Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | மரபியல் - போட்டித் தேர்வு கேள்விகள்
   Posted On :  11.08.2022 06:49 pm

12 வது தாவரவியல் : போட்டித் தேர்வு கேள்விகள்

மரபியல் - போட்டித் தேர்வு கேள்விகள்

தாவரவியல் : போட்டித் தேர்வு கேள்விகள்

போட்டித் தேர்வு கேள்விகள்


மரபியல்

 

1. சைட்டோபிளாச ஆண் மலட்டுத்தன்மை உடைய தாவரங்களில் மரபணுக்கள் அமைந்திருக்குமிடம்

அ) மைட்டோகாண்ட்ரியா மரபணுத் தொகையம்

ஆ) சைட்டோசால்

இ) பசுங்கணிக மரபணுத் தொகையம்

ஈ) நியூக்ளியார் மரபணுத் தொகையம்

விடை : அ) மைட்டோகாண்ட்ரியா மரபணுத் தொகையம்

 

2. நீவிர் அறிந்த எந்த வகை பாரம்பரியத்தில் அதிகளவு தாய்வழியின் தாக்கம் சந்ததி களிடையே காணப்படுகிறது?

அ) ஆட்டோசோமல்

ஆ) சைட்டோபிளாஸ்மிக்

இ) Y- இணைந்தது

ஈ) X-இணைந்தது

விடை : ஆ) சைட்டோபிளாஸ்மிக்

 

3. பின்வருவனவற்றுள் மெண்டலின் ஓங்கு பண்பு விதியின் அடிப்படையில் விளக்க இயலாத கூற்று எது?

அ) காரணிகள் இணைகளாகக் காணப்படும்

ஆ) ஒரு குறிப்பிட்ட பண்பினை கட்டுப்படுத்தும் தனிப்பட்ட அலகு காரணி என்று அழைக்கப்படுகின்றது

இ) ஒரு இணை காரணிகளில் ஒரு காரணி ஓங்கியும், மற்றொன்று ஒடுங்கியும் காணப்படும்

ஈ) அல்லீல்கள் எந்நிலையிலும் கலப்புறா வண்ணம் இரு பண்புகள் மீளவும் F2 சந்ததியில் காணப்படும்

விடை : ஈ) அல்லீல்கள் எந்நிலையிலும் கலப்புறா வண்ணம் இரு பண்புகள் மீளவும் F2 சந்ததியில் காணப்படும்

 

4. மெண்டலின் எந்த சோதனையில் F2 தலைமுறையின் போது 1:2:1 எந்த விகிதாசாரம் மரபணுவாக்க மற்றும் புறத்தோற்ற வகையை ஒத்துள்ளது?

அ) ஒரு பண்புக் கலப்பில் முழுமையற்ற ஓங்குத்தன்மை

ஆ) இணை ஓங்குத்தன்மை

இ) இரு பண்புக் கலப்பு

ஈ) ஒரு பண்புக் கலப்புடன் முழுமையான

விடை : அ) ஒரு பண்புக் கலப்பில் முழுமையற்ற ஓங்குத்தன்மை

 

5. ஒரு பிளியோட்ரோபிக் மரபணுவானது

அ) ஒரு உயிரினத்தில் பல பண்புகளைக் கட்டுப்படுத்தும்

ஆ) தொன்மைதாவரங்களை மட்டும் வெளிப்படுத்த

இ) பிளியோசீன் காலத்திலிருந்து பரிணமித்த மரபணுவாகும்

ஈ) மற்றுமொரு - மரபணு கூட்டமைப்பில் மட்டும் ஒரு பண்பைக் கட்டுப்படுத்தும்

விடை : அ) ஒரு உயிரினத்தில் பல பண்புகளைக் கட்டுப்படுத்தும்

 

6. ஒரு தூயகால்வழித் தாவரம் என்பது

அ) ஒத்த பண்பிணைவு மற்றும் தன்னை ஒத்த சந்ததி உருவாக்கம்.

