புவியியல் - வால் நட்சத்திரங்கள் | 11th Geography : Chapter 2 : The Solar system and the Earth
வால் நட்சத்திரங்கள் (Comets)
வால் நட்சத்திரம் மிகவும்
உற்சாகத்தை அளிக்கக்கூடிய ஒரு வான்பொருள் ஆகும். இது ஆர்வத்தையும் அதேவேளையில்
பயத்தையும் ஏற்படுத்தக்கூடியது. காமெட் (Comet) என்கிற ஆங்கில சொல் கிரேக்க
மொழியில் உள்ள அஸ்டர் கோமட்டிஸ் (Aster kometes) என்கிற மூலச் சொல்லிலிருந்து
பெறப்பட்டது. இதன் அர்த்தம் "நீள முடியுடைய நட்சத்திரம்" ஆகும் (படம் 2.8). இவைகள் சிறு சிறு
பனிப்பொருள்கள் மற்றும் எரிகற்களின் துகள்களால் ஆனவை. இவைகள் ஒழுங்கற்ற
சுற்றுப்பாதையில் சூரியனைச் சுற்றிவருகின்றன . சிலநேரங்களில் இவை சூரியனுக்கு மிக
அருகிலும் (perihelion) சில நேரங்களில் சூரியனுக்கு
வெகுதொலைவிலும் காணப்படும் (Aphelion).
படம் 2.8. வால் நட்சத்திரங்கள்
உங்களுக்குத் தெரியுமா?
அனைவராலும் நன்கு அறியப்பட்ட
ஹேலி வால்நட்சத்திரம் 76 ஆண்டுகளுக்குஒருமுறை வானில் தோன்றும்.
இவ் வால் நட்சத்திரம் 1986 ம் ஆண்டு தோன்றியது மீண்டும் 2061 ம் ஆண்டு ஜூலை 28 ம் தேதி தோன்றும்.
தெரிந்து தெளிவோம்
டைட்டன்
(Titan)
- மேகம்
மற்றும் வளி மண்டலத்துடன் கூடிய ஒரே துணைக்கோள். சனிக்கோளின் மிகப்பெரிய
துணைக்கோள் இது. இது சூரியக்குடும்பத்தில் இரண்டாவது பெரிய துணைக்கோள். மேகம்
மற்றும் அடர்த்தியான வளிமண்டலத்துடன் கூடிய ஒரே துணைக்கோள் இதுவே.
புவியின் கடந்த
காலங்களில் காணப்பட்ட அதே சூழ்நிலை டைட்டனில் உள்ளது (சூரியனுக்கு அருகில்
இருப்பதால் புவி எப்போதும் வெப்பமாக இருப்பதுதான் வேறுபாடு).
நாசாகருத்துப்படி, டைட்டன் தான் இதுவரை நாம்
கண்டதில் புவி போன்ற உலகமாக தெரிகிறது.
1655
இல் டச்சு வானவியலாலர்
கிறிஸ்டியன் ஹூஜென்ஸ் (Christian Huygens) என்பவரால் டைட்டன்
கண்டுபிடிக்கப்பட்டது. ஹுஜென்ஸ் லேன்டர் ஆய்வு கேசினி விண்வெளி ஓடத்தை ஐரோப்பியன்
விண்வெளி ஆய்வு மையம் மூலமாக டைட்டனுக்கு அனுப்பியது அவரை பெருமைப்படுத்தும்
வகையில் அவரது பெயரில் அனுப்பப்பட்டது.
டைட்டன் துணைக் கோளின்
விட்டம் 5,150
கி.மீ. இது புவியின்
அளவில் பாதியும் செவ்வாயின் அளவுக்குச் சமமாகவும் காணப்படுகிறது. இதன் மேற்பரப்பு
வெப்பநிலை - 179°
செல்சியஸ். இந்த
வெப்பநிலை நீரை பாறை போன்று கட்டியாகிவிடுகிறது. இது மீத்தேன் வாயுவை திரவநிலையில்
வைத்திருக்கிறது. மேற்பரப்பு அழுத்தம் புவியின் அழுத்தத்தை விட கொஞ்சம் அதிகம்.
புவியின் அழுத்தம் கடல் மட்டத்தில் 1 மில்லிபார் இது டைட்டனில் 1.6 மில்லிபார். நீள்
வட்டபாதைச்சுற்று 15,945 நாட்கள். இதன் நிறை முக்கியமாக பனி மற்றும் பாறைப்
பொருள் வடிவில் காணப்படுகிறது. இதற்கு காந்த புலம் கிடையாது.