தானியங்கு
நரம்பு மண்டலம்
தானியங்கு நரம்பு மண்டலமானது
உள்ளுறுப்பு நரம்பு மண்டலம் என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றில் உள்ள பரிவு
நரம்புகளும், எதிர்ப் பரிவு நரம்புகளும் ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்பட்டு நமது உடல்
உள்ளுறுப்புகளின் இயக்கங்களை ஒழுங்கு படுத்துகிறது. இவ்விரு நரம்புகளும்
எதிரெதிராகச் செயல்பட்டு நமது உடலில் உள்ள உள்ளுறுப்புகளை மிக துரிதமாகச் செயல்பட
வைப்பதன் மூலம் உடலை சம நிலையில் பராமரிக்க உதவுகின்றன.

செயல்பாடு 3
கீழே
கொடுக்கப்பட்டுள்ள எண்கள் மற்றும் எழுத்துக்களையும் பயன்படுத்தி சரியான பொருள் தரும்
வாக்கியத்தை உருவாக்கு.
