உயிரின் தோற்றமும் பரிணாமமும் - வான் உயிரியல் / புற மண்டல உயிரியல் | 10th Science : Chapter 19 : Origin and Evolution of Life
வான்
உயிரியல் / புற மண்டல உயிரியல்
நாம் மட்டும்தான் இந்த
அண்டத்தில் இருக்கிறோமா?
உங்கள் பதில் இல்லை எனில் உன்னால் வான் வெளியில் உயிரினங்கள்
இருப்பது பற்றி எப்படி அறிய இயலும்? அண்ட வெளியில் உள்ள
உயிரினங்களைப் பற்றி அறியும் அறிவியலுக்கு வான் உயிரியல்
என்று பெயர்.
அண்டத்தில் உள்ள உயிரினங்களின்
தோற்றம்,
பரிணாம வளர்ச்சி, உயிரிகளின் பரவல் மற்றும் வேற்றுக்
கிரகங்களில் உயிரிகள் இருப்பதற்கான ஆய்வு ஆகியவற்றை உள்ளடக்கியது வான் உயிரியல்
ஆகும்.
வான் உயிரியலின் முதன்மைக்
கருத்து என்னவென்றால் அண்டத்தில் உயிர்கள் வாழ்வதற்குரிய இடங்கள் தொடர்பானது
ஆகும். பிற கிரகங்களில் உயிர் வாழ வேண்டுமானால் இரண்டு முக்கியக் காரணிகள் தேவை.
1. வளி
மண்டலத்தைத் தக்க வைத்துக் கொள்ள குறிப்பிட்ட நிறை தேவை.
2. சுற்று
வட்டப் பாதையானது சூரியனிலிருந்து சரியான தொலைவில் இருந்தால் நீர்த் துளிகள்
இருக்கும். இந்தத் தொலைவானது அதிக வெப்பமும் இல்லாமலும் அதிகக் குளிரும் இல்லாத
அளவிலான தொலைவாக இருந்தால் அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த சூழல் இருக்கும்.
இதை கோல்டி லாக்மண்டலம் (Goldilock Zone) எனப் போற்றுவர்.
நமது சூரியக் குடும்பத்தில்
உள்ள புவி மட்டும் தான் கோல்டி லாக் மண்டலத்தில் உள்ள கோள் ஆகும். இந்த
மண்டலத்தில் அவ்வப்போது மாற்றம் ஏற்படுவதால் நட்சத்திரங்கள் தோன்றுகின்றன.
செவ்வாய்க் கிரகத்தில் மக்கள் வாழ உகந்த சூழல் இருப்பதை நாம் அறிந்துள்ளோம்.
சிறிய உயிரிகள் செவ்வாய்க்
கிரகத்தில் இருந்ததாகக் கருதப்படுகிறது. அவைமிகக் கடுமையான சூழலைத் தாங்கும்
இயல்பு கொண்டவையாக இருக்கலாம். எனவே நமது சூரியக் குடும்பத்தில் ஏராளமான பகுதிகள்
புவியிலிருந்து வேறுபட்டுள்ளன. அங்கு எந்தக் கடினச் சூழலையும் தாங்கும் இயல்பு
கொண்ட பாக்டீரியாக்கள் இருக்கலாம்.
உங்களுக்குத் தெரியுமா?
நாசா 2020இல் வான் உயிரியல் என்னும் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் செவ்வாயின்
பழமையான சூழல் குறித்தும் செவ்வாயின் மேற்புறப் புவி அமைப்புக் குறித்தும்
செவ்வாயில் உயிரிகள் இருந்தனவா என்பது குறித்தும் அவ்வாறு உயிரிகள் இருந்தால்
அவற்றைப் பாதுகாப்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறது.