நட்சத்திரங்கள்
மற்றும் நட்சத்திரங்களின் கூட்டம்
நட்சத்திரங்கள் என்பது சுய
வெளிச்சம் மற்றும் வெப்பத்தை கொண்டவையாகும். புவிக்கு மிக அருகில் உள்ள
நட்சத்திரம் சூரியன் ஆகும். சூரியனை விட மிகவும் பிரகாசமான நட்சத்திரம் சிரியஸ் (Sirius) ஆகும். சூரியனுக்கு மிக அருகில்
காணப்படும் நட்சத்திரம் பிராக்ஸிமா சென்டாரி (Proxima centauri) ஆகும். போதுமான அளவு தூசுகள்
மற்றும் வாயுக்கள் ஈர்ப்புச் சக்தியினால் ஒன்றாக பிணைந்து நட்சத்திரங்கள்
உருவாகின்றன. ஒரு நட்சத்திரம் வாழ்நாளில் பெரிய சிவப்பு நட்சத்திரம், வெண் குள்ள நட்சத்திரம், நியூட்ரான் நட்சத்திரம் மற்றும்
கருந்துளை போன்ற வடிவங்களாக மாற்றம் அடைகிறது.
படம் 2.2 நட்சத்திரக் கூட்டம் – தேநீர்க் களம் போன்ற
சகிட்டாரியஸ்
நட்சத்திர கூட்டம் (Constellation) என்பது வானத்தில் ஒரு
குறிப்பிட்ட வடிவத்தை உருவாக்குகின்ற நிலையான நட்சத்திர கூட்டஅமைப்பாகும். 1929 ஆம் ஆண்டில், சர்வதேச வானியல் ஒன்றியம் (International Asronomical Unit), 88 நட்சத்திர குழுக்கள் உள்ளதாக
அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கு முன்னர் தாலமி (Ptolemy) தன்னுடைய அல் மேகஸ்ட் (Alinagast) என்ற புத்தகத்தில் 44 நட்சத்திர கூட்டங்கள் உள்ளதாக
பட்டியலிட்டுள்ளார். உர்சா மேஜர் (Ursa major) என்ற நட்சத்திரக் கூட்டத்தை வட அரைக் கோளம் மற்றும் தென்
அரைக்கோளத்தின் சில பகுதிகளில் காணலாம். உர்சா மேஜர் (Ursa major) என்றால் லத்தீன் மொழியில் பெரிய
கரடி (Big bear) என்று பொருள்.
உங்களுக்குத் தெரியுமா?
பேரண்டம் விரிவடைவதையும்
மற்றும் விரிவடையும்வேகம் அதிகரிப்பதையும் கண்டறிந்ததினால் சவுல் பெரல் மட்டர் (Saul Permutter, Brian Smith and
Adan Riess) பிரெய்ன்
ஸ்மித் மற்றும் ஆடம் ரெய்ஸ் இந்த மூன்று அறிவியலாளர்களும் இயற்பியலுக்கான நோபல்
பரிசை (2011)
பெற்றனர்.