அரசாங்கங்களின் வகைகள் | குடிமையியல் | சமூக அறிவியல் - விரிவான விடையளி | 9th Social Science : Civics: Forms of Government

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள்

விரிவான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : விரிவான விடையளி

VI. விரிவான விடையளி.


1. ஒற்றையாட்சி முறையின் நிறைகளை விவரி.

விடை:

• சிறு நாடுகளுக்குப் பொருத்தமானது.

• அதிகாரம் மற்றும் பொறுப்புகளுக்கு இடையில் மோதல்கள் இருப்பதில்லை.

• ஒற்றை ஆட்சி முறை உடனடியாக முடிவெடுத்துத் துரிதமாகச் செயல்படுகிறது.

• ஒற்றை ஆட்சி குறைந்த செலவுடையது.

• அரசியலமைப்பு திருத்தங்களை எளிதில் மேற்கொள்ள இயலும்.

• ஒற்றுமை, சீரான சட்டம், கொள்கை மற்றும் நிர்வாகத்தினை உள்ளடக்கியது.

 

2. அதிபர் மக்களாட்சி முறை பற்றிக் குறிப்பு வரைக. மேலும் அதிபர் மக்களாட்சி முறைக்கும் நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை எழுதுக.

விடை:

• அதிபர் மக்களாட்சி முறையில் நிர்வாகத்துறை தன் கொள்கைகளுக்கும் செயல்களுக்கும் சட்ட மன்றத்திற்குப் பொறுப்புடையது அல்ல.

• நிர்வாகத்துறையில் செயல்பாடுகளில் சட்ட மன்றத்தின் தலையீடு இருக்காது.

• இது அதிகாரப்பகிர்வு கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது.

• இவ்வரசு முறை அமெரிக்கா, பிரேசில், இரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைமுறை யில் உள்ளது.

அதிபர் மக்களாட்சி முறைக்கும், நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள்:

அதிபர் மக்களாட்சி முறை

1. குடியரசுத்தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

2 அதிபரே அதிகாரம் படைத்தவர்.

3 அதிகாரப் பிரிவினை

4 சுதந்திரமாகச் செயல்படும் பிரிவுகள்.

5 மாகாணத்தின் தலைவர் அதிபர் ஆவார்.

6 அரசாங்கத்தின் தலைவரும் அதிபரே 

7 தனிநபர் தலைமை

8 மகா சபையின் செயல்களுக்கு அதிபர் பொறுப்பை ஏற்க மாட்டார்.

நாடாளுமன்ற மக்களாட்சி முறை:

1 பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் பிரதம மந்திரியாவார்.

2 மத்திய சட்டமன்றம் அதிகாரம் படைத்தது

3 அதிகாரப் பிரிவினை மையப்படுத்தப் படாமல் இருப்பது

4 தனித்தனியான சார்புடைய செயல்பாடுகளைக் கொண்ட பிரிவுகள்.

5 அரசின் தலைவர் - குடியரசுத் தலைவர்.

6 அரசாங்கத்தின் தலைவர் - பிரதம அமைச்சர்

7 கூட்டுத்தலைமை

8 கூட்டு மற்றும் தனித்தனியான பொறுப்புகள்

Tags : Forms of Government | Civics | Social Science அரசாங்கங்களின் வகைகள் | குடிமையியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Civics: Forms of Government : Answer in detail Forms of Government | Civics | Social Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள் : விரிவான விடையளி - அரசாங்கங்களின் வகைகள் | குடிமையியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள்