Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | அரசாங்கங்களின் வகைகள்

பொருள், வகைகள் - அரசாங்கங்களின் வகைகள் | 9th Social Science : Civics: Forms of Government

   Posted On :  10.09.2023 11:32 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள்

அரசாங்கங்களின் வகைகள்

ஒரு அரசின் நிர்வாக செயல்பாடுகளை அரசாங்கம் குறிக்கிறது. அரசு என்பது, பொதுமக்கள் சார்ந்த, பெரு நிறுவனங்கள் மதம் சார்ந்த கல்வி மற்றும் பிற குழுக்களுக்கு சட்டங்கள் இயற்றி அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் படைத்த ஓர் அமைப்பாகும்.

அலகு 4

அரசாங்கங்களின் வகைகள்


 

கற்றல் நோக்கங்கள்

அரசாங்கங்களின் வகைகளை அறிதல்

 அரசாங்கங்களின் பல்வேறு அமைப்புகளைப் புரிந்து கொள்ளுதல்

பல்வேறு அரசாங்க அமைப்புகளின் நிறை, குறைகளைக் கற்றல்

ஒற்றையாட்சி, கூட்டாட்சி, அதிபர் மக்களாட்சி மற்றும் நாடாளுமன்ற ஆட்சி ஆகியவற்றின் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளுதல்

 

அறிமுகம்

ஒரு அரசாங்கத்தின் முக்கிய நிறுவனம் அரசு ஆகும். இது அரசியல் மற்றும் நிர்வாக குழுக்களைச் சார்ந்த பல உறுப்பினர்களை உள்ளடக்கியதாகும். மக்களுக்கான பொதுநலன் சார்ந்த அரசின் கொள்கைகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்குமான கருவியாக இது திகழ்கிறது. அரசு ஓர் மாநிலத்தின் விருப்பத்தை உணர்ந்து அதனை வெளிப்படுத்தும் விதமாக திட்டங்களை அமைக்கிறது. இந்திய அரசியலமைப்பு மற்றும் சட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற, நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரங்களை அரசு செயல்படுத்துகிறது. அரசாங்கத்தின் உறுப்புகளாகச் சட்டமன்றம், நிர்வாகத் துறை மற்றும் நீதித்துறை அமைந்துள்ளன. இவ்வுறுப்புகள் அரசின் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துகின்றன. ஒற்றை ஆட்சிமுறை, கூட்டாட்சி ஆட்சி முறை, நாடாளுமன்ற ஆட்சிமுறை மற்றும் ஜனாதிபதி ஆட்சி முறை என வகைப்படுத்தப்படுகின்றன.


 

 பொருள்

ஒரு அரசின் நிர்வாக செயல்பாடுகளை அரசாங்கம் குறிக்கிறது. அரசு என்பது, பொதுமக்கள் சார்ந்த, பெரு நிறுவனங்கள் மதம் சார்ந்த கல்வி மற்றும் பிற குழுக்களுக்கு சட்டங்கள் இயற்றி அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் படைத்த ஓர் அமைப்பாகும்.

மிகவும் பழமையான அரசாங்கம் எது?

ஐக்கிய பேரரசு காணப்பட்ட முடியாட்சி அமைப்பே மிகவும் பழமையான அரசாங்கம் ஆகும். முடியாட்சியில் அரசரோ அல்லது மகராணியோ அரசாங்கத்தின் தலைவராவார் ஆங்கில முடியாட்சி என்பது அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சி ஆகும். அதாவது அரசின் தலைமையாகவே இருந்தாலும் சட்டமியற்றும் வல்லமை தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திடமே உள்ளது

Tags : Meaning, Types பொருள், வகைகள்.
9th Social Science : Civics: Forms of Government : Forms of Government Meaning, Types in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள் : அரசாங்கங்களின் வகைகள் - பொருள், வகைகள் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள்