Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | அரசியலமைப்பின் வகைகள்

நிறைகள், குறைகள், அம்சங்கள் | அரசாங்கங்களின் வகைகள் - அரசியலமைப்பின் வகைகள் | 9th Social Science : Civics: Forms of Government

   Posted On :  10.09.2023 11:35 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள்

அரசியலமைப்பின் வகைகள்

1. ஒற்றை ஆட்சி முறை, 2. கூட்டாட்சி முறை ஆட்சி, 3. நாடாளுமன்ற ஆட்சி முறை, 4. அதிபர் மக்காளட்சி முறை

அரசியலமைப்பின் வகைகள்



 

1ஒற்றை ஆட்சி முறை

ஒற்றை ஆட்சி முறை என்பது இறையாண்மை மிக்க ஓர் அரசு ஒரே நிறுவனமாக இருந்து ஆட்சி செய்வதாகும்மத்திய அரசு அதிகாரம் மிக்கதாகும்நிர்வாக அமைப்புகள் மத்திய அரசினால் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களை மட்டுமே செயல்படுத்தும்.

இங்கிலாந்துபிரான்ஸ்ஜப்பான்மற்றும் இலங்கை ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்.

அரசு என்னும் பதம்பழைய பிரெஞ்சு வார்த்தையான கவர்னர் (governer) என்பதிலிருந்தும் இயக்குஆட்சி செய்வழி நடத்துஆள் என்று பொருள் தரும் லத்தீன் வார்த்தையான குபர்னர் (gubernare) என்பதிலிருந்தும் பெறப்பட்டது.

ஒற்றையாட்சி முறையில் அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் மையப்படுத்தப்படுகின்றனஆனால் கூட்டாட்சி அரசு முறையில் அதிகாரமானதுமத்திய அரசு மற்றும் அதன் அமைப்புப் பிரிவுகளுக்குள்ளும் பகிர்ந்தளிக்கப்படுகிறதுஒற்றையாட்சி முறை அரசியலமைப்பிலும் அதிகாரப் பரவலாக்கம் இருக்கக்கூடும்ஆனாலும் அதனைக் கூட்டாட்சி முறை எனக் கொள்ளலாகாது

ஒற்றை ஆட்சி முறையின் நிறைகள்

●  சிறு நாடுகளுக்குப் பொருத்தமானது

●  அதிகாரம் மற்றும் பொறுப்புகளுக்கு இடையில் மோதல்கள் இருப்பதில்லை .

●  ஒற்றை ஆட்சி முறை உடனடியாக முடிவெடுத்துத் துரிதமாகச் செயல்படுகிறது

●  ஒற்றை ஆட்சி குறைந்த செலவுடையது.

●  அரசியலமைப்பு திருத்தங்களை எளிதில் மேற்கொள்ள இயலும்.

●  ஒற்றுமைசீரான சட்டம்கொள்கை மற்றும் நிர்வாகத்தினை உள்ளடக்கியது.

குறைகள்

●   மிகப்பெரிய நாடுகளுக்குப் பொருத்தமற்றது.

●  மத்திய அரசு பலதரப்பட்ட பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்அதனால் நிர்வாக தாமதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

●  மத்திய அரசு உள்ளூர் பிரச்சினைகள் சார்ந்தும் உள்ளூர் மக்கள் நலனிலும் உள்ளூர் முயற்சிகளிலும் அக்கறை காட்டாது.

●  அதிகமான அதிகாரங்கள் குவிக்கப்படுவதால் மத்திய அரசின் சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கவும் கூடும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒற்றை ஆட்சி முறையின் அம்சங்கள்

●   பலமான மத்திய அரசு

●    மாநில அரசின் மீது மத்திய அரசின் ஆளுமை

●   ஒற்றை அரசமைப்பு

●   அரசியலமைப்பின் நெகிழ்வுத்தன்மை

●   மாநிலங்களின் சமமற்ற பிரதிநிதித்துவம்.

●   அவசரகால ஏற்பாடுகள்

●    ஒற்றைக் குடியுரிமை

●   ஒருங்கிணைக்கப்பட்ட ஒற்றை நீதித்துறை

●   அகில இந்தியச் சேவைகள்

●    ஆளுநர்கள் மத்திய அரசினால் நியமிக்கப்படுதல்.

