Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி

அரசாங்கங்களின் வகைகள் | குடிமையியல் | சமூக அறிவியல் - கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி | 9th Social Science : Civics: Forms of Government

   Posted On :  10.09.2023 10:52 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள்

கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.


1. அரசியலமைப்பின் வகைகளைப் பட்டியலிடுக.

விடை:

எழுதப்பட்ட அரசியலமைப்பு

எழுதப்படாத அரசியலமைப்பு

நெகிழும் தன்மையுடைய அரசியலமைப்பு

நெகிழும் தன்மையற்ற அரசியலமைப்பு

 

2. கூட்டாட்சி முறையின் நிறைகள் யாவை?

விடை:

உள்ளூர் சுய ஆட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையே சமரசம் ஏற்படுத்துதல்.

மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, நிர்வாகத் திறன்கள் மேம்பட வழிவகுக்கிறது. |

மிகப்பெரிய நாடுகள் தோன்றுவதற்கு வழி செய்கிறது.

அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படுவதால் மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கைத் தடுக்கிறது.

மிகப்பெரிய நாடுகளுக்குப் பொருத்தமானது. -

பொருளாதார மற்றும் பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு நன்மை அளிக்கிறது.

 

3. ஒற்றையாட்சி முறைக்கும் கூட்டாட்சி முறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.

விடை:

ஒற்றையாட்சி முறை:

1 ஒரேயொரு அரசு அல்லது துணைக் குழுக்கள்.

2 பெரும்பாலும் ஒரே குடியுரிமை.

3 துணைக் குழுக்கள் தன்னிச்சையாகச் செயல்பட இயலாது.

4 அதிகாரப் பகிர்வு இல்லை .

5 மையப்படுத்தப்பட்ட அதிகாரம்.

கூட்டாட்சி முறை:

1 இரண்டு நிலையில் அரசாங்கம்

2 இரட்டைக் குடியுரிமை

3 கூட்டாட்சியின் குழுக்கள் மத்திய அரசுக்கு உட்பட் டவை.

4 அதிகாரப் பகிர்வு உண்டு .

5 அதிகாரப் பரவல்

Tags : Forms of Government | Civics | Social Science அரசாங்கங்களின் வகைகள் | குடிமையியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Civics: Forms of Government : Answers the following Forms of Government | Civics | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள் : கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி - அரசாங்கங்களின் வகைகள் | குடிமையியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள்