Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | உயிரிதொழில்நுட்பவியல் - போட்டித் தேர்வு கேள்விகள்
   Posted On :  18.12.2022 04:03 pm

12 வது தாவரவியல் : போட்டித் தேர்வு கேள்விகள்

உயிரிதொழில்நுட்பவியல் - போட்டித் தேர்வு கேள்விகள்

தாவரவியல் : போட்டித் தேர்வு கேள்விகள்

போட்டித் தேர்வு கேள்விகள்


உயிரிதொழில்நுட்பவியல்


1. இழும மின்னாற்பிரித்தலின் போது அகரோஸ் இழுமத்தின் மீது DNA துண்டுகள் நகர்வதற்கான அளவுகோல் யாது?

அ) சிறிய அளவு துண்டுகள் அதிக தூரம் இடம் நகர்கின்றன.

ஆ) நேர்மின்சுமை உடைய துண்டுகள் மிகத் தொலைவிலுள்ள முனைக்கு நகரும்.

இ) எதிர்மின்சுமை உடைய துண்டுகள் நகர்வதில்லை.

ஈ) பெரியளவு துண்டுகள் அதிக தூரம் இடம் நகர்கின்றன.

விடை : அ) சிறிய அளவு துண்டுகள் அதிக தூரம் இடம் நகர்கின்றன.

 

2. கலக்கி தொட்டி உயிரிஉலைகலன்கள் __________ க்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

அ) உற்பத்திப் பொருட்களை சுத்தப்படுத்துவதற்கு

ஆ) உற்பத்திப் பொருட்களில் பதப்படுத்திகளைச் சேர்ப்பதற்காக

இ) செயல்முறை முழுவதற்கும் ஆக்சிஜன் கிடைக்கச் செய்வதற்காக

ஈ) வளர்ப்புக்கலனில் காற்றில்லா நிலையை உறுதி செய்வதற்காக

விடை : இ) செயல்முறை முழுவதற்கும் ஆக்சிஜன் கிடைக்கச் செய்வதற்காக

 

3. பின்வருவனவற்றுள் எது கீழ்கால் பதப்படுத்துதல் செயல்முறையின் பகுதிக்கூறுகள் அல்ல?

அ) பிரித்தெடுத்தல்

ஆ) சுத்தப்படுத்தல்

இ) பதப்படுத்துதல்

ஈ) வெளிப்படுத்துதல்

விடை : ஈ) வெளிப்படுத்துதல்

 

4. பின்வருவனவற்றில் எது பிளாஸ்மிட்டின் பண்பு அல்ல?

அ) மாற்றத்தக்கது

ஆ) ஒற்றை இழை

இ) சுயமாக பெருக்கமடையக்கூடியது

ஈ) வட்ட அமைப்பு

விடை : ஆ) ஒற்றை இழை

 

5. பின்வருவனவற்றில் தற்போதைய DNA விரல்பதிவு தொழில்நுட்பமுறையில் தேவைப்படாதது எது?

அ) தடைகட்டு நொதிகள்

ஆ) DNA – DNA கலப்பினமாக்கல்

இ) பாலிமரேஸ் சங்கிலி வினை

ஈ) துத்தநாக விரல் பகுப்பாய்வு

விடை : ஈ) துத்தநாக விரல் பகுப்பாய்வு


6. எந்த தாங்கிக்கடத்தி ஒரு சிறிய DNA துண்டினை நகலாக்கம் செய்ய இயலும் ?

அ) பாக்டீரிய செயற்கை குரோமோசோம்

ஆ) ஈஸ்ட் செயற்கை குரோமோசோம்

இ) பிளாஸ்மிட்

ஈ) காஸ்மிட்

விடை : இ) பிளாஸ்மிட்  

 

7. DNA பிரித்தெடுக்கும் செயலின் போது குளிர்ந்த எத்தனால் சேர்க்கப்படுவது.

அ) DNAவை வீழ்ப்படிவமாக்க

ஆ) செல் பிளவுற்று DNA வை வெளியேற்ற

இ) தடைகட்டு நொதியின் செயல்பாட்டிற்கு வழிவகுக்க

ஈ) ஹிஸ்டோன்கள் போன்ற புரதங்களை நீக்குவதற்கு

விடை : அ) DNAவை வீழ்ப்படிவமாக்க

 

8. மரபணு மாற்றத்தில் மரபணு துப்பாக்கி கொண்டு தாக்கக்கூடிய DNA வில் பூசப்பட்ட நுண்துகள்கள் எதனால் ஆனது?

அ) வெள்ளி அல்லது பிளாட்டினம்

ஆ) பிளாட்டினம் அல்லது துத்தநாகம்

இ) சிலிக்கான் அல்லது பிளாட்டினம்

ஈ) தங்கம் அல்லது டங்ஸ்டன்

விடை : ஈ) தங்கம் அல்லது டங்ஸ்டன்

 

9. பயோலிஸ்ட்டிக் (மரபணு துப்பாக்கி) எதற்கு பொருத்தமானது?

அ) தீங்கற்ற நோய்க்காரணிகளுக்குத் தாங்கிக்கடத்திகள்

ஆ) தாவர செல்களை மாற்றியமைத்தல்

இ) தாங்கிக்கடத்திகளுடன் இணைந்து மறுகூட்டிணைவு DNA வை உருவாக்குதல்

ஈ) DNA வின் விரல் பதிவு

விடை : ஆ) தாவர செல்களை மாற்றியமைத்தல்

 

10. மரபணுப் பொறியியலினால் இயலும். ஏனெனில்

அ) பாக்டீரிய ஊடுகடத்தல் (transduction) அறிந்ததே

ஆ) மின்னணு நுண்ணோக்கியினால் நாம் DNA வைக் காணலாம்

இ) DNAase – I போன்ற எண்டோநியூக்ளியேஸினால் DNA வைக் குறிப்பிட்ட இடங்களில் துண்டிக்கலாம்

ஈ) பாக்டீரியாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட ரெஸ்ட்ரிக்ஷன் எண்டோநியூக்ளியேஸ் ஆய்வுக்கூட சோதனை வளர்ப்பில் பயன்படுத்தலாம்

விடை : ஈ) பாக்டீரியாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட ரெஸ்ட்ரிக்ஷன் எண்டோநியூக்ளியேஸ் ஆய்வுக்கூட சோதனை வளர்ப்பில் பயன்படுத்தலாம்

 

 

11. மரபணுப் பொறியியல்

அ) செயற்கை மரபணுவை உருவாக்குதல்

ஆ) ஒரு உயிரினத்தின் DNAவைமற்றொன்றுடன் கலப்பினமாக்கம் செய்தல் 

இ) நுண்ணுயிர்களைப் பயன்படுத்தி ஆல்கஹால் உற்பத்தி செய்தல்

ஈ) ECG, EFG போன்ற கண்டறிய உதவும் கருவிகள், செயற்கை அங்கங்கள் உருவாக்குவதற்கு

விடை : ஆ) ஒரு உயிரினத்தின் DNAவைமற்றொன்றுடன் கலப்பினமாக்கம் செய்தல்

 

12. லைகேஸ் எதற்கு பயன்படுகிறது.

அ) இரண்டு DNA துண்டுகளை இணைப்பதற்கு

ஆ) DNA வை பிரிப்பதற்கு

இ) DNA பாலிமரேஸ் வினையில்

ஈ) இவை அனைத்திலும்.

விடை : அ) இரண்டு DNA துண்டுகளை இணைப்பதற்கு

 

13. மரபணுப் பொறியியல், தாங்கிக்கடத்தி வழியாக விரும்பத்தக்க மரபணுவை ஓம்புயிர் செல்லுக்கு மாற்றப்படுகிறது. இதை சார்ந்து பின்வரும் நான்கினை (1 - 4) கருத்தில் கொண்டு, எந்த ஒன்று அல்லது பல தாங்கிக்கடத்திகளாக பயன்படுத்தப்படுகிறது என்பதில் சரியான விடையை தெரிவு செய்க

1. பாக்டீரியம்

2. பிளாஸ்மிட்

3. பிளாஸ்மோடியம்

4. பாக்டீரியோஃபாஜ்

அ) 1 மற்றும் 4 மட்டும்

ஆ) 2 மற்றும் 4 மட்டும்

இ) 1 மட்டும்

ஈ) 1 மற்றும் 3 மட்டும்.

விடை : ஆ) 2 மற்றும் 4 மட்டும்

 

14. எதிர் DNA இழையின் கார தொடர்வரிசைகளின் ஒரு பகுதி, மாதிரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் காண்பிக்கப்பட்டுள்ள சிறப்பு யாது?

5'... GAATTC ... 3' 3'... CTTAAG ... 5'

அ) பாலியாண்ட்ரோம் தொடர்வரிசைகளின் கார இணைகள்

ஆ) பெருக்கமடைதல் நிறைவுற்றது.

இ) நீக்கல் சடுதி மாற்றம்

ஈ) 5 முனை தொடக்க குறியன்

விடை : அ) பாலியாண்ட்ரோம் தொடர்வரிசைகளின் கார இணைகள்

 

15. EcoR I ஒரு ரெஸ்ட்ரிக்ஷன் எண்டோ எ இயூக்ளியேஸ். இதில் co பகுதி எதைக் குறிக்கிறது

அ) சீலோம்

ஆ) கோலன்

இ) கோலை

ஈ) இணை நொதி

விடை : இ) கோலை

 

16. கீழே pBR 322 தாங்கிக்கடத்தியின் படவிளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பகுதி கூறுகளை அடையாளம் காண பின்வரும் ஒன்றில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக


அ) Ori உண்மையான ரெஸ்ட்ரிக்ஷன் நொதிகள்

ஆ) ropசவ்வூடு பரவல் அழுத்தம் குறைக்கப்பட்டது.

இ) Hind III, EcoR I – தெர்ந்தெடுக்கும் அடையாளக்குறி

ஈ) ampR,tetR - உயிரி எதிர்ப்பொருள் தடுப்பு மரபணு

விடை : ஈ) ampR,tetR - உயிரி எதிர்ப்பொருள் தடுப்பு மரபணு

 

17. a+b = c , a > b மற்றும் d > c மூலக்கூறு எடை உடைய a , b, c , d ஆகிய DNA துண்டுகளைக் அக்ரோஸ் இழும் மின்னாற்பிரித்தலுக்கு உட்படுத்தப்படும் போது , இழுமத்தில் எதிர்மின்வாயில் இருந்து நேர்மின்வாய் நோக்கி இந்த துண்டுகளின் வரிசை

அ) b, a, c, d

ஆ) a, b, c, d

இ) c, b, a, d

ஈ) b, a ,d, c

விடை : அ) b, a, c, d

 

18. சதர்ன் கலப்பினமாக்கல் தொழில்நுட்பமுறையைப் பயன்படுத்தும் குரோமோசோம் பகுப்பாய்வில் இது பயன்படுத்தப்படுவதில்லை .

அ) மின்னாற்பிரிப்பு

ஆ) ஒற்றியெடுப்பு

இ) தானியங்கு கதிரியக்க படமெடுப்பு

ஈ) PCR

விடை : ஈ) PCR

 

19. மறுகூட்டிணவை இல்லாத பாக்டீரியாவின் நீல காலனியிலிருந்து கூட்டிணைவு பெற்ற காலணிகளின் வேறுபட்டு வெண்மையாகத் தோன்றுகிறது. ஏனெனில்

அ. மறுக்கூட்டிணைவு அல்லாத பாக்டீரியா பீட்டா காலக்டோசிடேஸினைக் கொண்டுள்ளது

ஆ. மறுகூட்டிணைவு அல்லாத பாக்டீரியத்தின் ஆல்ஃபா காலக்டோசிடேஸின் உட்செருகதல் செயலிழப்பு

இ. மறுகூட்டிணைவு பாக்டீரியத்தின் பீட்டா காலக்டோசிடேஸின் உட்செருகதல் செயலிழப்பு

ஈ. மறுக்கூட்டிணைவு பாக்டீரியத்தின் கிளைக்கோசிடேஸ் நொதியின் செயலிழப்பு

விடை : இ. மறுகூட்டிணைவு பாக்டீரியத்தின் பீட்டா காலக்டோசிடேஸின் உட்செருகதல் செயலிழப்பு

 

20. பின்வரும் எந்த பாலியாண்ட்ரோம் DNA காரதொடர்வரிசையினை குறிப்பிட்ட ரெஸ்ட்ரிக்ஷன் நொதியினால் நடுவில் துண்டிக்க இயலும்

அ) 5' ... CGTTCG ... 3' 3'... ATCGTA ... 5'

ஆ) 5'... GATATG ... 3' 3'... CTACTA .... 5'

இ) 5'... GAATTC ...3' 3'... CTTAAG .... 5'

ஈ) 5'....CACGTA ...3' 5' .... CTCAGT ...3'

விடை : இ) 5'... GAATTC ...3' 3'... CTTAAG .... 5'

 

21. மரபணு மாற்றப்பட்ட தாவரங்களை உற்பத்தி செய்வதற்கு வெளிப்படா mRNA வானது பயன்படுத்தப்படுகிறது. இது எதற்கு எதிர்ப்புத் திறனைப் பெற்றுள்ளது.

அ) காய்புழுக்கள்

ஆ) நெமட்டோடுகள்

இ) வெண்புழுக்கள்

ஈ) பாக்டீரிய வெப்பு நோய்

விடை : ஆ) நெமட்டோடுகள்

 

22. Bt பருத்தியின் சில பண்புகளாவன

அ) நீண்ட இழை மற்றும் அசுவினி தடுப்பு

ஆ) நடுத்தர விளைச்சல், நீண்ட இழை மற்றும் வண்டு பூச்சிகளுக்கு தடுப்பு 

இ) அதிக விளைச்சல் மற்றும்டிப்தீரியாபூச்சிகளைக் கொல்லும் படிக நச்சு புரத உற்பத்தி

ஈ) அதிக விளைச்சல் மற்றும் காய்புழுவிற்கு எதிர்ப்பு

விடை : ஈ) அதிக விளைச்சல் மற்றும் காய்புழுவிற்கு எதிர்ப்பு

 

23. மரபணு மாற்றப்பட்ட பாசுமதி அரிசியின் மேம்படுத்தப்பட்ட ரகம்

அ) வளர்ச்சி ஹார்மோன்கள் மற்றும் வேதி உரங்கள் தேவைப்படுவதில்லை 

ஆ) அதிக மகசூல் மற்றும் வைட்டமின் A நிறைந்ததை கொடுக்கிறது

இ) நெல்லின் அனைத்து பூச்சிகள் மற்றும் நோய் ஆகியன முழுமையாக எதிர்ப்பவை

ஈ) அதிக மகசூல் கொடுக்கக்கூடியது. ஆனால் நறுமணமுடையது

விடை : ஆ) அதிக மகசூல் மற்றும் வைட்டமின் A நிறைந்ததை கொடுக்கிறது

 

24. வைட்டமின் A பற்றாக்குறையுடன் ஒருங்கிணைந்த நிறக்குருடு வகை பின்வரும் எந்த உணவினை உட்கொள்வதால் தடுக்கப்படுகிறது.

அ) ஃபிளேவர் சேவர்

ஆ) கேனாலா

இ) தங்கநிற அரிசி

ஈ) Bt கத்தரிக்காய்

விடை : இ) தங்கநிற அரிசி

 

25. புரோட்டோபிளாஸ்ட் என்பது ஒரு செல்

அ) பகுப்பு நடைபெறுகிறது

ஆ) செல் சுவர் அற்றது

இ) பிளாஸ்மா சவ்வு அற்றது

ஈ). உட்கரு அற்றது

விடை : ஆ) செல் சுவர் அற்றது

 

26. நுண்பெருக்கத் தொழில்நுட்பமுறையானது

அ) புரோட்டோபிளாச இணைவு

ஆ) கரு மீட்பு

இ) உடல் கலப்பினமாக்கல்

ஈ) உடல் கரு உருவாக்கம்

விடை : ஈ) உடல் கரு உருவாக்கம்

 

27. திசு வளர்ப்பு தொழில்நுட்பமுறையினால் ஒரு நோயுற்றத் தாவரத்திலிருந்து வைரஸ் அற்ற வளமான தாவரங்களை பெறுதலுக்கு , நோயுற்ற தாவரத்தின் எந்த பகுதி பயன்படுத்தப்படுகிறது?

அ) நுனி ஆக்குத் திசு மட்டும்

ஆ) பாலிசேட் பாரங்கைமா

இ) தண்டு நுனி மற்றும் கோண ஆக்குத் திசு இரண்டும்

ஈ) புறத்தோல் மட்டு.

விடை : இ) தண்டு நுனி மற்றும் கோண ஆக்குத் திசு இரண்டும்

 

28. செல்களின் முழுஆக்குத் திறன் இவரால் செயல்விளக்கம் தரப்பட்டது.

அ) தியோடர் ஸுவான்

ஆ) A.V. லூவான்ஹாக்

இ) F. C. ஸ்டீவர்டு

ஈ) இராபர்ட் ஹீக்

விடை : இ) F. C. ஸ்டீவர்டு

 

29. திசு வளர்ப்புத் தொழில்நுட்பமுறை பெற்றோர் தாவரத்தின் சிறிய திசுவிலிருந்து எண்ணிலடங்கா புதிய தாவரங்களை உற்பத்தி செய்கிறது. இத்தொழில்நுட்பமுறையின் பொருளாதார முக்கியத்துவம் உயர்கிறது.

அ) பெற்றோர் தாவரத்தை ஒத்த மரபியலில் ஒரே மாதிரியான தாவரத் தொகை

ஆ) ஒத்த அமைப்புடைய இருமடிய தாவரங்கள்

இ) புதிய சிற்றினங்கள்

ஈ) உடல் நகல் சார் வேறுபாடுகள் மூலம் தேர்ந்தெடுப்படும் வகைகள்

விடை : அ) பெற்றோர் தாவரத்தை ஒத்த மரபியலில் ஒரே மாதிரியான தாவரத் தொகை

 

30. உடல் கருவுருவாக்கத்தைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எந்தக் கூற்று சரியானது அல்ல

அ) உடல்சார் கருவளர்ச்சி பாங்கினை கருமுட்டையில் இருந்து உருவாகும் கருவுடன் ஒப்பிடுதல்

ஆ) நுண்வித்துக்களில் இருந்து உருவாகும் உடல்சார் கருக்கள்

இ) 2,4-D போன்ற ஆக்சின்களினால் பொதுவாக தூண்டப்படும் உடல்சார் கருக்கள்

ஈ) உடல் செல்களிலிருந்து உருவாகும் உடல்சார் கருக்கள்

விடை : ஆ) நுண்வித்துக்களில் இருந்து உருவாகும் உடல்சார் கருக்கள்

 

31. பின்வருவனவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க

அ) உடல் கலப்பினாக்கல் - இரு வேறுபட்ட கலப்பினப் செல்களின் இணைவு 

ஆ) தாங்கிக்கடத்தி DNA - tRNA உற்பத்திக்கான களம்

இ) நுண்பெருக்கம் - அதிகளவு தாவரங்களை ஆய்வுக்கூட சோதனை வளர்ப்பின் மூலம் உற்பத்தி செய்தல்.

ஈ) கேலஸ் - திசு வளர்ப்பில் உருவாகும் முறையற்ற செல்களின் தொகுப்பு

விடை : ஆ) தாங்கிக்கடத்தி DNA - tRNA உற்பத்திக்கான களம்

 

32. பாலி எத்தலீன் கிளைக்கால் முறை எதற்கு பயன்படுத்தப்படுகிறது?

அ) உயிரி டீசல் உற்பத்திக்கு

ஆ) விதைகள் அற்ற கனி உற்பத்திக்கு

இ) கழுவுநீரிலிருந்து ஆற்றல் உற்பத்திக்கு

ஈ) தாங்கிக்கடத்தி வழி அல்லாத மரபணு மாற்ற முறைக்கு

விடை : ஈ) தாங்கிக்கடத்தி வழி அல்லாத மரபணு மாற்ற முறைக்கு

 

33. உடல் சார் நகல்கள் இம்முறையில் பெறப்படுகிறது.

அ) தாவர பயிர் பெருக்கம்

ஆ) கதிர்வீச்சு முறை

இ) மரபணுப் பொறியியல் முறை

ஈ) திசு வளர்ப்பு முறை

விடை : ஈ) திசு வளர்ப்பு முறை

 

34. திசு வளர்ப்பு முறையின் மூளம் அதிக எண்ணிக்கையிலான நாற்றுருக்கள் பெறப்படும் தொழில்நுட்பமுறை ______ என அழைக்கப்படுகின்றன.

அ) நாற்றுரு வளர்ப்பு

ஆ) உறுப்பு வளர்ப்பு

இ) நுண்பெருக்கம்

ஈ) பெரும் பெருக்கம்

விடை : இ) நுண்பெருக்கம்

 

35. தாவரத் திசு வளர்ப்பிற்கு பயன்படுத்தப்படும் இளநீரில் அடங்கியுள்ளவை ____ ஆகும்.

அ) சைட்டோகைனின்

ஆ) ஆக்சின்

இ) ஜிப்ரலின்கள்

ஈ) எத்திலீன்

விடை : அ) சைட்டோகைனின்

 

36. ___ வளர்ப்பிலிருந்து ஒருமடியத் தாவரங்கள் கிடைக்கின்றன.

அ) மகரந்தத் துகள்கள்

ஆ) வேர் நுனிகள்

இ) இளம் இலைகள்

ஈ) கருவூண் திசு

விடை : அ) மகரந்தத் துகள்கள் 

12th Botany : Competitive Examination Questions : Biotechnology - Competitive Examination Questions in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : போட்டித் தேர்வு கேள்விகள் : உயிரிதொழில்நுட்பவியல் - போட்டித் தேர்வு கேள்விகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : போட்டித் தேர்வு கேள்விகள்