போட்டித் தேர்வு கேள்விகள்
தாவர சூழ்நிலையியல்
1. நிமட்டோஃபோர்கள்
மற்றும் கனிக்குள் விதை முளைத்தல் என்ற பண்பினை பெற்றிருக்கும் தாவரங்கள் எவை?
அ) உவர் சதுப்புநிலத் தாவரங்கள்
ஆ) மணல் பகுதி வாழ்த் தாவரங்கள்
இ) நீர்வாழ்த் தாவரங்கள்
ஈ) வளநிலத் தாவரங்கள்
விடை : அ) உவர் சதுப்புநிலத் தாவரங்கள்
2. பூஞ்சை
வேர்களுக்கு எடுத்துக்காட்டு?
அ) அமென்சாலிசம்
ஆ) நுண்ணியிரி எதிர்ப்பு
இ) ஒருங்குயிரிநிலை
ஈ) பூஞ்சை எதிர்ப்புப்பொருள்
(Fungistatis)
விடை : இ) ஒருங்குயிரிநிலை
3. (+)
குறியீடு பயன்பெறும் இடைச்செயலையும், (-) குறியீடு பயனடையாத இடைச்செயலையும், மற்றும்
(0) குறியீடு நடுநிலை இடைச்செயலையும் குறிக்கிறது. உயிரினத்தொகையின் இடைச்செயல்
(+), (-) எதைக் குறிப்பிடுகின்றன?
அ) ஒருங்குயிரி நிலை
ஆ) அமென்சாலிசம்
இ) உடன் உண்ணும் நிலை
ஈ) ஒட்டுண்ணி வாழ்க்கை
விடை : ஈ) ஒட்டுண்ணி வாழ்க்கை
4. கீழ்கண்டவற்றில்
எது சரியாக பொருந்தி உள்ளது?
அ) ஏரன்கைமா - ஒபன்ஷியா
ஆ) வயது பிரமிட் - உயிர்மம்
இ) பார்தீனியம் ஹிஸ்டிரோபோரஸ் – உயிரி பன்மத்தை
அச்சுறுத்தல்
ஈ) அடுக்கமைவு - உயிரினத்தொகை
விடை : இ) பார்தீனியம் ஹிஸ்டிரோபோரஸ் – உயிரி பன்மத்தை அச்சுறுத்தல்
5. ஒரே
வாழிடத்தில் வாழும் பல்வேறு வகை சிற்றினங்களின் கூட்டுறவு மற்றும் செயல்பாட்டு இடைச்செயல்கள்
எனப்படுவது?
அ) உயிரினத் தொகை
ஆ) சுற்றுச்சூழல் செயல் வாழிடம்
இ) உயிரின குழுமம்
ஈ) சூழல் மண்ட லம்
விடை : இ) உயிரின குழுமம்
6. உறிஞ்சுதலில்
வேர்களானது ஒரு குறிப்பிடத்தக்க பங்கினை இதில் பெற்றிருப்பதில்லை ?
அ) கோதுமை
ஆ) சூரியகாந்தி
இ) பிஸ்டியா
ஈ) பட்டாணி
விடை : இ) பிஸ்டியா
7. பூமியின்
பாதியளவு வனப்பகுதியை நாம் அழித்தோமானால், முதலில் மற்றும் அதிகமாக ஏற்படும் பாதிப்பு
எது?
அ) சில சிற்றினங்கள் அழிந்துவிடக்கூடும்
ஆ) உயிரினத்தொகை மற்றும் சூழ்நிலை சமநிலைத்தன்மை
அதிகரிக்கும்
இ) ஆற்றல் பற்றாக்குறை ஏற்படக்கூடும்
ஈ) இந்த சமநிலையற்ற தன்மையினை மீதி பாதி வனங்கள்
இந்த பாதிப்பைச் சரிசெய்துவிடும்
விடை : அ) சில சிற்றினங்கள் அழிந்துவிடக்கூடும்
8. மரத்தில்
வாழக்கூடிய பெரும்பாலான விலங்குகள் காணப்படுவது?
அ) வெப்பமண்டல மழைக்காடுகள்
ஆ) ஊசியிலைக்காடுகள்
இ) முள் மர நிலம்
ஈ) மிதவெப்பமண்டல இலையுதிர்க் காடுகள்
விடை : அ) வெப்பமண்டல மழைக்காடுகள்
9. கஸ்குட்டா
இதற்கு எடுத்துக்காட்டு?
அ) புற ஒட்டுண்ணி
ஆ) அடைக்காக்கும் ஒட்டுண்ணி
இ) கொன்று உண்ணும் வாழ்க்கைமுறை
ஈ) அக ஒட்டுண்ணி
விடை : அ) புற ஒட்டுண்ணி
10. பெரிய
கட்டைத்தன்மையுடைய கொடிகள் பொதுவாக இங்கு அதிகமாக காணப்படுகிறன ?
அ) பனிமுகடு காடுகள்
ஆ) மிதவெப்ப மண்டலக்காடுகள்
இ) அலையாத்தி காடுகள்
ஈ) வெப்பமண்டல மழைக்காடுகள்
விடை : ஈ) வெப்பமண்டல மழைக்காடுகள்
11. செயல்
வாழிடம் தழுவியிருப்பது சுட்டிக் காட்டுவது?
அ) இரு சிற்றினங்களுக்கிடையே செயல்படும் கூட்டுறவு
ஆ) ஒரே ஓம்புயிரியில் இரண்டு ஒட்டுண்ணிகள்
காணப்படுவது
இ) இரு சிற்றினங்களுக்கிடையே ஒன்று அல்லது
பல வளங்களை பகிர்ந்து கொள்வது
ஈ) இரு சிற்றினங்களுக்கிடையே உள்ள ஒருங்குயிரி
வாழ்க்கை முறை
விடை : இ) இரு சிற்றினங்களுக்கிடையே ஒன்று அல்லது பல வளங்களை பகிர்ந்து கொள்வது
12. கீழ்கண்டவற்றில்
எந்த இணை சரியாக பொருந்தவில்லை ?
அ) சவன்னா - அக்கேசியா மரங்கள்
ஆ) பிரெய்ரி - தொற்றுத் தாவரங்கள்
இ) துந்தரா - நிலைத்த உறைபனி
ஈ) ஊசியிலைக் காடுகள் – பசுமை மாறாக்காடுகள்
விடை : ஆ) பிரெய்ரி - தொற்றுத் தாவரங்கள்
13. எந்த
சூழல் மண்டலம் அதிகப்படியான உயிரித்திரளைக் கொண்டுள்ளது?
அ) புல்வெளி சூழல் மண்டலம்
ஆ) குளச்சூழல்மண்டலம்
இ) ஏரி சூழல் மண்ட லம்
ஈ) வனச் சூழல் மண்டலம்
விடை : ஈ) வனச் சூழல் மண்டலம்
14. கீழ்கண்ட
எது வெற்றுபாறைகளின் மீது முன்னோடி உயிரினங்களாகத் தோன்றும்?
அ) மாஸ்கள்
ஆ) பசும்பாசிகள்
இ) லைக்கன்கள்
ஈ) ஈரல் வடிவ பிரையோஃபைட்கள்
விடை : இ) லைக்கன்கள்
15. கீழ்கண்ட
எந்த இரு இணைகள் சரியாகப் பொருந்தியிருக்கிறது?
விடை : வளி ஊட்ட சுழற்சி கார்பன் மற்றும்
நைட்ரஜன்
படிம ஊட்ட சுழற்சி சல்பர் மற்றும் பாஸ்பரஸ்
16. இரண்டாம்நிலை
வழிமுறை வளர்ச்சி நடைபெறுவது?
