தாவரச் சூழ்நிலையியல் - தாவரவியல் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக | 12th Botany : Chapter 7 : Ecosystem
தாவரவியல் : தாவரச் சூழ்நிலையியல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
மதிப்பீடு
1. கீழ்க்கண்டவற்றில் எது சூழல் மண்டலத்தின் உயிரற்ற கூறு அல்ல?
அ) பாக்டீரியங்கள்
ஆ) கருமையான படிக உருவமற்ற மட்கு
இ) தனிமக்கூறுகள்
ஈ) கனிமக்கூறுகள்
விடை : ஈ) கனிமக்கூறுகள்
2. கீழ்கண்டவற்றில் எது/ எவை இயற்கை சூழல் மண்டலம் அல்ல?
அ) வனச் சூழல் மண்டலம்
ஆ) நெல்வயல்
இ) புல்வெளி சூழல்மண்டலம்
ஈ) பாலைவன சூழல்மண்டலம்
விடை : ஆ) நெல்வயல்
3. குளம் ஒரு வகையான
அ) வனச் சூழல்மண்டலம்
ஆ) புல்வெளி சூழல்மண்டலம்
இ) கடல் சூழல்மண்டலம்
ஈ) நன்னீர் சூழல் மண்டலம்
விடை : ஈ) நன்னீர் சூழல்மண்டலம்
4. குளச் சூழல்மண்டலம் ஒரு
அ) தன்னிறைவில்லா மற்றும் தன்னைத்தானே சரி செய்துக்கொள்ளும் தகுதி பெற்றது
ஆ) பகுதி தன்னிறைவு மற்றும் தன்னைத்தானே சரி செய்துக்கொள்ளும்
இ) தன்னிறைவு மற்றும் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் தகுதி பெற்றதல்ல
ஈ) தன்னிறைவு மற்றும் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் தகுதி பெற்றவை
விடை : ஈ) தன்னிறைவு மற்றும் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் தகுதி பெற்றவை
5. குளச் சூழல் மண்டலத்தின் ஆழ்மிகு மண்டலம் முக்கியமாக சார்பூட்ட உயிரிகளை கொண்டுள்ளது ஏனென்றால்
அ) மிகை ஒளி ஊடுருவல் தன்மை
ஆ) பயனுள்ள ஒளி ஊடுருவல் இல்லை
இ) ஒளி ஊடுருவல் இல்லை
ஈ) அ மற்றும் ஆ
விடை : ஆ) பயனுள்ள ஒளி ஊடுருவல் இல்லை
6. தாவரங்களின் 'ஒளிச்சேர்க்கைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் சூரிய ஒளி அளவு
அ) 2 - 8%
ஆ) 2-10%
இ) 3 - 10%
ஈ) 2 -9% |
விடை : ஆ) 2-10%
7. கீழ்கண்ட எந்த சூழல்மண்டலம் அதிகப்படியான முதல்நிலை உற்பத்தித்திறனைக் கொண்டுள்ளது?
அ) குளச் சூழல்மண்டலம்
ஆ) ஏரி சூழல்மண்டலம்
இ) புல்வெளி சூழல் மண்டலம்
ஈ) வனச் சூழல் மண்ட லம்
விடை : ஈ) வனச் சூழல்மண்டலம்
8. சூழல்மண்டலம் கொண்டிருப்பது
அ) சிதைப்பவைகள்
ஆ) உற்பத்தியாளர்கள்
இ) நுகர்வோர்கள்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை : ஈ) மேற்கூறிய அனைத்தும்
9. எந்த ஒன்று, உணவுச்சங்கிலியின் இறங்கு வரிசை ஆகும்.
அ) உற்பத்தியாளர்கள் → இரண்டாம் நிலை நுகர்வோர்கள் → முதல் நிலை நுகர்வோர்கள் → மூன்றாம் நிலை நுகர்வோர்கள்
ஆ) மூன்றாம் நிலை நுகர்வோர்கள் → முதல் நிலை நுகர்வோர்கள் → இரண்டாம் நிலை நுகர்வோர்கள் → உற்பத்தியாளர்கள்
இ) மூன்றாம் நிலை நுகர்வோர்கள் → இரண்டாம் நிலை நுகர்வோர்கள் → முதல் நிலை நுகர்வோர்கள் → உற்பத்தியாளர்கள்
ஈ) மூன்றாம் நிலை நுகர்வோர்கள் → உற்பத்தியாளர்கள் → முதல் நிலை நுகர்வோர்கள் → இரண்டாம் நிலை நுகர்வோர்கள்
விடை : இ) மூன்றாம் நிலை நுகர்வோர்கள் → இரண்டாம் நிலை நுகர்வோர்கள் → முதல்நிலை நுகர்வோர்கள் → உற்பத்தியாளர்கள்
10. உணவு வலையின் முக்கியத்துவம் ?
அ) இது இயற்கையின் சமநிலையை தக்க வைப்பதில்லை .
ஆ) இது ஆற்றல் பரிமாற்றங்களை வெளிப்படுத்துகிறது
இ) சிற்றினங்களுக்கிடையே நிகழும் இடைவிளைவை விளக்குகிறது.
ஈ) ஆ மற்றும் இ
விடை : ஈ) ஆ மற்றும் இ
11. கீழ்கண்ட வரைபடம் குறிப்பது?
அ) ஒரு புல்வெளி சூழல் மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட்
ஆ) ஒரு குளச் சூழல் மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட்
இ) ஒரு வனச் சூழல் மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட்
ஈ) ஒரு குளச் சூழல் மண்டலத்தின் உயிரித்திரள்
பிரமிட் விடை : ஈ) ஒரு குளச் சூழல் மண்டலத்தின் உயிரித்திரள் பிரமிட்
12. கீழ்கண்டவற்றில் எது சிதைவு செயல்முறைகள்
அல்ல.
அ) வடிதல்
ஆ) சிதைமாற்றம்
இ) வளர்மாற்றம்
ஈ) துணுக்காதல்
விடை : இ) வளர்மாற்றம்
13. கீழ்கண்டவற்றுள் எது படிம சுழற்சியல்ல
அ) நைட்ரஜன் சுழற்சி
ஆ) பாஸ்பரஸ் சுழற்சி
இ) சல்பர் சுழற்சி
ஈ) கால்சியம் சுழற்சி
விடை : அ) நைட்ரஜன் சுழற்சி
14. கீழ்கண்டவைகளில் எது சூழல் மண்டல சேவைகளில் ஒழுங்குபடுத்தும் சேவையல்ல
i) மரபணு வளங்கள்
ii) பொழுதுபோக்கு மற்றும் அழகுசார் மதிப்புகள்
iii) ஊடுருவல் எதிர்ப்பு
iv) காலநிலை கட்டுப்பாடு
அ) i மற்றும் iii
ஆ) ii மற்றும் iv
இ) i மற்றும் ii
ஈ) i மற்றும் iv
விடை : இ) i மற்றும் ii