ஆ) எப்போதும் ஒடுங்குத் தன்மை ஒத்தப்பண்பிணைவு மரபிய கட்டமைப்பு இ) ஒத்த வகைய பெருகவல்ல ஓரமைப்பு

ஈ) தொடர்பற்ற தாவரங்களுக்கிடையே அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் உருவாகும் தாவரம்

விடை : அ) ஒத்த பண்பிணைவு மற்றும் தன்னை ஒத்த சந்ததி உருவாக்கம்.

 

7. தரசத்திற்கு பதிலாக சர்க்கரையைப் பெற்றிருந்ததால் பட்டாணித் தாவரத்தில் சுருங்கிய விதைகளை மெண்டல் பெற்றார். இதற்கு காரணமான நொதி யாது?

அ) அமைலேஸ்

ஆ) இன்வர்டேஸ்

இ) டையஸ்டேஸ்

ஈ) தரச கிளைத்தல் நொதி இல்லாமை

விடை : ஈ) தரச கிளைத்தல் நொதி இல்லாமை

 

8. நிரப்பு மரபணுவின் விகிதம் ?

அ) 9:3:4

ஆ) 12:3:1

இ) 9:3:3:4

ஈ) 9:7

விடை : ஈ) 9:7

 

9. 333 அமினோ அமிலத்தைக் கொண்ட ஒரு RNA 999 காரத்தைக் கொண்டிருக்கிறது. இதில் 901 அமைவிடத்தில் இருக்கும் காரம் நீக்கப்பபட்டு 998 காரங்களானால், எத்தனை குறியன்களில் மாறுபாடு நிகழும்?

அ) 1

ஆ) 11

இ) 33

ஈ) 333

விடை : ஈ) 333

 

10. ஒத்த பண்பிணைவு சிவப்பு மலருடைய ஒரு தாவரத்தை ஒத்த பண்பிணைவு கொண்ட வெள்ளை மலருடைய தாவரத்துடன் கலப்புறுத்தம் செய்யும் போது கிடைக்கும் சந்ததி

அ) பாதி வெள்ளை மலருடையது

ஆ) பாதி சிவப்பு மலருடையது

இ) அனைத்தும் வெள்ளை மலருடைந்து

ஈ) அனைத்தும் சிவப்பு மலருடையது

விடை : ஈ) அனைத்தும் சிவப்பு மலருடையது

 

11. இரு தாவரங்களுக்கிடையே நிகழும் இருப்பண்பு சோதனைக் கலப்பினால் உருவாகும் விகிதமானது?

அ) 2:1

ஆ ) 1:2:1

இ) 3:1

ஈ) 1:1:1:1

விடை : ஈ) 1:1:1:1

 

12. தூயகால்வழிப் பெருக்கம் எதைக் குறிக்கிறது?

அ) மாற்று பண்பிணைவுத்தன்மை மட்டும்

ஆ) மாற்று பண்பிணைவுத்தன்மை மற்றும் பிணைப்பு

இ) ஒத்த பண்பிணைவுத்தன்மை மட்டும்

ஈ) ஒத்த பண்பிணைவுத்தன்மை மற்றும்

விடை : இ) ஒத்த பண்பிணைவுத்தன்மை மட்டும்

 

13. சுயசார்பின்மை AABBCC x aabbcc கலப்பில் உருவாகும் முதல் மகவுச்சந்ததியில் எத்தனை மாறுபட்ட கேமீட்கள் தோன்றுகின்றன?

அ) 3

ஆ) 8

இ) 27

ஈ) 64

விடை : ஆ) 8

 

14. கீழ்காண்பவைகளுள் எச்சூழலில் இணை ஓங்குத்தன்மை மரபணுக்களைக் குறிப்பிடுகிறது?

அ) ஒரு மரபணு வெளிப்பாடடையும் போது புறத்தோற்ற வகைய விளைவை அல்லீல்கள் மறைக்கிறது.

ஆ) அல்லீல்கள் இரண்டும் இடைசெயலினால் ஒரு பண்பை வெளிப்படுத்தும். இப்பண்பு அதன் ஒவ்வொரு பெற்றோரை ஒத்தோ அல்லது ஒத்திருக்காமலோ காணப்படும்

இ) ஏதேனும் பெற்றோரை சார்ந்தோ அல்லது சாராமலோ உள்ள பண்புக் கூறில் உள்ள இரு அல்லீல்கள்

ஈ) அல்லீல்கள் ஒவ்வொன்றும் மாற்று பண்பிணைவு நிலையில் அதன் தனித்த தாக்கத்தை உண்டு பண்ணுகின்றன

விடை : ஈ) அல்லீல்கள் ஒவ்வொன்றும் மாற்று பண்பிணைவு நிலையில் அதன் தனித்த தாக்கத்தை உண்டு பண்ணுகின்றன

 

15. 'A வை ஓங்கு அல்லீலாகவும், a வை ஒடுங்கு அல்லீலாகவும் கொண்டு முதல் மகவுச்சந்ததியில் Aaவை aaவுடன் கலப்புறச் செய்யும் போது பெரும்பாலும் வெளிப்படுவது

அ) அனைத்தும் ஓங்குதன்மை புறத்தோற்ற வகையத்தை வெளிப்படுத்தும் 

ஆ) அனைத்தும் ஒடுங்குத்தன்மை புறத்தோற்ற வகையத்தை வெளிப்படுத்தும்

இ) 50%விழுக்காடாக இருவகையமும் முறையே ஓங்குத்தன்மை மற்றும் ஒடுங்குத்தன்மை புறத்தோற்ற வகையங்களை வெளிப்படுத்தம்

ஈ) 75% ஒங்குத்தன்மை புறத்தோற்ற வகையத்தை வெளிப்படுத்தும்

விடை : இ) 50%விழுக்காடாக இருவகையமும் முறையே ஓங்குத்தன்மை மற்றும் ஒடுங்குத்தன்மை புறத்தோற்ற வகையங்களை வெளிப்படுத்தம்

 

16. பைசம் சட்டைவம் 14 குரோமோசோம்களைப் பெற்றுள்ள நிலையில் எத்தனை வகை ஓரிணைகள் காணப்படுகின்றன?

அ) 14

ஆ) 7

இ) 214

ஈ) 210

விடை : ஆ) 7

 

17. கி.பி. 1900ஆம் ஆண்டு மரபிலாளர்களுக்கு அதீத முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில்?

அ) மரபணுக்களின் கண்டுபிடிப்பு

ஆ) பிணைப்பு நெறிமுறைகள்

இ) பாரம்பரியத்தில் குரோமோசோம் கோட்பாடு

ஈ) மெண்டலிய மறு கண்டுபிடிப்பு

விடை : ஈ) மெண்டலிய மறு கண்டுபிடிப்பு

 

18. முப்பண்புக் கலப்பின் இரண்டாம் மகவுச்சந்ததி புறத்தோற்ற வகைய விகிதம்?

அ) 27:9:9:9:3:3:3:1

ஆ) 9:3:3:1

இ) 1:4:6:4:1

ஈ) 27:9:3:3:9:1:2:1

விடை : அ) 27:9:9:9:3:3:3:1

 

19. சடுதிமாற்ற நிகழ்வில் குவானைனுக்கு பதிலாக அடினைன் உருவாவது என்பது

அ) கட்டநகர்வு சடுதிமாற்றம்

ஆ) படியெடுத்தல்

இ) மரபுச் செய்திப் பெயர்வு

ஈ) இடைமாற்றம்

விடை : இ) மரபுச் செய்திப் பெயர்வு

 

20. சடுதிமாற்றம் எதனுடன் தூண்டப்படுகிறது?

அ) காமா கதிர்வீச்சுகள்

ஆ) அகச்சிவப்பு கதிர்வீச்சுகள்

இ) IAA

ஈ) எத்திலீன்

விடை : அ) காமா கதிர்வீச்சுகள்

 

21. மரபணு ஒரு பிணைப்புற்ற தொகுதியிலிருந்து மற்றொன்றிற்கு மாறும் செயல் இவ்வாறு அழைக்கப்படுகிறது

அ) தலைகீழ் இடமாற்றம்

ஆ) குறுக்கேற்றம்

இ) தலைகீழ் திருப்பம்

ஈ) இரட்டிப்பாதல்

விடை : அ) தலைகீழ் இடமாற்றம்

 

22 ஒரு புள்ளி சடுதிமாற்றத்தில் பிரிமிட்டினால் பியூரின் பதிலீடு செய்யப்படுவது இவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) மாற்றம்

ஆ) தலைகீழ் இடமாற்றம்

இ) நீக்கம்

ஈ) இடைமாற்றம்

விடை : ஈ) இடைமாற்றம்

 

23. கட்டநகர்வு சடுதிமாற்றம் காணப்படுவது எப்போது?

அ) காரங்கள் பதிலீடு செய்யும் போது

ஆ) கார நீக்கம் அல்லது சேர்த்தல்

இ) எதிர்குறியன்கள் காணப்படாதது

ஈ) இவற்றுள் எதுவுமில்லை

விடை : ஆ) கார நீக்கம் அல்லது சேர்த்தல்

 

24. ஒரு குரோமோசோமின் இரு மரபணுக்களுக்கு இடையே உள்ள தொலைவு குறுக்கேற்ற அலகுகளால் அளக்கப்படுகின்றன. இந்தக் குறுக்கேற்ற அலகுகள் குறிப்பிடுவது

அ) இவற்றிற்கிடையேயான குறுக்கேற்றத்தின் விகிதம்

ஆ) இவற்றிற்கிடையேயான குறுக்கேற்றத்தின் விழுக்காடு

இ) இவற்றிற்கிடையேயான குறுக்கேற்றத்தின் எண்ணிக்கை

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை : ஆ) இவற்றிற்கிடையேயான குறுக்கேற்றத்தின் விழுக்காடு

 

25. ஒரு மரபணு கூட்டத்திற்கு இடையேயான பிணைப்பு காணப்படின் அதன் செயல்பாடானது?

அ) குரோமோசோம் வரைபடம் காணப்படுவதில்லை

ஆ) குன்றல் பகுப்பின் போது காணப்படும் மறுகூட்டிணைவு

இ) சார்பின்றி ஒதுங்குதல் காணப்படுவதில்லை

ஈ) செல் பகுப்பைத் தூண்டும்

விடை : இ) சார்பின்றி ஒதுங்குதல் காணப்படுவதில்லை


26. மரபியல் வரைபடம் என்பதொரு

அ) குரோமோசோமின் மீதுள்ள மரபணுக்களின் நிலைகளைக் குறிப்பது

ஆ) வேறுபட்ட நிலைகளில் உள்ள மரபணுப் பரிணாமம்

இ) செல் பகுப்பின் பொழுது காணப்படும் நிலைகள்

ஈ) ஒரு பகுதியில் பரவி காணப்படும் வேறுபட்ட சிற்றினங்கள்

விடை : அ) குரோமோசோமின் மீதுள்ள மரபணுக்களின் நிலைகளைக் குறிப்பது

 

27. சடுதிமாற்றத்திற்கு பிறகு ஒரு உயிரினத்தின் மரபிய அமைவிடத்தில் உள்ள பண்புகளின் மாற்றத்திற்கு காரணமானவை?

அ) DNA இரட்டிப்பாதல்

ஆ) புரத உற்பத்தி முறை

இ) RNA படியெடுத்தல் முறை

ஈ) புரத அமைப்பு

விடை : ஈ) புரத அமைப்பு

 

28. அறுமடிய கோதுமையில் ஒற்றைமடிய (n) மற்றும் அடிப்படை (X) குரோமோசோம்களின் எண்ணிக்கை?

அ) n = 21 மற்றும் x = 7

ஆ ) n = 7 மற்றும் x = 21

இ) n = 21 மற்றும் x = 21

ஈ) n = 21 மற்றும் x = 14

விடை : அ) n = 21 மற்றும் x = 7

 

29. புள்ளி சடுதிமாற்றத்தில் காணப்படுவது?

அ) நீக்கம்

ஆ) செருகல்

இ) ஒற்றை கார இணையின் மாற்றம்

ஈ) இரட்டித்தல்

விடை : இ) ஒற்றை கார இணையின் மாற்றம்

 

30. சடுதி மாற்றத்தைப் பொருத்தமட்டில் எக்கூற்று தவறானது?

அ) புற ஊதா மற்றும் காமா கதிர்கள் சடுதி மாற்றக் காரணிகள்

ஆ) DNAவின் ஒரு கார இணையில் ஏற்படும் மாற்றம் சடுதிமாற்றத்தை ஏற்படுத்தாது

இ) நீக்கம் மற்றும் செருகல் கார இணையில் ஏற்படும் கட்ட நகர்வு சடுதி மாற்றம்

ஈ) குரோமோசோம் பிறழ்ச்சியினால் பொதுவாக காணும் புற்றுச் செல்கள்

விடை : ஆ) DNAவின் ஒரு கார இணையில் ஏற்படும் மாற்றம் சடுதிமாற்றத்தை ஏற்படுத்தாது

 

31. 50% மறுகூட்டிணைவு நிகழ்விரைவு காணப்படும் இரு மரபணுக்களில் கீழ்காணும் எந்த கூற்று உண்மையல்ல?

அ) மரபணுக்கள் வெவ்வேறு குரோமோசோம்களில் காணப்படுதல்

ஆ) நெருக்கமான நிலையில் பிணைந்துள்ள மரபணுக்கள்

இ) மரபணுக்கள் சார்பின்றி ஒதுங்கி காணப்படும்

ஈ) மரபணுக்கள் ஒரே குரோமோசோமில் அமைந்திருந்தால் அவை ஒவ்வொரு குன்றல் பகுப்பிலும் ஒன்றுக்கு மேற்பட்ட குறுக்கேற்றத்தை மேற்கொள்கின்றன

விடை : ஆ) நெருக்கமான நிலையில் பிணைந்துள்ள மரபணுக்கள்

 

32 இருமடியங்களைக் காட்டிலும் ஒரு மடியங்கள் சடுதிமாற்ற ஆய்வுகளில் அதிக பொருத்தமானதாக கருதப்படுகிறது. ஏனெனில்?

அ) அனைத்து சடுதிமாற்றங்களிலும் ஓங்கி அல்லது ஒடுங்கி இருந்தாலும் அவை ஒருமடியத்தில் காணப்படுகின்றன

ஆ) இருமடியத்தைக் காட்டிலும் ஒரு மடியத்தில் இனப்பெருக்கம் அதிக நிலைப்புத்தன்மையுடன் உள்ளது

இ) சடுதிமாற்றிகள் இருமடியங்களைக் காட்டிலும் ஒரு மடியத்தில் அதிக முனைப்புடன் உட்செலுத்தவல்லன இயற்கையில் அதிகமாக காணப்படுகின்றன

விடை : அ) அனைத்து சடுதிமாற்றங்களிலும் ஓங்கி அல்லது ஒடுங்கி இருந்தாலும் அவை ஒருமடியத்தில் காணப்படுகின்றன

 

33. உயர் உயிரினங்களில் எவற்றின் இடையே நிகழும் மரபணு மறுக்கூட்டிணைவு குறுக்கேற்றத்தில் முடிகிறது?

அ) சகோதரி அல்லாத இரட்டை குரோமோடிட்கள்

ஆ) இரு சேய் உட்கருக்கள்

இ) இரு வேறுபட்ட இரட்டைகள்

ஈ) இரட்டைகளில் சகோதரி குரோமோடிட்கள்

விடை : அ) சகோதரி அல்லாத இரட்டை குரோமோடிட்கள்

 

34. படியெடுத்தலில் இண்ட்ரான் நீக்கமும் எக்ஸான் இணைப்பும் வரையறுக்கப்பட வரிசையில் நிகழ்வது இவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) வாலாக்கம்

ஆ) தகவல் மாற்றம்

இ) மூடுதல்

ஈ) இயைத்தல்

விடை : ஈ) இயைத்தல்

 

35. சரியான இணையை தேர்வு செய்


விடை : அ) 5' - 3' / 3' - 5'


