வேறுபாடுகளின் வகைகள் | உயிரின் தோற்றமும் பரிணாமமும் - வேறுபாடுகள் | 10th Science : Chapter 19 : Origin and Evolution of Life
வேறுபாடுகள்
மியாசிஸை உள்ளடக்கிய பாலினப்
பெருக்கம், இனச் செல்களின் இணைவின் போது ஜீன் (மரபணு) மறுசேர்க்கைக்கு
உதவுகிறது. இது இளம் சந்ததிகளின் புறத்தோற்றப் பண்புகள் பெற்றோரிடமிருந்து
மாறுபடுவதற்கு வழிவகுக்கின்றன. இத்தகைய மாறுபாடுகள் வேறுபாடுகள் என
அழைக்கப்படுகின்றன. ஒரே சிற்றினத்தைச் சார்ந்த உயிரினங்கள் மற்றும் ஒரே பெற்றோரின்
இளம் சந்ததிகள் ஆகியவற்றிற்கு இடையே காணப்படும் மாறுபாடுகள், வேறுபாடுகள் எனப்படும். வேறுபாடுகள் மூலப் பொருளாக அமைந்து பரிணாமத்தில்
முக்கியப் பங்கு வகிக்கிறது. வேறுபாடுகள் இல்லாமல் பரிணாமம் ஏற்பட
சாத்தியமில்லை.
வேறுபாடுகளின்
வகைகள்
இத்தகைய வேறுபாடுகள் ஒரு உயிரினத்தின்
உடல் செல்களை பாதிக்கின்றன. இவை அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லை. இவை
சூழ்நிலைக் காரணிகளால் ஏற்படுகின்றன.
இத்தகைய வேறுபாடுகள் ஒரு
உயிரினத்தின் இன செல்களில் உருவாகின்றன. இவை அடுத்த தலைமுறைக்கு
கடத்தப்படுகின்றன. இவை முன்னோர்களிடம் இருந்ததாகவோ அல்லது திடீரென
ஏற்பட்டவையாகவோ இருக்கலாம். இவை இரண்டு வகைகளாகும்.
1. தொடர்ச்சியான
வேறுபாடுகள்
2 தொடர்ச்சியற்ற
வேறுபாடுகள்
தொடர்ச்சியான
வேறுபாடுகள்:
இவை ஒரு இனத்தின் உயிரிகளுக்கிடையே காணப்படும் சிறிய வேறுபாடுகள். இவை நிலையற்ற
வேறுபாடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவை ஒரு இனத்தில் படிப்படியாக
நிகழும் வேறுபாடுகளின் தொகுப்பினால் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டு : தோலின்
நிறம், ஒரு உயிரியின்
உயரம் மற்றும் எடை, கண்ணின் நிறம், மற்றும்
பல.
தொடர்ச்சியற்ற
வேறுபாடுகள்:
இவை சடுதி மாற்றத்தினால் ஒரு உயிரியில் திடீரென தோன்றுபவை. இவ்வகையில்
இடைப்பட்ட உயிரிகள் இருக்காது. இத்தகைய அதிக வேறுபாடு பரிணாம வளர்ச்சிக்குப் பயன்
அற்றவை எடுத்துக்காட்டு: குட்டை கால்களையுடைய ஆன்கான் செம்மறியாடு (Ancon sheep), ஆறு
அல்லது அதிக விரல்களையுடைய மனிதன், மற்றும் பல.
தொடர்ச்சியற்ற வேறுபாடுகள் டீ
விரிஸ் முன்மொழிந்த சடுதி மாற்றக் கோட்பாட்டிற்கு அடிப்படையாக உள்ளன.
சடுதி மாற்றும் மற்றும்
வேறுபாடுகளுக்கு இடையேயான தொடர்பு
பரிணாமம்
என்பது சடுதிமாற்றம் மற்றும் வேறுபாடுகள் ஆகிய இரண்டு நிகழ்வுகளை
உள்ளடக்கியது. DNA இரட்டிப்பாதலின் போது ஏற்படும் பிழைகள் அல்லது UV
கதிர்கள் அல்லது வேதிப்பொருட்களோடு தொடர்புக் கொள்ளும் போது சடுதி
மாற்றம் ஏற்படுகிறது. சடுதி மாற்றம் வேறுபாடுகளுக்கு வழிவகுக்கிறது. ஒரு உயிரியில்
மாற்றங்களை இது ஏற்படுத்துகிறது.