 

2கூட்டாட்சி முறை ஆட்சி

தேசிய அரசுக்கும் பிராந்திய அரசுக்கும் இடையில் இருக்கும் உறவின் அடிப்படையிலேயே ஒற்றை ஆட்சி முறை என்றும் கூட்டாட்சி முறை என்றும் அரசு வகைப்படுத்தப்படுகிறது.

அரசியலமைப்பு சட்டத்தின்படி தேசிய அரசும் பிராந்திய அரசுகளும் தங்களது அதிகாரங்களைப் பகிர்ந்து அவரவர் எல்லைக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படுவது கூட்டாட்சி முறை ஆட்சியாகும்ஐக்கிய அமெரிக்க நாடுகள்சுவிட்சர்லாந்து ஆஸ்திரேலியாகனடாரஷ்யாபிரேசில்அர்ஜென்டினா ஆகிய நாடுகள் கூட்டாட்சி முறையை கொண்டவைகூட்டாட்சி முறையில் தேசிய அரசை மைய அரசு அல்லது மத்திய அரசு என்றும் பிராந்திய அரசை மாநில அரசு அல்லது மாகாண அரசு என்றும் அழைக்கின்றனர்.

கூட்டாட்சி முறையின் நிறைகள்.

●   உள்ளூர் சுய ஆட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையே சாரம் ஏற்படுத்துதல்

●    மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு நிர்வாகத் திறன்கள் மேம்பட வழிவகுக்கிறது.

 ●   மிகப் பெரிய நாடுகள் தோன்றுவதற்கு வழி செய்கிறது.

●    அதிகாரம் பகிர்ந்து அளிக்கப் படுவதால் மத்திய அரசின் சர்திவதிகாரப் போக்கைத் தடுக்கிறது.

●    மிகப்பெரிய நாடுகளுக்குப் பொருத்தமானது

●   பொருளதார மற்றும் பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு நன்மை அளிக்கிறது.

குறைகள்

●   ஒற்றையாட்சி முறையோடு ஒப்பிடும்போது கூட்டாட்சி முறை பலவீனமானது.

 ●   கூட்டாட்சி முறை அதிக செலவினம் கொண்டது.

●    பிராந்திய போக்குகள்தான் பொதுவாக காணப்படும்

●   நிர்வாகச் சமநிலையில் குறைபாடுகள்.

●   தேசிய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல்

●    அதிகாரப் பகிர்வில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாடு உருவாகிறது.

●    இரட்டைக் குடியுரிமை.

●    மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்க இயலாது திடமான அரசியலமைப்பு

●   வெளியுறவுக் கொள்கைகளில் சில நேரங்களில் மாநில அரசுகள் தடைகளை ஏற்படுத்துகின்றன.

ஒற்றையாட்சி முறை மற்றும் கூட்டாச்சி முறைகளுக்கு இடையேயான வேறுபாடுகள்


இந்திய அரசியலமைப்பில் கூட்டாட்சி முறையின் அம்சங்கள்

 ●  இரட்டை அரசாங்கம்

●   எழுதப்பட்ட அரசியலமைப்பு

●  அதிகாரப் பகிர்வு

●  அரசியல் அமைப்பின் உயர் அதிகாரம்

●  நாட்டின் உச்சபட்ச சட்டமாக அரசியலமைப்புச் சட்டம் விளங்குகிறதுமத்திய மாநில அரசுகளால் இயற்றப்படும் சட்டங்கள் அதன் விதிகளுக்கு உப்பட்டு அமைதல் வேண்டும்.

●  நெகிழும் தன்மையற்ற அரசியல் அமைப்பு

●  சுதந்திரமான நீதித்துறை

●  இரண்டு அவை ஆட்சி

 

3நாடாளுமன்ற ஆட்சி முறை

நவீன மக்களாட்சி முறைகளைப் நாடாளுமன்றப் ஆட்சி முறை அதிபர் மக்களாட்சி முறை என இருவகைகளாகப் பிரிக்கலாம்நிர்வாக மற்றும் சட்டமன்ற அமைப்புகளுக்கு இடையே உள்ள தொடர்பின் தன்மையைப் பொறுத்து அரசுகள் இவ்விரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

நாடாளுமன்ற ஆட்சி முறையில் சட்டமன்றத்தில் கொள்கைகள் மற்றும் செயல்களுக்கு நிர்வாகத்துறை பொறுப்பேற்கிறது

நாடாளுமன்ற ஆட்சிமுறை அமைச்சரவை அரசாங்கம் அல்லது பொறுப்பு அரசாங்கம் அல்லது வெஸ்ட் மினிஸ்டர் அரசாங்க மாதிரி எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறதுஇவ்வகை ஆட்சிமுறை பிரிட்டன்ஜப்பான்கனடாஇந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.


நாடாளுமன்ற ஆட்சி முறையின் அம்சங்கள்

●  பெயரளவில் மற்றும் உண்மையான நிர்வாகிகள்

●   பெரும்பான்மை கட்சி ஆட்சி

●   கூட்டுப் பொறுப்புணர்வு

●   இரட்டை உறுப்பினர்

●  பிரதம மந்திரியின் தலைமை

நாடாளுமன்ற ஆட்சி முறை நிறைகள்

 ●  சட்டமன்றம் மற்றும் நிர்வாகத் துறைக்கு இடையிலான இணக்கம்

●  பொறுப்பான அரசாங்கம்

●  சர்வாதிகாரத்தைத் தடுக்கிறது

●  பரவலான பிரதிநிதித்துவம்

குறைகள்

 ●  நிலையற்ற அரசாங்கம்

●   தொடர்ச்சியற்ற கொள்கைகள்

 ●  அமைச்சரவையின் சர்வாதிகாரம்

 ●  அதிகாரங்களைப் பிரிப்பதில் உள்ள சிக்கல்கள்

 

4அதிபர் மக்காளட்சி முறை

அதிபர் மக்காளட்சி முறை என்பது சட்ட மன்றத்திற்கு பொறுப்பில்லாததாகவும் நாடாளுமன்றம் அற்றதாகவும் நிலைத்த நிர்வாக அற்றதாகவும் நிலைத்த நிர்வாக அமைப்பு உடையதாகவும் இருக்கும்அதிகாரப் பகிர்வு கொள்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இவ்வரசு முறை அமெரிக்காபிரேசில்இரஷ்யாஇலங்கை போன்ற நாடுகளில் நடை முறையில் உள்ளது.

அதிபர் மக்களாட்சியின் அம்சங்கள்

அரசின் தலைவர் என்பது ஒரு பெயரளவிற்கான பதவியாகும்.

அதிபர் வாக்காளர் மன்றத்தினால் நான்காண்டுகளுக்கொரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்

அதிபர் ஆட்சியில் அமைச்சரவையைக் "கிச்சன் கேபினட்என்று அழைக்கிறார்கள்.

அரசின் சட்டமன்ற நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை அதிகாரங்கள் மூன்றும் தனியாக பிரிக்கப்பட்டு சுதந்திரமாக இயங்கும் அமைப்புகளாகும்.

அதிபர் மக்களாட்சி ஆட்சி முறையின் நிறைகள்

●  ஜனநாயகமானது

●  அதிபரின் முறையான கட்டுப்பாடு

●  முடிவெடுத்தலை மேம்படுத்துதல்

●  மாகாண அரசாங்கம்.

குறைகள்

 ●  சர்வாதிகாரமாகச் சிதையும் வாய்ப்பு

●   நிர்வாக மற்றும் சட்டமன்றத்திற்கு இடையிலான இணக்கமற்ற உறவு

●  சட்டமன்றம் மற்றும் நிர்வாகக் குழுவுக்கு இடையிலான நல்லுறவின்மை

நாடாளுமன்ற மற்றும் அதிபர் மக்களாட்சி இடையிலான வேறுபாடுகள்


 

இந்திய மத்தியமாநில அரசுகளுக்கு இடையே உள்ள உறவு

 இந்திய நாடுஇந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு உட்பட்டு மத்திய மாநில அரசுகளுக்கிடையே அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும்மத்திய மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப் பட்டாலும் அனைத்து விவகாரங்களிலும் முடிவெடுப்பது மத்திய அரசே ஆகும்மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு என்பது

1. சட்ட மன்ற உறவுகள் (பிரிவுகள் 245 முதல் 255 வரை)

2. நிர்வாக உறவுகள் (பிரிவுகள் 256 முதல் 263 வரை)

3. நிதி உறவுகள் (பிரிவுகள் 268 முதல் 294 வரை)

மத்திய மாநில அரசுகள் சட்டங்கள் இயற்றும் அதிகாரம் படைத்தவைஆனாலும் அதிகாரங்கள் வேறுபடுகின்றனசில குறிப்பிட்ட துறைகளுக்கு சட்டமியற்றும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் உள்ளதுஇத்துறைகள் மத்தியப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனசில துறைகளுக்கு சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசாங்கத்திற்கு உள்ளதுஅத்துறைகளுக்கான சட்டங்களை அந்தந்த மாநில அரசுகளே இயற்றிக் கொள்ளும்இவை மாநிலப்பட்டியல் எனப்படுகிறதுசில துறைகளுக்கு மத்திய அரசும் மாநில அரசும் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றுள்ளனஇவை பொதுப்பட்டியல் எனப்படுகிறது.