36. பெப்டைட் உருவாக்கம் செல்லினுள் இங்கு நடைபெறுகிறது

அ) ரிபோசோம்கள்

ஆ) பசுங்கணிகம்

இ) மைட்டோகாண்டிரியா

ஈ) மேற்கூறிய அனைத்தும்

விடை : அ) ரிபோசோம்கள்

 

37. ஒரு உயிரினத்தின் புரத உற்பத்தியின் போது, குறிப்பிட்ட புள்ளியில் இந்நிகழ்வு நின்றுவிடுகிறது. அந்நிகழ்விற்கு கீழ்வரும் எந்த மூன்று குறியன்கள் காரணமாகின்றன?

அ) UUU, UCC, UAUT

ஆ) UUUC, UUA, UAC

இ) UAG, UGA, UAA

ஈ) UUG, UCA, UCG

விடை : இ) UAG, UGA, UAA

 

38 கடத்துRNA உடன் தூதுவ RNA மற்றும் அமினோ அமிலங்கள் இணையும் பகுதிகள் முறையே

அ) தூதுவRNA DHU வளைவுடன் மற்றும் அமினோ அமிலம் CCA முனையுடன்

ஆ) தூதுவRNA CCA முனையுடன் மற்றும் அமிலனோ அமிலம் எதிர் குறியனின் வளைவுடன்

இ) தூதுவ RNA எதிர் குறியன் வளைவுடன் மற்றும் அமினோ அமிலம் DHU முனையுடன்

ஈ) தூதுவ RNA எதிர் குறியன் வளைவுடன் மற்றும் அமினோ அமிலம் CCA முனையுடன்

விடை : ஈ) தூதுவ RNA எதிர் குறியன் வளைவுடன் மற்றும் அமினோ அமிலம் CCA முனையுடன்


39. மரபுக்குறியீட்டில் பின்வரும் எக்கூற்று சரியானது?

அ) UUU தொடக்கக் குறியீடு மற்றும் அது பினைல் அலனைனுக்கான குறியீடாகும்

ஆ) 64 மும்மை குறியன்களும் 20 அமினோ அமிலங்கள் மட்டும்

இ) ஏதேனும் மூன்று நைட்ரஜன் காரங்கள் ஒரு குறிப்பிட்ட அமினோ அமிலத்தைக் குறிக்கும்.

ஈ) UAA ஓர் அர்த்தமற்ற குறியன், மேலும் மீத்தியோனினைக் குறிக்கும்

விடை : ஆ) 64 மும்மை குறியன்களும் 20 அமினோ அமிலங்கள் மட்டும்

 

40. பின்வருவனவற்றுள் எத்தொகுதி மரபுச் செய்திப்பெயர்வுக்கு பயன்படுத்தப்படுகிறது?

அ) மாற்றின உட்கருRNA , கடத்து RNA, ரிபோசோம் RNAT

ஆ) தூதுவRNA, கடத்துRNA, ரிபோசோம்RNA

இ) தூதுவRNA , கடத்துRNA, மாற்றின உட்கருRNA

ஈ) மாற்றின உட்கருRNA, ரிபோசோம் RNA, IRNA

விடை : ஆ) தூதுவRNA, கடத்துRNA, ரிபோசோம்RNA

 

41. DNA (குறியீடற்ற) தொடர்வரிசை எவ்விதம் அழைக்கப்படும்?

அ) எக்ஸான்

ஆ) இன்ட்ரான்

இ) சிஸ்ட்ரான்

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை : ஆ) இன்ட்ரான்

 

42. படியெடுத்தலின் போது RNA பாலிமரேஸ் முழு நொதி ஓர் DNA தொடர் வரிசையில் பிணைக்கிறது. மேலும் அப்புளியில் DNA ஒரு சேணம் (saddle) போன்ற அமைப்பாக கருதினால் அத்தொடர்வரிசை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) CAAT பெட்டி

ஆ) GGTT பெட்டி

இ) AAAT பெட்டி

ஈ) TATA பெட்டி

விடை : ஈ) TATA பெட்டி

 

