நரம்பு மண்டலம் - மூளைத் தண்டுவட திரவம் | 10th Science : Chapter 15 : Nervous System
மூளைத்
தண்டுவட திரவம்
மூளையானது சிறப்பு திரவத்தினுள்
மிதந்த நிலையில் காணப்படுகிறது. இச்சிறப்பு திரவம் மூளைத் தண்டுவடத் திரவம்
என்றழைக்கப்படுகிறது. மண்டையோட்டினுள் நிணநீர் போன்றுள்ள இத்திரவம் மூளையை
அதிர்வுகளில் இருந்து பாதுகாக்கின்றது. தண்டு வடத்தின் மையக் குழலினுள்ளும்
இத்திரவம் நிரம்பியுள்ளது.
(1) திடீர் அதிர்வுகளின் போது மூளை பாதிப்படையாமல் பாதுகாக்கிறது.
(2) மூளைக்கான ஊட்டச்சத்துக்களை அளிக்கும் பணியை
மேற்கொள்கிறது.
(3) மூளையில் உருவாகும் கழிவுகளை சேகரித்து வெளியேற்றும்
பணியினை மேற்கொள்கிறது.
(4) மூளைப் பெட்டகத்தின் உள்ளே நிலையான அழுத்தத்தை
பராமரிக்க உதவுகிறது.