சூரியக் குடும்பம் - குறுங்கோள்கள் | 11th Geography : Chapter 2 : The Solar system and the Earth
குறுங்கோள்கள் (Asteroids)
குறுங்கோள்கள் என்பது மற்ற கோள்களைப் போல சூரியனைச் சுற்றி வரும்
பாறையால் ஆன விண் வெளிக்கற்கள் ஆகும். இது சிறிய கோள்கள் எனவும் அழைக்கப்படுகிறது.
சூரிய குடும்பத்தில் அதிகளவிலான குறுங்கோள்கள் காணப்படுகின்றன. இங்கு அளவில்
பெரியதாக காணப்படும் குறுங்கோள்கள் "வான்கோள்கள்"
என அழைக்கப்படுகின்றன. இவைகள் செவ்வாய் மற்றும் வியாழன்
கோள்களுக்கு இடையில் காணப்படுகின்றன. இந்தப் பகுதியை
"குறுங்கோள்பட்டை" (Asteroids Belt) என்று
அழைக்கிறோம். இதன் விட்டமானது 100 கி. மீட்டரிலிருந்து சிறிய கூழாங்கற்கள் அளவு வரைக்
காணப்படுகிறது. இவைகள் கடந்த காலத்தில் வெடித்து சிதறடிக்கப்பட்ட கோள்கள் அல்லது
வால் நட்சத்திரங்களின் ஒரு பகுதியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. தினமும்
புதுப்புது குறுங்கோள்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.