மத்திய பட்டியல்: மத்தியப் பட்டியலில் 100 துறைகள் உள்ளடங்கியுள்ளது . வெளியுறவுத் துறைகள்பாதுகாப்பு ஆயுதப்படைகள்தொலைதொடர்பு தபால் மற்றும் தந்திமாநிலங்களுக்கிடையிலான வியாபாரம் மற்றும் வணிகம்.

மாநிலப் பட்டியல்: மாநிலப் பட்டியல் 61 துறைகளைக் கொண்டுள்ளதுமாநிலத்தின் பொது ஒழுங்குகாவல் துறைநீதித்துறை நிர்வாகம்சிறைத்துறைஉள்ளாட்சி அமைப்புகள்விவசாயம் போன்றவை பொதுப் பட்டியல் பொதுப்பட்டியல் 52 துறைகளாக உள்ளனகுற்றவியல் மற்றும் சிவில் நடைமுறைகள்திருமணம் மற்றும் விவாகரத்து பொருளாதாரம் மற்றும் சிறப்புத் திட்டமிடல்செய்தித்தாள்புத்தகங்கள் மற்றும் அச்சகங்கள்மக்கள் தொகை கட்டுப்பாடு ஆகியன.

மொத்த தேசிய மகிழ்ச்சி (Gross National Happiness GNH)

மொத்த தேசிய மகிழ்ச்சி என்பது தற்போது வளர்ந்து வரும் ஓர் தத்துவமாகும்இது ஒரு குறிப்பிட்டநாட்டில் உள்ள மொத்த மகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு குறியீடு ஆகும்பூட்டான் அரசின் அரசமைப்பில் இடம் பெற்றுள்ள இக்கருத்து ஜுலை14 2008ல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மொத்த தேசிய மகிழ்ச்சி என்னும் பதத்தைப் பூட்டானின் நான்காம் அரசரான ஜிக்மே சிங்கியே வான்சுக் அவர்களால் 1970 இல் உருவாக்கப்பட்டதுமொத்த தேசிய மகிழ்ச்சி நிலையான மற்றும் சமமான சமூக பொருளாதார வளர்ச்சிசுற்றுச்சுழல் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு பண்பாடு மற்றும் நல்ல ஆட்சி ஆகியவற்றை மையக் கருத்தாகக் கொண்டுள்ளது.

இயற்கை மற்றும் பாரம்பரிய மதிப்புகளுக்கிடையே இசைவை வலியுறுத்தும் வகையில் மக்களிடையே கூட்டு மகிழ்ச்சியை ஏற்படுத்துவது அரசின் இலக்காக இருக்க வேண்டும்.


மீள்பார்வை

● அரசாங்கம் என்பது அரசின் செயல்பாடுகளைச் - செயல்படுத்தும் அமைப்பாகும்.

● சட்டமன்றம்நிர்வாகம்நீதித்துறை போன்றவை அரசின் உறுப்பு அமைப்பாகும்.

● ஒற்றை ஆட்சி முறைகூட்டாட்சி ஆட்சி முறைநாடாளுமன்ற ஆட்சி முறை மற்றும் அதிபர் ஆட்சிமுறை போன்றவை முக்கிய அரசாங்க அமைப்புகளாகும்.

● இந்தியாவில் நாடாளுமன்ற ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

●  முடிவெடுத்தல் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் செயல்முறையே ஆட்சி எனப்படுகிறது.

Tags : Merits, Demerits, features | Forms of Indian Government நிறைகள், குறைகள், அம்சங்கள் | அரசாங்கங்களின் வகைகள்.
9th Social Science : Civics: Forms of Government : Types of Indian Constitution Merits, Demerits, features | Forms of Indian Government in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள் : அரசியலமைப்பின் வகைகள் - நிறைகள், குறைகள், அம்சங்கள் | அரசாங்கங்களின் வகைகள் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள்