Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு சங்கம் (SAARC)

பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் - தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு சங்கம் (SAARC) | 12th Economics : Chapter 8 : International Economic Organisations

   Posted On :  16.03.2022 08:03 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 8 : பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்

தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு சங்கம் (SAARC)

வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய ஏழு நாடுகள் இதன் உறுப்பு நாடுகளாகும். ஏப்ரல் 2007ல் ஆப்கானிஸ்தான் எட்டாவது நாடாக இதில் இணைந்தது

தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு சங்கம் (SAARC)

தெற்காசிய நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்புக்காக துவக்கப்பட்ட அமைப்பு தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு அமைப்பு ஆகும். இந்த நாடுகளின் பொருளாதார சமூக, பண்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்காகவும் மற்ற வளரும் நாடுகளுடன் நட்புறவுவை வளர்த்துக் கொள்ளவும் டிசம்பர் 8, 1985 ல் அமைக்கப்பட்டது.

வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய ஏழு நாடுகள் இதன் உறுப்பு நாடுகளாகும். ஏப்ரல் 2007ல் ஆப்கானிஸ்தான் எட்டாவது நாடாக இதில் இணைந்தது ஒப்பந்தத்தில் உறுப்பினர் நாடுகள் ஏற்றுக் கொண்ட பிரிவுகளில் ஒத்துழைப்பு கொடுத்து ஒன்று சேர்ந்து செயல்பட்டு பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு அடைவதே சார்க் அமைப்பின் அடிப்படை குறிக்கோள். நேபாள் தலைநகரம் காட்மண்டு இதன் தலைமைச் செயலகமாகக் கொண்டு ஜனவரி 16, 1987ல் செயல்பட துவங்கியது. முதல் உச்சி மாநாடு வங்காளதேசம் தலைநகரம் தாக்காவில் 1985ல் நடைபெற்றது. இரண்டாண்டுக் கொருமுறை உச்சி மாநாடு நடைபெறுகிறது. 20ஆவது உச்சிமாநாடு இலங்கையில் 2018ல் நடைபெற்றது.


ஆரம்பத்தில் வங்காளதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய ஏழு நாடுகள் இணைந்து ஆரம்பித்தன. ஏப்ரல் 3, 2007க்கு பிறகு ஆப்கானிஸ்தான் இணைந்தது.



1. சார்க் அமைப்பின் நோக்கங்கள்

சார்க் ஒப்பந்தத்தின் முதலாவது பிரிவின்படி அதன் நோக்கங்களாவன

i) தெற்காசிய மக்களின் பொதுநலம் காத்தல் மற்றும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல்

ii) தெற்காசிய மண்டலத்தின் பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு வளர்ச்சியை துரிதப்படுத்துதல்

iii) தெற்காசிய நாடுகளின் கூட்டு தற்சார்பை உறுதிப்படுத்துதல்

iv) மண்டலத்தில் உள்ள நாடுகள் ஒருவருக்கொருவர் மீது நம்பிக்கை ஏற்பட, புரிந்து கொள்ள மற்றும் பிரச்சினைகளை உணர்ந்து கொள்ள இயன்றதை செய்தல்

v) பொருளாதார, சமூக, பண்பாடு, தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் துறைகளில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுதல் மற்றும் செயல் திறனுடன் ஒத்துழைத்தல் 

vi) உறுப்பினரல்லாத வளரும் நாடுகளுடன் ஒத்துழைப்பை உறுதிப்படுத்துதல் 

vii) ஒரே நோக்கங்களுடன் செயல்படும் பிராந்திய மற்றும் உலக நாடுகளுடன் ஒத்துழைப்பு நல்குதல்.



2. சார்க் அமைப்பின் பணிகள் (Functions of SAARC)

சார்க்கின் பணிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

1. தெற்காசிய நாடுகளின் ஒத்துழைப்பை பராமரித்தல் 

2. உறுப்பினர் நாடுகளின் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுதல்

3. உறுப்பினர் நாடுகளிடையிலான உறவை மேம்படுத்துதல் 

4. வறுமை ஒழிப்புத்திட்டங்கள் மூலம் ஏழ்மையை ஒழிப்பது 

5. பயங்கரவாத செயல்களை தடுப்பது.



3. சார்க்கின் சாதனைகள் (Achievements of SAARC) 

1. சார்க் முன்னுரிமை பன்னாட்டு வாணிக ஒப்பந்தம் (SAPTA) நிறுவப்பட்டு இறக்குமதி மீதான தடைகள் குறைக்கப்பட்டது முதல் சாதனையாகும்

2. வேளாண்மை, தொலைத்தொடர்பு, கல்வி, சுகாதாரம், ஊரக மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், சுற்றுலா போன்ற துறைகளில் உறுப்பினர் நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பைப் பெற தனிநுட்பக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

3. வறுமை குறைக்கும் திட்டங்கள் பற்றிய தகவல்களை சேகரித்து உறுப்பினர் நாடுகளிடம் பகிர்ந்து கொள்ள மூன்றடுக்கு கட்டமைப்பு நிறுவப்பட்டது.

4. விவசாயம், மீன்வளம் மற்றும் வனவளம் போன்ற முதன்மைத் துறைகளின் தகவல் அலுவலகமாக சார்க் வேளாண் தகவல் மையம் (SAIC) 1988 லிருந்து செயல்பட்டு வருகிறது.

5. பொருளாதார மேம்பாடு, மனித வள மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க தெற்காசிய மேம்பாட்டு நிதியம் (South Asian Development Fund) என்ற அமைப்பைத் துவக்கியது ஒரு சாதனையாக கருதலாம். வாணிகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. மேலும் சார்க் உறுப்பு நாடுகளின் மொத்த பன்னாட்டு வாணிகத்தில் உறுப்பு நாடுகளுக்கிடையிலான வாணிகம் மூன்று விழுக்காடு மட்டுமே.


Tags : International Economic Organisations பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்.
12th Economics : Chapter 8 : International Economic Organisations : South Asian Association For Regional Co-Operation (SAARC) International Economic Organisations in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 8 : பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் : தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு சங்கம் (SAARC) - பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 8 : பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்