Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | பிரிக்ஸ் நாடுகள் (BRICS)

பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் - பிரிக்ஸ் நாடுகள் (BRICS) | 12th Economics : Chapter 8 : International Economic Organisations

   Posted On :  16.03.2022 08:54 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 8 : பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்

பிரிக்ஸ் நாடுகள் (BRICS)

வேகமாக வளர்ந்துவரும் நாடுகளின் முதல் எழுத்துக்களைக் கொண்டு குறிப்பிடப்படும் சுருக்கப்பெயர் பிரிக்ஸ் (BRICS) பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவையே அந்த ஐந்து விரைவாக வளர்ந்து வரும் நாடுகள்.

பிரிக்ஸ் நாடுகள் (BRICS)



வேகமாக வளர்ந்துவரும் நாடுகளின் முதல் எழுத்துக்களைக் கொண்டு குறிப்பிடப்படும் சுருக்கப்பெயர் பிரிக்ஸ் (BRICS) பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவையே அந்த ஐந்து விரைவாக வளர்ந்து வரும் நாடுகள், இது 2010 வரை தென் ஆப்பிரிக்காவை உள்ளடக்காமல் பிரிக் என அழைக்கப்பட்டது. பிரிக் என்ற சுருக்கப் பெயர் 2001ல் பயன்பாட்டுக்கு வந்தது. பிரிக்ஸ் உறுப்பினர்கள் அவை அமைந்துள்ள புவிப்பகுதிகளில் குறிப்பிடத்தக்க ஆதிக்கம் செலுத்தும் நாடுகளாகும். இந்த நாடுகள் 2009 லிருந்து உச்சி மாநாடுகளை நடத்தி வருகின்றன. பத்தாவது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவில் ஜீலை 2018ல் நடைபெற்றது. உள்ளடக்கிய வளர்ச்சி, வாணிகப் பிரச்சனைகள், உலகளாவிய அரசு நிர்வாகம், பகிரத்தக்க வளமை, நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவையே இந்த உச்சிமாநாட்டின் விவாதத் தலைப்புகள் ஆகும்.

பிரிக்ஸ் பற்றிய சில தகவல்கள்

* BRICS நாடுகள் உலக மொத்த தேசிய உற்பத்தியில் 21 சதவீதம் பெற்றுள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் உலக GDPல் தனது பங்கினை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

* உலக மக்கள் தொகையில் BRICS 43 சதவீதத்தை இருப்பிடமாக கொண்டுள்ளது.

* BRICS நாடுகள் இணைந்து சுமார் $ 4.4. டிரில்லியன் அன்னிய இருப்பை பெற்றுள்ளது

சீனாவின் ஷாங்காய் நகரில் பிரிக்ஸின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இதன் உறுப்பினர் நாட்டு அரசாங்கங்கள் ஒன்று சேர்ந்து பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கி என்ற வங்கியை தொடங்கியுள்ளார்கள். இதற்கு புதிய மேம்பாட்டு வங்கி (The New Development Bank) என்ற பெயரும் உண்டு. முதல் மாநாடு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் மாநாடு 2012 லும் எட்டாவது மாநாடு 2016 லும் நடைபெற்றது.



1. பிரிக்ஸ் நோக்கங்கள்

1. வணிக ஒத்துழைப்பு தொகுதியை அமைத்து ஒத்துழைப்பை மேம்படுத்துதல். 

2. பன்னாட்டு பரிவர்த்தனைகளில் அமெரிக்க நாட்டுப் பணமான டாலருக்கு பதிலாக வேறு நாட்டு பணத்தை புழக்கத்துக்குக் கொண்டுவர தேவையானவற்றை செய்தல்.

3. மண்டல ஒத்துழைப்பை மேம்படுத்துவது.

4. வளரும் நாடுகளுக்கென தனியான பன்னாட்டு வாணிக ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கி அவற்றை ஒன்றிணைந்து செயல்பட வைப்பது.



2. பிரிக்ஸின் பணிகள் (Functions of BRICS)

1. பன்னாட்டு பரிவர்த்தனை நடைமுறைகளை சட்டவரம்புக்குட்படுத்துவது மற்றும் ஐநா பாதுகாப்பு சபை செயல்படுவதில் சீர்திருத்தங்களையும் கோருகிறது.

2. தெற்கு - தெற்கு (South - South) ஒத்துழைப்பை மேம்படுத்தும் கட்டமைப்பாக செயல்படுதல்

3. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கிடையிலான இடைவெளியை குறைக்கும் பணிகளையும் செய்கிறது. உதாரணமாக உலக வர்த்தக நிறுவனத்தில் பிரிக்ஸ் வளரும் நாடுகளுக்கு சாதகமான வேளாண் கொள்கையை வடிவமைக்க வலியுறுத்துவது.

4. வளரும் நாடுகளுக்கு சாதகமாக வாணிக மற்றும் பருவநிலை மாறுதல் பேச்சுவார்த்தையில் உதவிகளை செய்தல்

5. பொருளாதார ஒத்துழைப்பு மட்டுமன்றி தகவல் பகிர்ந்து கொள்ளுதலுக்கான ஒரு தளமாகவும் பிரிக்ஸ் பணியாற்றுகிறது.

6. நடுத்தர நாடுகளின் நலன்களை பாதுகாக்கும் தூண்டுகோலாக பன்னாட்டுத் தளத்தில் பிரிக்ஸ் செயல்படுகிறது.



3. பிரிக்ஸின் சாதனைகள் (Achievements of BRICS) 

பிரிக்ஸின் சாதனைகளில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

* அவசரகால கையிருப்பு வசதியை உருவாக்கியதால் உறுப்பினர் நாடுகளின் பொருளாதார மற்றும் நிதித் துறைகளில் ஒன்றிணைந்து செயல்படுதலை பலப்படுத்தியது ஒரு சாதனையாகும்.

 * ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கி போன்று செயல்படும் புதிய வளர்ச்சி வங்கியை சீனாவின் சாங்காயில் தலைமை அலுவலகத்துடன் செயல்படும் விதமாக பிரிக்சின் ஆறாவது மாநாட்டின் முடிவு செய்தபடி அமைத்தது ஒரு சாதனை.

* பொருளாதார பலமும் மக்கள் தொகை வளமும் பிரிக்ஸ் நாடுகள் உலக அளவில் பன்னாட்டு உறவு நிர்வாகத்தில் கூடுதல் ஆதிக்கம் பெறும் நிலைமை பெற்றுள்ளது.

உலக மக்கள் தொகையில் பிரிக்ஸ் பங்கு 43 சதவீதமாகும். ஆனால் அது உலக மொத்த உற்பத்தியில் 21 சதவீதமேயாகும்.



தொகுப்புரை

பன்னாட்டு பொருளாதார நிறுவனங்களான பன்னாட்டுப் பணநிதியம், உலக வங்கி மற்றும் முதலில் காட் பிறகு உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றின், நோக்கங்கள், பணிகள், சாதனைகள் பற்றியது இந்த அத்தியாயம் ஆகும்.

இந்தியா இந்த நிறுவனங்களால் அடைந்த நன்மைகள் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டோம். மேலும் உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தங்களான TRIPS, TRIMS, GATS, AOA, MFA போன்றவற்றை புரிந்து கொண்டோம்.

இப்பகுதியின் இறுதியில் பன்னாட்டு வாணிக தொகுதிகளான சார்க் , ஆசியான், மற்றும் பிரிக்ஸ் போன்ற அமைப்புகளின் நோக்கங்கள், பணிகள் மற்றும் சாதனைகளையும் உள்ளடக்கியுள்ளது.




அருஞ்சொற்பொருள் 


* பொருளாதார கட்டமைப்பு மாற்றியமைப்புக் கடன் திட்டம் (Structural Adjustment Facility): ஏழைநாடுகளுக்கு சலுகைகளுடன் கூடுதல் அந்நிய செலாவணி கடன் உதவியை பேரினப் பொருளாதார மற்றும் பொருளாதார அமைப்புமுறைகளை மாற்றியமைக்கும் திட்டங்களுக்கு வழங்கும் திட்டமே பொருளாதார கட்ட அமைப்புமுறை மாற்றியமைப்புக் கடன் திட்டம் ஆகும்.

* சிறப்பு எடுப்புரிமைகள் (Special Drawing Rights): பன்னாட்டு பண நிதியத்துடன் கையிருப்பாக உள்ள உறுப்பினர் நாடுகளின் பணமே சிறப்பு எடுப்புரிமையாகும். உறுப்பினர் நாடுகளின் மூலதனப் பங்களவுக்கும் கூடுதலாக நிதியத்தின் இருப்புக் கணக்கில் பராமரிக்கும் தொகையாகும்.

* வாணிகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை (Trade Related Intellectual Property Rights): பதிப்புரிமை , வணிக முத்திரை, காப்புரிமை, புவிசார் குறியீடு, தொழில் ரகசியம் , உற்பத்தி வடிவமைப்பு போன்ற அறிவுசார் சொத்துரிமைக்கு தனிசொத்து போல் வழங்கப்படும் விற்கும் மற்றும் வாங்கும் உரிமையே அறிவுசார் சொத்துரிமை

* வாணிகம் தொடர்புடைய முதலீட்டு வழிமுறைகள் (Trade Related Investment Measures): வெளிநாட்டு முதலீட்டாளரும் உள்நாட்டு முதலீட்டாளரும் சமமாக கருதப்படவேண்டும் என வலியுறுத்தும் ஒப்பந்தம். ஒரு நாட்டின் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் உரிமைகளும் சலுகைகளும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்று இந்த ஒப்பந்தம் கூறுகிறது.

* பலதரப்பு வாணிக ஒப்பந்தம் (Multilateral Trade Agreement): பன்னாட்டு வாணிக ஒத்துழைப்புத் தொகுதிகள் (Trade Blocks) பன்னாட்டு வாணிகத்தில் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயல்படும் நாடுகளின் கூட்டமைப்பு வழக்கமாக தடையற்ற வாணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு செயல்படுபவர்கள்.

* பன்னாட்டு வர்த்தக தொகுதிகள் (Trade Blocks): நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தி வணிகத் தடைகளை நீக்க உருவான அமைப்பாகும். 

* தடையற்ற வர்த்த கப் பகுதி (Free Trade Area): ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட உறுப்பினர் நாடுகளின் மண்டலம். வாணிகத்தடைகளை குறைக்க ஒத்துழைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் போடப்படுகிறது.

* சுங்கவரி ஒன்றியம் (Customs Union): உறுப்பினர்களுக்கிடையிலான வாணிகத்தில் வரிவிதிக்காமலும் உறுப்பினரல்லாதவர்களுடனான வாணிகத்தில் பொது சுங்கவரி விதிக்கும் அமைப்பே சுங்கவரி ஒன்றியம் எனப்படுகிறது.

* பொது சந்தை (Common Market): புவியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அமைந்துள்ள நாடுகள் தடையற்ற வாணிகம் மற்றும் உற்பத்திக் காரணிகள் இடப்பெயர்வுக்காக அமைக்கும் அமைப்பே பொது சந்தை ஆகும்.

* பொருளாதார ஒன்றியம் (Economic Union): பொது சந்தையையும் சுங்கவரி ஒன்றியத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்படும் அமைப்பே பொருளாதார ஒன்றியம். பொருள் உற்பத்தி, பணிகள் உற்பத்தி, பொருள், பணிகள், காரணிகள் இடபெயர்வு மற்றும் பொதுவான உறுப்பினரல்லாத நாடுகள் வாணிகத்தின் மீது வரி ஆகிய அனைத்தும் பொருளாதார ஒன்றியத்தில் அடங்கும்

Tags : International Economic Organisations பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்.
12th Economics : Chapter 8 : International Economic Organisations : BRICS International Economic Organisations in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 8 : பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் : பிரிக்ஸ் நாடுகள் (BRICS) - பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 8 : பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்