அ) புதிதாக உருவான குளம்
ஆ) புதிதாக குளிர்ந்த எரிக்குழம்பு
இ) வெற்றுப் பாறை
ஈ) அழிக்கப்பட்ட காடு
விடை : ஈ) அழிக்கப்பட்ட காடு
17. ஒரு
சூழல் மண்டலத்தில் ஒளிச்சேர்க்கையின் போது உருவாகும் கரிமப் பொருட்களின் வீதம் இவ்வாறு
அழைக்கப்படுகிறது?
அ) இரண்டாம் நிலை உற்பத்தித்திறன்
ஆ) நிகர உற்பத்தித்திறன்
இ) நிகர முதல் நிலை உற்பத்தித்திறன்
ஈ) மொத்த முதல் நிலை உற்பத்தித்திறன்
விடை : ஈ) மொத்த முதல் நிலை உற்பத்தித்திறன்
18. இயற்கையான
பாஸ்பரஸ் தேக்கம் காணப்படுவது?
அ) பாறை
ஆ) தொல்லுயிர் படிவம்
இ) கடல் நீர்
ஈ) விலங்கு எலும்புகள்
விடை : அ) பாறை
19. இரண்டாம்
நிலை உற்பத்தித்திறன் என்பது ______ மூலம் உருவாக்கப்படும் புதிய கரிமப் பொருள் வீதமாகும்?
அ) நுகர்வோர்கள்
ஆ) சிதைப்பவைகள்
இ) உற்பத்தியாளர்கள்
ஈ) ஒட்டுண்ணிகள்
விடை : அ) நுகர்வோர்கள்
20. சிதைவின்
போது நடைபெறும் பின்வரும் செயல்முறைகளில் எந்த ஒன்று சரியாக விவரிக்கப்பட்டுள்ளது?
அ) சிதைமாற்றம் - முழுவதும் காற்றில்லா சூழலில்
நடைபெறும் இறுதி படிநிலை
ஆ) கசிந்தோடுதல் - மண்ணில் மேல் அடுகிற்கு
நீரில் கரையும் கனிம ஊட்டச்சத்து உயர்வு
இ) துணுக்காதல் - மண்புழு போன்ற உயிரினங்களால்
நடைபெறுவது
ஈ) மட்காதல் - நுண்ணியிரிகளின் அதீத செயல்பாட்டால்
கருமையான படிக உருவமற்ற பொருட்களான மட்கு திரளுதலுக்கு வழிவகுக்கிறது
விடை : இ) துணுக்காதல் - மண்புழு போன்ற உயிரினங்களால் நடைபெறுவது
21. கீழ்கண்ட
எந்த ஒன்று சூழல் மண்டலத்தின் செயல்பாட்டு அலகு அல்ல?
அ) ஆற்றல் ஓட்டம்
ஆ) சிதைவுறுதல்
இ) உற்பத்தித்திறன்
ஈ) அடுக்கமைவு
விடை : ஈ) அடுக்கமைவு
22. நேரான
எண்ணிக்கை பிரமிட் காணப்படாதது?
அ) குளம்
ஆ) வனம்
இ) ஏரி
ஈ) புல்வெளி
விடை : ஆ) வனம்
23. ஒரு
புல்வெளி சூழல் மண்டலத்திலுள்ள முயல் மூலம் உருவாக்கப்படும் அல்லது முயலால் சேமிக்கப்படும்
புதிய கனிமப் பொருள் வீதமே
அ) நிகர உற்பத்தித்திறன்
ஆ) இரண்டாம் நிலை உற்பத்தித்திறன்
இ) நிகர முதல் நிலை உற்பத்தித்திறன்
ஈ) மொத்த முதல் நிலை உற்பத்தித்திறன்
விடை : ஆ) இரண்டாம் நிலை உற்பத்தித்திறன்
24. நீர்
வழிமுறை வளர்ச்சியில் இரண்டாவது நிலை கொண்டிருக்கும் தாவரங்கள்?
அ) அசோலா
ஆ) டைஃபா
இ) சாலிக்ஸ்
ஈ) வாலிஸ்நேரியா
விடை : ஈ) வாலிஸ்நேரியா
25. கீழ்கண்ட
எந்த ஒன்று வேளாண் சூழல் மண்டலத்தின் சிறப்பியல்பு?
அ) சூழியல் வழிமுறை வளர்ச்சி
ஆ) மண்ணில் உயிரினங்கள் இல்லாதிருப்பது
இ) குறைவான மரபணுபன்மம்
ஈ) களைகள் இல்லாதிருப்பது
விடை : இ) குறைவான மரபணுபன்மம்
26. கடலின்
ஆழமான நீர்ப்பகுதியில் காணப்படும் பெரும்பாலான விலங்குகள்?
அ) மட்குண்ணிகள்
ஆ) முதல்நிலை நுகர்வோர்கள்
இ) இரண்டாம் நிலை நுகர்வோர்கள்
ஈ) மூன்றாம் நிலை நுகர்வோர்கள்
விடை : அ) மட்குண்ணிகள்
27. சூழியல்
வழிமுறை வளர்ச்சியின் போது
அ) சூழலுடன் சமநிலையில் உள்ள ஒரு குழுமத்தின்
மாற்றத்திற்கு வழிவகுக்கும் இவை முன்னோடி குழுமங்கள் என்று அழைக்கப்படுகிறது
ஆ) ஒரு குறிப்பிட்ட பகுதியில் சிற்றினங்களின்
தொகுதியில் படிப்படியாக மற்றும் ஊகிக்கக்கூடிய மாற்றங்கள் நடைபெறுகின்றன
இ) ஒரு புதிய உயிரிய குழுமங்கள் அதன் முதன்மை
தளத்தில் மிக வேகமாக நிலைப்படுத்தப்படுகிறது
ஈ) விலங்குகளின் எண்ணிக்கை மற்றும் வகைகள்
நிலையாக இருக்கும்
விடை : ஆ) ஒரு குறிப்பிட்ட பகுதியில் சிற்றினங்களின் தொகுதியில் படிப்படியாக
மற்றும் ஊகிக்கக்கூடிய மாற்றங்கள் நடைபெறுகின்றன
28. ஓர்
குறிப்பிட்ட காலத்தில், ஓர் ஊட்ட மட்டத்தில் காணப்படும் உயிரிப் பொருட்களின் எடை இவ்வாறு
அழைக்கப்படுகின்றன?
அ) உயிரி நிலைத்தொகுப்பு
ஆ) மொத்த முதல் நிலை உற்பத்தித்திறன்
இ) நிலைத்த கூறு
ஈ) நிகர முதல்நிலை உற்பத்தித்திறன்
விடை : அ) உயிரி நிலைத்தொகுப்பு
29. கீழ்கண்டவைகளை
பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு?
பட்டியல்i / பட்டியல் ||
I) மண்புழு i) முன்னோடி சிற்றினங்கள்
II) வழிமுறை வளர்ச்சி ii) மட்குண்ணிகள்
III) சுழல் மண்ட ல iii) பிறப்பு வீதம் சேவைகள்
IV) மக்கள்தொகை iv) மகரந்தச் சேர்க்கை வளர்ச்சி
விடை : ஈ) ii i iv iii
30. நான்கு வெற்று இடங்களை கொண்ட ஒரு நிலச்
சூழல் மண்டலத்தில் காணப்படும் பாஸ்பரஸ் சுழற்சியின் எளிமையாக்கப்பட்ட மாதிரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது?
விடை : இ
31. உற்பத்தியாளர்கள்
மட்டத்தில் 20 ஜூல் ஆற்றல் ஈர்க்கப்பட்டால், கீழ்கண்ட உணவுச்சங்கிலியில் மயிலுக்கு
எவ்வளவு உணவு ஆற்றல் கிடைக்கும்?
தாவரம் -> எலி -> பாம்பு -> மயில்
அ) 0.02 ஜூல்
ஆ) 0.002 ஜூல்
இ) 0.2 ஜூல்
ஈ) 0.0002 ஜூல்
விடை : அ) 0.02 ஜூல்
32. கற்பனையான
எண்ணிக்கை பிரமிட் ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மட்டங்களில் சில உயிரினங்களின்
சாத்தியக்கூறுகளில் ஒன்று எதுவாக இருக்க முடியும்?
அ) முதல் மட்டத்தில் முதல் நிலை உற்பத்தியாளர்கள்
அரச மரத்தையும், இரண்டாம் நிலை நுகர்வோர் மட்டத்தில் ஆடுகளையும் கொண்டுள்ளன
ஆ) முதல் நிலை நுகர்வோர் மட்டம் எலிகளையும்,
இரண்டாம் நிலை நுகர்வோர் மட்டம் பூளைகளையும் கொண்டுள்ளன
இ) முதல் நிலை நுகர்வோர்மட்டம் பூச்சிகளையும்,
இரண்டாம் நிலை நுகர்வோர் மட்டம் சிறிய பூச்சி உண்ணும் பறவைகளையும் கொண்டுள்ளன
ஈ) கடலில் முதல் நிலை உற்பதியாளர்கள் மட்டம்
மிதவைத் தாவரங்களையும், மூன்றாம் நிலை நுகர்வோர் மட்டம் திமிங்கலங்களையும் கொண்டுள்ளன
விடை : இ) முதல் நிலை நுகர்வோர்மட்டம் பூச்சிகளையும், இரண்டாம் நிலை நுகர்வோர்
மட்டம் சிறிய பூச்சி உண்ணும் பறவைகளையும் கொண்டுள்ளன
33. கீழ்கண்ட
வாக்கியங்களில் ஆற்றல் பிரமிட் பற்றிய ஒன்று சரியானதல்லா. ஆனால் மற்ற மூன்றும் சரியானவை
.
அ) இது நேரான வடிவம்
ஆ) அடிப்பகுதி அகலமானது
இ) இது வேறுபட ஊட்ட மட்டங்களில் காணப்படும்
உயிரினங்களின் ஆற்றலின் அளவைக் காட்டுகிறது
ஈ) இது தலைகீழான வடிவம்
விடை : ஈ) இது தலைகீழான வடிவம்
34. ஒரே
சூழல் மண்டலத்தில் ஒரு காலத்தில் ஒன்றுக்கு மேற்மட்ட ஊட்டமட்டத்தில் காணப்படும் கீழே
கொடுக்கப்படுள்ள விலங்கு எது?
அ) ஆடு
ஆ) தவளை
இ) சிட்டுக்குருவி
ஈ) சிங்கம்
விடை : இ) சிட்டுக்குருவி
35. நீர் மற்றும் வறள்நில வழிமுறை வளர்ச்சி நடைபெற வழிவகுப்பது
அ) அதிக
வறண்ட நிலை
ஆ) அதிக ஈர நிலை
இ) மிதமான நீர் நிலை
ஈ) வறள் நிலை
விடை : இ) மிதமான நீர் நிலை
36. மொத்த
சூரிய ஒளியில் ஒளிச்சேர்க்கை சார் செயலூக்கக் கதிர்வீச்சின் (PAR) விகிதம்.
அ) 80% விட அதிகம்
ஆ) சுமார் 70%
இ) சுமார் 60%
ஈ) 50% விட குறைவு
விடை : ஈ) 50% விட குறைவு
37. மண்புழுக்களினால்
சிதைவுக்கூளங்கள் சிறிய துகள்களாக உடைக்கப்படும் செய்முறை?
அ) கனிமமாக்கம்
ஆ) சிதைமாற்றம்
இ) மட்காதல்
ஈ) துணுக்காதல்
விடை : ஈ) துணுக்காதல்
38. தாவர
உண்ணிகள் மற்றும் சிதைப்பவைகளால் உட்கொள்ள கிடைக்கும் உயிரித்திரள் அளவு?
