அறிமுகம் - புவியியல் - சூரியக் குடும்பமும் புவியும் | 11th Geography : Chapter 2 : The Solar system and the Earth
சூரியக் குடும்பமும் புவியும்
அத்தியாயக் கட்டகம்
2.1
அறிமுகம்
2.2
புவியின் தோற்றம்
பற்றியக் கோட்பாடு
2.3
பேரண்டத்தின் தோற்றம்
பற்றிய நவீனக் கோட்பாடு
2.4
நட்சத்திரங்கள்
மற்றும் நட்சத்திரங்களின் கூட்டங்கள்
2.5
சூரியக் குடும்பம்
2.6
சூரியன்
2.7
கோள்கள்
2.8
குள்ளக் கோள்கள்
2.9
துணைக் கோள்கள்
2.10
குறுங்கோள்கள்
2.11
வால் நட்சத்திரங்கள்
2.12
விண்கற்கள்
2.13
புவியின் உருவமும்
வடிவமும்
2.14
புவியின் இயக்கங்கள்
2.15
பருவ
காலங்கள்
2.16
உலகின் நேர மண்டலங்கள்
கற்றல் நோக்கங்கள்
• பேரண்டம், நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவற்றைப்
பற்றி விரிவாக அறிந்து கொள்ளுதல்.
• பேரண்டத்தின் தோற்றம்
பற்றியகோட்பாடுகளை புரிந்து கொள்ளுதல்.
• சூரிய தொகுதியில்
கோள்களின்அமைவிடம்பற்றி தெரிந்து கொள்ளுதல்.
• புவி இயக்கத்திற்கான
காரணத்தையும் விளைவுகளையும் அறிந்து கொள்ளுதல்.
அறிமுகம்
மேகக் கூட்டம் இல்லாத தெளிவான இரவில் நீங்கள் மொட்டை
மாடியிலோ அல்லது உங்கள் வீட்டின் முற்றத்திலோ ஓய்வெடுத்ததுண்டா? ஆம் எனில், இரவு வானில் ஒளிர்கின்ற
நட்சத்திரங்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பதை போன்று காட்சியளிப்பதை
பார்த்துள்ளீர்களா? நாம் காணும் இந்த ஒளிர்கின்ற நட்சத்திரங்கள் பேரண்டத்தின்
ஒரு பகுதியாகும். இப்போது நாம் பேரண்டம், நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் பலவற்றைப் பற்றியும் கலந்துரையாடலாம்.
பேரண்டம் என்பதுஅண்டங்கள், நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் பிற பருப்பொருட்களையும், ஆற்றலையும் கொண்டுள்ள ஒரு பரந்த
முடிவற்ற வான் வெளிப் பகுதியாகும்.