43. RNA - வின் தொடர் நியூக்ளியோடைட்களில் சார்பிணைப்பால் இணைந்திருப்பது எதனால்?

அ) ஹைட்ரஜன் பிணைப்புகள்

ஆ) பாஸ்போடை எஸ்டர் பிணைப்புகள்

இ) கிளைக்கோசைடிக் பிணைப்புகள்

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை : ஆ) பாஸ்போடை எஸ்டர் பிணைப்புகள்

 

44 DNA சங்கிலியில் ஓகசாகி துண்டுகளின் வளர்ச்சி

அ) 3' - 5' வரிசையில் பலபடியாதல் மற்றும் இரட்டிப்பாதல் கவையை உருவாக்குதல்

ஆ) பாதி பழமை பேணும் முறையில் DNA இரட்டிப்பாதல்

இ) 5’ -> 3’ வரிசையில் பலப்படியாக்கல் மற்றும் 3’ -> 5’  DNA இரட்டிப்பாதலை விளக்குதல்

ஈ) படியாக்கத்தின் முடிவு

விடை : இ) 5’ -> 3’ வரிசையில் பலப்படியாக்கல் மற்றும் 3’ -> 5’  DNA இரட்டிப்பாதலை விளக்குதல் 

 

45. டெய்லரால் நடத்தப்பட்ட பாதி பழமை பேணும் குரோமோசோம் இரட்டிப்பாதலை எதில் செய்த சோனையின் மூலம் நிரூபித்தார்?

அ) டுரோசோபில்லா மெலன கேஸ்டர்

ஆ) ஈ.கோலை

இ) வின்கா ரோசியா

ஈ) விசியா ஃபேபா

விடை : ஈ) விசியா ஃபேபா

 

46. DNA இரட்டிப்பாதலில் புதிய இழைகள் சிறு துண்டுகளிலிருந்து உருவாதல் மற்றும் சேர்ந்து இணைகிறது. இப்புதிய இழையை எவ்வாறு அழைக்கலாம்?

அ) இறந்த இழை

ஆ) பின்செல் இழை

இ) முன்செல் இழை

ஈ) மேற்கூறிய அனைத்தும்

விடை : ஆ) பின்செல் இழை

 

47. DNA இரட்டிப்பாதலை குறிக்கக்கூடிய தவறான பட விளக்க கூற்று யாது?


அ) DNA இரட்டிப்பாதலின் திசையைக் குறிப்பிடும் இழை (i)

ஆ) DNA இரட்டிப்பாததலின் திசையைக் குறிப்பிடும் இழை (ii)

இ) தொடர்ச்சியற்ற இரட்டிப்பாதல் இழை (i)

ஈ) தொடர்ச்சியற்ற இரட்டிப்பாதல் இழை (ii)

விடை : இ) தொடர்ச்சியற்ற இரட்டிப்பாதல் இழை (i)

 

48. DNA பெருக்கம் என்பது?

அ) மரபுச்செய்திப் பெயர்வு

ஆ) இரட்டிப்பாதல்

இ) ஊடு கடத்தல்

ஈ) படியெடுத்தல்

விடை : ஆ) இரட்டிப்பாதல்

 

49. குரோமோசோமின் முழு தொகுதி ஒரே அலகாக ஒரு பெற்றோரிடமிருந்து பாரம்பரியமாதல் என்பது

அ) மரபணுத் தொகையம்

ஆ) பிணைப்பு

இ) மரபணு குளம்

ஈ) மரபணுவகையம்

விடை : அ) மரபணுத் தொகையம்

 

50. நடமாடும் மரபுப்பொருள் எனப்படுவது

அ) டிரான்ஸ்போசான்

ஆ) சடுதி மாற்றம்

இ) எண்டோ நியூக்ளியேஸ்

ஈ) வேறுபாடு

விடை : அ) டிரான்ஸ்போசான் 

12th Botany : Competitive Examination Questions : Genetics - Competitive Examination Questions in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : போட்டித் தேர்வு கேள்விகள் : மரபியல் - போட்டித் தேர்வு கேள்விகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : போட்டித் தேர்வு கேள்விகள்