அரசாங்கங்களின் வகைகள் | குடிமையியல் | சமூக அறிவியல் - வேறுபடுத்துக | 9th Social Science : Civics: Forms of Government

   Posted On :  10.09.2023 10:48 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள்

வேறுபடுத்துக

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : வேறுபடுத்துக.

III. வேறுபடுத்துக.


1. ஒற்றையாட்சி முறை மற்றும் கூட்டாட்சி முறை.

விடை:

ஒற்றையாட்சி முறை:

1 ஒற்றையாட்சி முறை என்பது இறை யாண்மை மிக்க ஓர் அரசு ஒரே நிர்வாகமாக இருந்து ஆட்சி செய்வதாகும்.

2 மத்திய அரசு அதிகாரம் மிக்கதாகும். மாநிலங்கள் மத்திய அரசினால்

கொடுக்கப்பட்ட அதிகாரங்களை மட்டுமே செயல்படுத்தமுடியும்.

3 இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் இலங்கை ஆகியவை

எடுத்துக்காட்டுகளாகும்.

4 அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் மையப்படுத்தப்படுகின்றன.

கூட்டாட்சி முறை:

1 கூட்டாட்சியில் தேசிய அரசும் பிராந்திய அரசுகளும் தங்களது அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும்.

2 தேசிய அரசும், பிராந்திய அரசுகளும் தங்களது அதிகாரங்களை சுதந்திரமாக செயல்படுத்த முடியும்

3 அமெரிக்க ஐக்கிய நாடுகள், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, ரஷ்யா ஆகியவை எடுத்துக்காட்டுகளாகும்.

4. அதிகாரங்கள் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன.

 

2. நாடாளுமன்ற ஆட்சிமுறை மற்றும் அதிபர் மக்களாட்சி.

விடை:

நாடாளுமன்ற ஆட்சிமுறை:

1 நாடாளுமன்ற ஆட்சி முறையில் சட்ட மன்றத்தில் கொள்கைகள் மற்றும் செயல் களுக்கு நிர்வாகத் துறை பொறுப்பேற்கிறது.

2 நாடாளுமன்ற ஆட்சி முறை அமைச்சரவை அரசாங்கம் என்று அழைக்கப்படுகிறது.

3 பிரிட்டன், ஜப்பான், கனடா, இந்தியா போன்ற நாடுகளில் நாடாளுமன்ற ஆட்சி முறை காணப்படுகிறது.

அதிபர் மக்களாட்சி:

1 அதிபர் மக்களாட்சி முறையில் சட்டமன்ற த்தில் கொள்கைகள் மற்றும் செயல்களுக்கு நிர்வாகத்துறை பொறுப்பேற்காது.

2 சட்டமன்றத்திற்குப் பொறுப்பில்லாததாகவும், நாடாளுமன்றம் அற்றதாகவும் உள்ளது.

3 அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இலங்கை போன்ற நாடுகளில் அதிபர் மக்களாட்சி முறை காணப்படுகிறது.

Tags : Forms of Government | Civics | Social Science அரசாங்கங்களின் வகைகள் | குடிமையியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Civics: Forms of Government : Distinguish between Forms of Government | Civics | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள் : வேறுபடுத்துக - அரசாங்கங்களின் வகைகள் | குடிமையியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள்