் பிறகு எஞ்சியுள்ள ஆற்றல் விகிதமே நிகர முதல் நிலை உற்பத்தித்திறன் எனப்படுகிறது.
(NPP). NPP = GPP - சுவாச இழப்பு
* எனவே நிகர முதல்நிலை உற்பத்தி திறனைவிட மொத்த முதல்நிலை உற்பத்தித்திறன் மிகவும் திறன் வாய்ந்தது ஆகும்.
17. ஆற்றல் பிரமிட் எப்பொழுது நேரானவை. காரணம் கூறு.
* ஆற்றல் பிரமிட் எப்பொழுது நேரானது ஏனென்றால் ஆற்றல் பிரமிடின் அடிப்பகுதியில் உற்பத்தியாளர்கள் உள்ளதே இதற்கு காரணம்.
* ஆற்றல் பிரமிட்டின் அடிப்பகுதியில் உள்ள உற்பத்தியாளர்கள் முதல் இறுதி மட்டம் வரை யுள்ள அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் ஆற்றல் கடத்தல் படிப்படியாக குறைகிறது.
(1000 J → 100 ஜீல்கள் – 10 ஜீல்கள் → 1 ஜீல்கள் → 0.1 ஜீல்கள்)
* எனவே ஆற்றல் பிரமிட் எப்பொழுதும் நேரானது.
18. சூழல் மண்டலத்திலிருந்து அனைத்து உற்பத்தியாளர்களையும் நீக்கிவிட்டால் என்ன நடைபெறும்?
* சூழல் மண்டலத்திலிருந்து அனைத்து உற்பத்தி யாளர்களையும் நீக்கும் போது மொத்த உணவு வலையும் (Food Web) பாதிக்கப்படுகிறது.
* முதல் நிலை நுகர்வோர் (அ) தாவர உண்ணிகள் தங்களின் உணவான உற்பத்தியாளர்கள் இல்லா மையால் இறந்து போக நேரிடும்.
* அதனால் உணவு வலையில் உள்ள மற்ற விலங்குகளும் தங்களுக்கு உணவு இல்லாமல் இறக்க நேரிடும்.
* சூழ்நிலை மண்டலத்தின் அழிந்து போன நுகர் வோர் எண்ணிக்கை அழிந்துபோன உற்பத்தி யாளர்களுக்கு நேர்விகிதத்தில் இருக்கும். வளிமண்டலத்தின் CO2 மற்றும் O2 சுழற்ச்சி சம நிலையில் இருக்க உற்பத்தியாளர்களே காரணம்.
* இந்த உற்பத்தியாளர்களை நீக்கிவிட்டால் CO2 மற்றும் O2 சுழற்ச்சி சமநிலை அற்றதாக மாறிவிடும்.
* இதனால் மூச்சுக் காற்றான ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
19. கீழ்கண்ட தரவுகளைக் கொண்டு உணவுச் சங்கிலியை உண்டாக்குக.
பருந்து, தாவரங்கள், தவளை, பாம்பு, வெட்டுக்கிளி
* உற்பத்தியாளர்களிடமிருந்து ஆற்றல் இறுதி உண்ணிகள் வரை கடத்தப்படுவது உணவுச் சங்கிலி என்று அழைக்கப்படுகிறது.
* இந்த உணவுச் சங்கிலியில் ஆற்றல் உற்பத்தியாளர்களிடமிருந்து (தாவரங்கள்) → முதல்நிலை நுகர்வோர்கள் (வெட்டுக்கிளி) → இரண்டாம் நிலை நுகர்வோர்கள் (தவளை) → மூன்றாம் நிலை நுகர்வோர் (பாம்பு) → கொன்று தின்பவை (பருந்து) முதலியவற்றிற்கு கடத்தப்படுகிறது.
* இது நேர்க்கோட்டில் அமைந்த பின்னல் இணைப்பை வெளிப்படுத்துகிறது.
20. அனைத்து சூழல் மண்டலங்களிலும் பொதுவாக காணப்படும் உணவுச் சங்கிலியின் பெயரை கண்டறிந்து விளக்குக. அதன் முக்கியத்துவத்தை எழுதுக.
மட்குப்பொருள் (சிதைவுக்கூளம்) உணவுச் சங்கிலி அனைத்து சூழல் மண்டலத்திற்கும் பொதுவானது.
மட்குப்பொருள் உணவுச்சங்கிலி :
* இந்த உணவுச்சங்கிலி இறந்த கரிமப்பொருட்களி லிருந்து தொடங்குகிறது. இது முக்கிய ஆற்றல் மூலமாக உள்ளது.
* அதிகப்படியான கரிமப்பொருள்கள் இறந்த தாவரங்கள் விலங்குகள் மற்றும் அவற்றின் கழிவு பொருட்களிலிருந்து பெறப்படுகிறது.
* இறந்த உயிரிகளின் கரிமப்பொருட்களிலிருந்து ஆற்றல் கடத்தப்படுவது வரிசையாக அமைந்த மண்வாழ் உயிரினங்களான மட்குண்ணிகள் சிறிய ஊண்உண்ணிகள் - பெரிய (இறுதி) ஊண் உண்ணிகள் முறையே உண்ணுதலாலும் , உண்ண ப்படுதலாலும் நிகழ்கிறது.
முக்கியத்துவம் :
* மட்குப்பொருட்கள் (இறந்த தாவர விலங்குகள் மற்றும் அதன் கழிவுப்பொருட்கள்) மட்குண்ணி களால் எளிய கரிமப் பொருட்களாக மாற்றப் படுகிறது.
* மேலும்கரிமப்பொருட்கள் மறுசுழற்சி மற்றும் அதன் சமநிலையை தக்கவைக்கவும் சூழ்நிலை மண்டலத்தில் இது முக்கியமான உணவு சங்கிலி யாகும்.
21. ஒரு குறிப்பிட்ட சூழல் மண்டலத்தின் பிரமிட் வடிவமானது எப்பொழுதும் மாறுபட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. அதனை எடுத்துக் காட்டுடன் விளக்குக.
T1 - உற்பத்தியாளர்கள் T2 - தாவர உண்ணிகள் | T3 - இரண்டாம் நிலை நுகர்வோர்கள் | T4 - மூன்றாம்நிலை நுகர்வோர்கள் -
பல்வேறு வகையான சூழல்மண்டலங்களில் எண்ணிக்கை பிரமிட்
(ஓர் அலகு இடத்தில் காணப்படும் உயிரினங்கள்)
நேரானது - அ) புல்வெளி சூழல் மண்டலம், ஆ) குளச் சூழல் மண்டலம் கதிர் வடிவம் - இ) வனச் சூழல் மண்டலம், தலைகீழானது - ஈ) ஒட்டுண்ணி சூழல் மண்டலம்
i) வனச் சூழல் மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட் சற்று வேறுபட்ட வடிவத்தை கொண்டிருக்கிறது. ஏனென்றால்,
ii) பிரமிடின் அடிப்பகுதி (T1 உற்பத்தியாளர்) குறைவான எண்ணிக்கையிலான பெரிய மரங்களை கொண்டுள்ளது.
iii) (தாவர உண்ணிகள் T2) பழம் உண்ணும் பறவைகள், யானை, மான் உற்பத்தியாளர்களை விட அதிக எண்ணிக்கையில் இரண்டாம் ஊட்ட மட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
iv) இறுதி ஊட்ட மட்டத்தில் (T4) காணப்படும் மூன்றாம் நிலை நுகர்வோர்கள் (சிங்கம்) மூன்றாம் ஊட்ட மட்டத்தில் (T3) உள்ள இரண்டாம்நிலை நுகர்வோர்களை விட (நரி மற்றும் பாம்பு) குறைவான எண்ணிக்கையை கொண்டுள்ளது.
v) எனவே வனச்சூழல் மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட் கதிரிழை வடிவத்தில் தோன்றுகிறது.
22. பொதுவாக மனிதனின் செயல்பாடுகள் சூழல் மண்டலத்திற்கு எதிராகவே உள்ளது. ஒரு மாணவனாக நீ சூழல் மண்டல பாதுகாப்பிற்கு எவ்வாறு உதவுவாய்?
சூழல் மண்டல பாதுகாப்பிற்கு அன்றாட வாழ்வில்
நாம் கீழ்க்கண்டவற்றை பின்பற்ற வேண்டும்.
* சூழல் நட்புடையப் பொருட்களை மட்டுமே வாங்குதல், பயன்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல்.
* அதிக மரங்களை வளர்த்தல்.
* நீடித்த நிலைத்த பண்ணைப் பொருட்களைத் தேர்ந்தெடுத்தல். (காய்கறிகள், பழங்கள், கீரைகள் முதலியன.
* இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்தல்.
* கழிவுகளை மறுசுழற்சி செய்தல் மற்றும் கழிவு உற்பத்தி அளவைக் குறைத்தல்.
* நீர் மற்றும் மின்சார நுகர்வை குறைத்தல்.
* வீட்டில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைக் குறைத்தல் அல்லது தவிர்த்தல்.
* உங்கள் மகிழுந்து மற்றும் வாகனங்களை சரியாக பராமரித்தல்(கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கு)
* உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இடையே சூழல்மண்டலம் பற்றிய விழிப்புணர்வு, அதன் பாதுகாப்பு பற்றி கல்வி அறிவை அளித்தல் மற்றும் இப்பிரச்சினையைக் குறைக்க தீர்வு காணல்.
23. பொதுவாக கோடைக்காலங்களில் இயற்கையில் ஏற்படும் தீயினால் காடுகள் பாதிக்கப்படுகிறது. இப்பகுதி வழிமுறை வளர்ச்சி என்ற நிகழ்வின் மூலம் ஒரு காலத்தில் படிப்படியாக தானே புதுப்பித்துக் கொள்கிறது. அந்த வழிமுறை வளர்ச்சியின் வகையைக் கண்டறிந்து விளக்குக்.
இரண்டாம் நிலை வழிமுறை வளர்ச்சி.
ஒரு இடத்திலுள்ள ஏற்கனவே வளர்ந்த குழுமம் சில இயற்கை இடையூறுகளால் (தீ, வெள்ளம், மனித செயல்கள்) அழிக்கப்பட்டு அதே இடத்தில் ஒரு தாவர குழுமம் வளர்ச்சி அடைவதற்கு இரண்டாம் நிலை வழிமுறை வளர்ச்சி என்று பெயர்.
(எ.கா) அழிக்கப்பட்ட காடுகள் காலப்போக்கில் சிறு செடிகளால் ஆக்கிரமிக்கப்படலாம்.
1. பாதிக்கப்பட்ட நிலங்களில் ஆக்கிரமிக்கப்படலாம்
2. புறக்காரணிகளால் மட்டுமே தொடங்கி வைக்கப்படுகிறது
3. ஏற்கனவே மண் உள்ள இடங்களில் மட்டுமே இது நிகழும்.
4. முன்னோடி தாவரங்களின் உட்சூழலிருந்து உருவாக்கப்படுகின்றன.
5. இது முடிவடைய குறைந்த காலத்தையே (முதல் நிலை வழிமுறை வளர்ச்சியை விட) எடுத்துக் கொள்ளும்.
இரண்டாம்நிலை வழிமுறை வளர்ச்சியின் வரிபட உருவமைப்பு
24. கீழ்கண்ட விவரங்களைக் கொண்டு ஒரு பிரமிட் வரைந்து சுருக்கமாக விளக்குக.
உயிரினங்களின் எண்ணிக்கை கொடுக்கப் பட்டுள்ளது - பருந்து - 50, தாவரங்கள் - 1000, முயல் மற்றும் எலி - 250 + 250, பாம்பு மற்றும் ஓணான் 100 + 50.
* ஒரு சூழல் மண்டலத்தின் அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் காணப்படும் கரிமப்பொருட்களின் (உயிரித்திரள்) அளவை குறிக்கும் திட்ட வரை படம் உயிரித்திரள் பிரமிட் என்று அழைக்கப்படுகிறது.
* புல்வெளி மற்றும் வனச்சூழல் மண்டலத்தில் உயிரிதிரளின் அளவு அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் உற்பத்தியாளர்களில் தொடங்கி இறுதி உண்ணிகள் (மூன்றாம் நிலை நுகர்வோர்) வரை படிப்படியாகக் குறைகிறது.
* எனவே இந்த இரண்டு சூழல்மண்டலங்களிலும் உயிரித்திரள் பிரமிட் நேரான பிரமிட்டாக உள்ளது.
25. வழிமுறை வளர்ச்சியின் பல்வேறு நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முறைப்படி வரிசைப்படுத்தி, வழிமுறை வளர்ச்சியின் வகையைக் கண்டறிந்து விளக்குக.
நாணற் சதுப்பு நிலை, தாவர மிதவை உயிரிநிலை புதர்செடி நிலை, நீருள் மூழ்கிய தாவர நிலை காடுநிலை, நீருள் மூழ்கி மிதக்கும் நிலை, சதுப்பு புல்வெளி நிலை.
* தாவர மிதவை உயிரிநிலை : (Phytoplankton state) - நீலப்பசும்பாசிகள், பாக்டீரியங்கள், சயனோ பாக்டீரியங்கள், பசும்பாசிகள், டயட்டம் போன்ற முன்னோடி குழுமங்களைக் கொண்ட வழிமுறை வளர்ச்சியின் முதல்நிலை இதுவாகும்.
* இந்த உயிரினங்களின் குடிபெயர்வு, வாழ்க்கை செயல்முறைகள், இறப்பின் மூலமாக குளத்தின் கரிம பொருளின் அளவு மற்றும் ஊட்டச்சத்து செறிவடைகிறது. இது வளர்ச்சியின் அடுத்த படிநிலை வளர்ச்சிக்கு உதவுகிறது.
* நீருள் மூழ்கிய தாவர நிலை : (Submerged plant stage) - மிதவை உயிரிகளின் இறப்பு மற்றும் மட்குதலின் விளைவாலும், மழைநீர் மூலம் நிலத்திலிருந்து மண் துகள்கள் அடித்து வரப் படுவதாலும், குளத்தின் அடிப்பகுதியில் ஒரு தளர்வான மண் உருவாக வழி வகுக்கிறது. எனவே வேருன்றி நீருள் மூழ்கி வாழும் நீர்வாழ்த் தாவரங்கள் புதிய வாழ் தளத்தில் தோன்ற ஆரம்பிக்கிறது. (எ.கா) : கேரா, யூட்ரிகுலேரியா
* தாவரங்களின் இறப்பு மற்றும் சிதைவு குளத்தின் அடித்தளத்தை உயர்த்துவதால் குளம் ஆழமற்ற தாக மாறுகிறது. எனவே இந்த வாழிடம் நீருள் மூழ்கி மிதக்கும் நிலையிலுள்ள வேறுவகையான தாவரங்கள் குடியேறுவதற்கு ஏதுவாக அமைகிறது
* நீருள் மூழ்கி மிதக்கும் நிலை (Submerged free floating stage) - இந்த நிலையில் குளத்தின் ஆாம் கிட்டத்தட்ட 2-5 அடியாக இருக்கும். எனவே, வேருன்றிய நீர்வாழ்த் தாவரங்கள் மற்றும் பெரிய இலைகளுடன் கூடிய மிதக்கும் தாவரங்கள் குளத்தில் குடியேற ஆரம்பிக்கின்றன. எ.கா வேரூன்றிய மிதக்கும் தாவரங்களான தாமரை, அல்லி மற்றும் ட்ராபா.
* இந்த தாவரங்களின் இறப்பு மற்றும் சிதைத்தல் மூலம் குளத்தின் ஆழம் மேலும் குறைகிறது. இதன் காரணமாக மிதக்கும் தாவரங்கள் படிப்படியாக பிற இனங்களால் மாற்றி அமைக்கப் படுவதால் புதிய நிலை ஒன்று உருவாகிறது.
* நாணற் சதுப்பு நிலை : (Reed-swamp stage) - இது நீர்-நில வாழ்நிலை எனவும் அழைக்கப்படு கின்றது. இந்த நிலையில் வேருன்றிய மிதக்கும் தாவரங்கள் பிற தாவரங்களால் மாற்றியமைக்கப் படுகிறது. இது நீர் சூழ் நிலையிலும், நில சூழ்நிலையிலும் வெற்றிகரமாக வாழக்கூடியது. எடுத்துக்காட்டு : டைஃபா.
* சதுப்பு புல்வெளி நிலை (Marsh meadow stage) - நீரின் அளவு குறைவதால், குளத்தின் ஆழம் குறையும்பொழுது சைப்பரேசி மற்றும் போயேசி இவற்றின் அதிகம் கிளைத்த வேர்களின் உதவியால் பாய் விரித்தது போன்ற தாவரத் தொகுப்பு ஒன்று உருவாகிறது.
* இது அதிக அளவு நீர் உறிஞ்சுவதற்கும், நீர் இழப்பிற்கும் வழிவகுக்கிறது. இந்த நிலையின் முடிவில் மண் வறண்டு சதுப்புநிலத் தாவரங்கள் படிப்படியாக மறைந்து புதர்ச்செடிகள் குடிபுக வழி வகுக்கிறது.
* புதர்ச்செடி நிலை : (Shrub stage) - சதுப்பு நிலத் தாவரங்கள் தொடர்ந்து மறைவதால், மண் வறண்டு போகிறது. எனவே இந்த பகுதிகளில் நிலவாழ்த் தாவரங்களான புதர்ச்செடிகள்
(சாலிக்ஸ் மற்றும் கார்னஸ்) ஆகியவை படையெடுக்கின்றன. இந்த தாவரங்கள் அதிக அளவிலான நீரை உறிஞ்சி வறண்ட வாழிடத்தை உருவாக்குகின்றன. அத்துடன் செழுமையான நுண்ணுயிரிகளுடன் கூடிய கரிம மட்கு சேகர மடைவதால் மண்ணில் கனிமவளம் - அதிகரிக்கிறது. இறுதியில் அப்பகுதி புதிய மர இனங்களின் வருகைக்கு சாதகமாகிறது.
* காடுநிலை : (Forest stage) - நீர் வழிமுறை வளர்ச்சியின் உச்சநிலை குழுமம் இதுவாகும். இந் நிலையின்போது பல்வேறு வகையான மரங்கள் படையெடுப்பதோடு ஏதாவது ஒருவகையான தாவரத்தொகுப்பு உருவாகிறது.