அ) மொத்த முதல் நிலை உற்பத்தித்திறன்
ஆ) நிகர முதல் நிலை உற்பத்தித்திறன்
இ) இரண்டாம் நிலை உற்பத்தித்திறன்
ஈ) நிலை உயிரித்தொகுப்பு
விடை : ஆ) நிகர முதல் நிலை உற்பத்தித்திறன்
39. ஒரு
நீர் வழிமுறை வளர்ச்சியில் காணப்படும் தாவரங்களின் சரியான வரிசை?
அ) வால்வாக்ஸ் -> ஹைட்ரில்லா –> பிஸ்டியா
-> கிரிபஸ் -> லாண்டானா -> ஓக்
ஆ) பிஸ்டியா -> வால்வாக்ஸ் -> கிரிபஸ்
-> ஹைட்ரில்லா -> ஓக் -> லாண்டானா
இ) ஓக் -> லாண்டானா -> வால்வாக்ஸ் ->
ஹைட்ரில்லா -> பிஸ்டியா -> கிரிபஸ்
ஈ) ஓக் -> லாண்டானா -> கிரிபஸ் ->
பிஸ்டியா -> ஹைட்ரில்லா -> வால்வாக்ஸ்
விடை : அ) வால்வாக்ஸ் -> ஹைட்ரில்லா –> பிஸ்டியா -> கிரிபஸ்
-> லாண்டானா -> ஓக்
40. புவியின்
மொத்த கார்பனில் சுமார் 70% காணப்படுவது?
அ) காடுகள்
ஆ) புல்வெளிகள்
இ) வேளாண் சூழல் மண்டலம்
ஈ) கடல்கள்
விடை : ஈ) கடல்கள்
41. உணவுச்சங்கிலிக்கு
தொடர்பான கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்க.
i) ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படும்
80% புலிகளை அகற்றினால் தாவரத் தொகுப்புகளின் வளர்ச்சி பெருமளவு அதிகரிக்கும்
ii) பெரும்பாலான ஊண் உண்ணிகளை அகற்றினால் மான்களின்
எண்ணிகையை அதிகரிக்கும்
iii) ஆற்றல் இழப்பின் காரணமாக, பொதுவாக உணவுச்சங்கிலியின்
நீளம் 3 - 4 ஊட்ட மட்டங்களாக கட்டுப்படுத்தப்படுகிறது
iv) உணவுச்சங்கிலியின் நீளம் 2 முதல் 8 ஊட்ட
மட்டங்களாக வேறுபடுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள எந்த இரண்டு வாக்கியங்கள்
சரியானவை?
அ)
i மற்றும் ii
ஆ) ii மற்றும் iii
இ) ii மற்றும் iv
ஈ) I மற்றும் iv
விடை : ஆ) ii மற்றும் iii
42. கீழ்கண்ட
எது சூழியல் பிரமிட் உருவாக்க பயன்படுவதில்லை?
அ) உலர் எடை
ஆ) உயிரினங்களின் எண்ணிக்கை
இ) ஆற்றல் ஓட்டத்தின் அளவு
ஈ) உயிரி எடை
விடை : ஈ) உயிரி எடை
43.
2012ஆம் ஆண்டு காலநிலை மாற்றம் பற்றிய கட்சிகளின் ஐ.நா மாநாடு இங்கு நடைபெற்றது?
அ) லிமா
ஆ) வர்ஷா
இ) டர்பன்
ஈ) டோஹா
விடை : ஈ) டோஹா
44. சுற்றுச்சூழலில்
S02 மாசுபாட்டினை குறிப்பிடுகின்ற மிக பொருத்தமான சுட்டிக்காட்டிகள் எது?
அ) பாசி
ஆ) பூஞ்சை
இ) லைக்கன்கள்
ஈ) ஊசியிலைக் காடுகள்
விடை : இ) லைக்கன்கள்
45. அடுக்கு
வளிமண்ட ல ஓசோன் (stratosphericozone) குறைபாடு காரணமாக வளி மண்டலத்தில் அதிகமான புற
ஊதா கதிர்வீச்சுகளுடன் தொடர்பில்லாத முதன்மை சுகாதார அபாயங்களிலொன்று எது?
அ) கண்கள் பாதிப்படைதல்
ஆ) அதிகரித்த கல்லீரல் புற்றுநோய்
இ) அதிகரித்த தோல் புற்றுநோய்
ஈ) குறைக்கப்பட்ட நோய் எதிர்ப்பு அமைப்பு
விடை : ஆ) அதிகரித்த கல்லீரல் புற்றுநோய்
46. மரங்களின்
மீது அதிக அளவு லைக்கன்கள் வளர்ச்சி கொண்டுள்ளது எதைச் சுட்டிக் காட்டுகின்றன?
அ) மிகவும் ஆரோக்கியமான மரங்கள்
ஆ) அதிகம் பாதிக்கப்பட்ட மரங்கள்
இ) அப்பகுதி பெரிய அளவில் மாசுபட்டுள்ளது
ஈ) மாசு அடையாத பகுதி
விடை : ஈ) மாசு அடையாத பகுதி
47. வளி
மண்டலத்தின் ஓசோன் எந்த ஓசோன் அடுக்கில் காணப்படுகிறது?
அ) அயனி மண்டலம்
ஆ) இடைவெளி மண்டல அடுக்கு
இ) அடுக்கு வளி மண்டலம்
ஈ) வெப்ப வெளிமண்டலம்
விடை : இ) அடுக்கு வளி மண்டலம்
48, கீழ்கண்டவற்றில்
தவறான கூற்று எது?
அ) வெப்பமண்டல பகுதிகளில் பெரும்பாலான காடுகள்
அழிந்துவிட்டன
ஆ) வளிமண்டல மேலடுக்கில் உள்ள ஓசோன் விலங்குகளுக்கு
தீங்கு விளைவிக்கிறன
இ) பசுமை வீடு விளைவு இயற்கையான நிகழ்வாகும்
ஈ) யூட்ரோபிகேசன் என்பது நன்னீர் நிலைகளின்
இயற்கையான நிகழ்வாகும்
விடை : ஆ) வளிமண்டல மேலடுக்கில் உள்ள ஓசோன் விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கிறன
49. நல்ல
ஓசோன் இங்கு காணப்படுகிறது?
அ) இடைவெளி மண்டலம்
ஆ) வெப்பவெளி மண்டலம்
இ) அடுக்கு வளி மண்டலம்
ஈ) அயனி மண்டலம்
விடை : இ) அடுக்கு வளி மண்டலம்
50. சிப்கோ இயக்கம் இதை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது?
அ) காடுகள்
ஆ) கால்நடைகள்
இ) ஈர நிலங்கள்
ஈ) புல்வெளிகள்
விடை : அ) காடுகள்
51. சரியான
இணையை கண்டுபிடி?
அ) அடிப்படை மரபுகளை பாதுகாத்தல் – உயிரிபன்மம்
ஆ) கியோட்டோ நெறிமுறை – காலநிலை மாறுபாடு
இ) மாண்ட்ரியல் நெறிமுறை – புவி வெப்பமடைதல்
ஈ) ராம்சார் மாநாடு - நிலத்தடி நீர் மாசு அடைதல்
விடை : ஆ) கியோட்டோ நெறிமுறை – காலநிலை மாறுபாடு
52. நீர்
மாசுபாட்டின் பொதுவான சுட்டிக்காட்டி உயிரினம் எது?
அ) லெம்னா பன்சிகோஸ்ட்டா
ஆ) ஹைக்கார்னியா கிராசிபிஸ்
இ) ஈஸ்டிரிச்சியா கோலை
ஈ) எண்டமிலா இஸ்டோலிடிகா
விடை : இ) ஈஸ்டிரிச்சியா கோலை
53. ஓசோன்
அடுக்கில் துளை உருவாவதற்கான மிகப்பெரிய பங்களிப்பு நாடு எது?
அ) ரஷ்யா
ஆ) ஜப்பான்
இ) அமெரிக்கா
ஈ) ஜெர்மனி
விடை : அ) ரஷ்யா