அனிச்சைச்
செயல்
அனிச்சைச் செயல் என்பது
தன்னிச்சையாக ஒரு தூண்டலுக்கு பதில் விளைவாக நடக்கும் எதிர்வினை ஆகும். இரு வகையான
அனிச்சைச் செயல்கள் காணப்படுகின்றன.
(1) எளிய அல்லது
அடிப்படையான அனிச்சைச் செயல்கள் : இவ்வகையான அனிச்சைச் செயல்கள்
உள்ளார்ந்த மற்றும் கற்றுணராத துலங்கல்களாகும். நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் பல
எளிமையான அனிச்சைச் செயல்களை பயன்படுத்துகிறோம். உதாரணமாக நமது கண்ணில் தூசி
விழும் போது இமைகளை மூடுதல்,
தும்முதல், இருமுதல், கொட்டாவி
விடுதல் போன்ற இச்செயல்களை நாம் நம்மை அறியாமலேயே, சிந்திக்காமலேயே
உடனடியாக செய்கிறோம்.
(2) பெறப்பட்ட
அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அனிச்சைச் செயல்கள்: இவ்வகையான அனிச்சைச் செயல்கள்
கற்றல் மற்றும் பயிற்சியின் மூலம் செயல்படுத்தப்படுபவையாகும். ஹார்மோனியம்
வாசித்தலின் போது இசை குறிப்புகளுக்கேற்ப சரியான கட்டையை அழுத்துவதும், விடுவிப்பதும்
கற்றல் மூலம் பெறப்பட்ட அனிச்சைச் செயலாகும். தொடர்ச்சியான பயிற்சியின் மூலமே இதனை
மேற்கொள்ள முடியும். இது போன்று வேறு ஏதேனும் சில எடுத்துக்காட்டுகளை நீங்கள் கூற
முடியுமா?
பெரும்பாலான அனிச்சைச் செயல்கள்
தண்டு வடத்தினால் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப் படுகின்றன. எனவே இவை தண்டுவட
அனிச்சைச் செயல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
நரம்பு செல்களுக்கிடையே நடைபெறும்
தூண்டல் துலங்கல் அனிச்சைச் செயல் பாதைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து அனிச்சை
வில் எனப்படும்.
ஒரு சூடான தட்டினை நாம் தொடும்
போது நமது உடலில் நடைபெறும் செயல்பாடுகளை நாம் தற்போது அறிந்து கொள்வோம்.
(i) சூடான பாத்திரத்தை நாம் தொடும்போது
வெப்பம் எனும் தூண்டல் நமது கைகளில் உணரப்படும் அமைப்புகள் வெப்ப உணர்வேற்பிகள்
அல்லது தெர்மோ உணர்வேற்பிகள் எனப்படுகிறது. இந்த தூண்டலானது (வெப்பம்) உணர்
நரம்பு செல்களில் தூண்டல்களை ஏற்படுத்துகிறது.
(ii) தண்டுவடத்துக்கு
இத்தகவல்கள் உணர் நரம்பு செல்கள் மூலம் கடத்தப்படுகிறது.
(iii) தண்டுவடமானது இத் தூண்டல்களைப் பகுத்தறிந்து, உரிய துலங்கலை
கடத்தும் மையத்தின் நரம்புச் செல்கள் மூலமாக இயக்க நரம்பு செல்களுக்கு
கடத்துகிறது.
(iv) தண்டுவடம்
பிறப்பிக்கும் கட்டளைகளை இயக்க நரம்புச் செல்கள் நமது கைகளுக்கு எடுத்துச் செல்கிறது.
(v) நமது கையில் உள்ள தசை நார்கள்
சுருங்குவதன் மூலம் நாம் நமது கையை சூடான பாத்திரத்தில் இருந்து உடனடியாக
விலக்கிக் கொள்கிறோம்.
மேலே உள்ள உதாரணத்தில் தசை நார்கள்
என்பது வெப்பத்தின் காரணமான விளைவினை வெளிப்படுத்தும் உறுப்பாகும். நரம்புச்
செல்களின் தூண்டல் காரணமாக தசை நார்களின் இயக்கத்தினைப் பற்றி மேல் வகுப்புகளில்
நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
செயல்பாடு 2
கீழே கொடுக்கப்பட்டுள்ள
அட்டவணையில் உள்ள வார்த்தையின் பெயரைக் கூறாமல் வார்த்தை அச்சடிக்கப்பட்டுள்ள
நிறத்தை சரியாகக் கூறுக.