போட்டித்
தேர்வு கேள்விகள்
பொருளாதார தாவரவியல்
1. Dr.நார்மன்
போர்லாக் என்ற பெயர் எதனுடன் தொடர்புடையது?
அ) பசுமைப் புரட்சி
ஆ) மஞ்சள் புரட்சி
இ) வெள்ளைப் புரட்சி
ஈ) நீலப் புரட்சி
விடை : அ) பசுமைப் புரட்சி
2. கீழ்கண்டவற்றில்
பயிர்த் தாவரங்களில் தூண்டப்பட்ட சடுதி மாற்றத்தைத் தோற்றுவிக்க பொதுவாக பயன்படும்
காரணி எது?
அ) ஆல்ஃபா
ஆ) எக்ஸ் கதிர்
இ) UV கதிர் / புற ஊதாக்கதிர்
ஈ) காமா கதிர்
விடை : ஈ) காமா கதிர்
3. அயல்
பன்மடியம் மூலம் மனிதனால் உருவாக்கப்பட்ட தானியப் பயிர் எது?
அ) ஹார்டியம் வல்கர்
ஆ) டிரிடிக்கேல்
இ) ரஃபானஸ் பிராசிகா
ஈ) ஜியாமேஸ்
விடை : ஆ) டிரிடிக்கேல்
4. பயிர்
பெருக்கத்தின் குறிக்கோள்
அ) சிறந்த விளைச்சல்
ஆ) சிறந்த தரம்
இ) நோய் இறுக்கம் எதிர்க்கும் திறன்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை : ஈ) மேற்கூறிய அனைத்தும்
5. தேர்ந்தெடுத்தல்
என்ற முறையுடன் தொடர்புடையது?
அ) செல்லியல்
ஆ) தாவர பாசியியல்
இ) பயிர் பெருக்கம்
ஈ) மரபியல்
விடை : இ) பயிர் பெருக்கம்
6. இந்தியாவில்
பசுமைப் புரட்சி ஏற்பட்ட காலம்?
அ) 1960களில்
ஆ) 1970களில்
இ) 1980களில்
ஈ) 1950களில்
விடை : அ) 1960களில்
7. இந்திய
பசுமைப் புரட்சியில் உருவாக்கப்பட்ட ஜெயா மற்றும் ரத்னா எந்த இரகத்திலிருந்து பெறப்பட்டது
?
அ) சோளம்
ஆ) நெல்
இ) கரும்பு
ஈ) கோதுமை
விடை : ஆ) நெல்
8. மனிதனால்
உருவாக்கப்பட்ட முதல் தானியம் டிரிடிக்கேல் என்பது
அ) எண்மடியம் (ஆக்டபிளாய்ட்)
ஆ) அறுமடியம் (ஹெக்சபிளாய்ட்)
இ) அமற்றும் ஆ இரண்டும்
ஈ) இருமடியம் (டிப்ளாய்ட்)
விடை : ஆ) அறுமடியம் (ஹெக்சபிளாய்ட்)
9. பயிர்பெருக்க
நிகழ்வுகளில் பயிரின் மரபணுக்களிலுள்ள பல்வேறு அல்லீல்களின் மொத்த தொகுப்பு இவ்வாறு
அழைக்கப்படுகிறது?
அ) தேர்ந்தெடுத்த பெற்றோர் தாவரங்களுக்கிடையே
நடைபெறும் குறுக்கு கலப்புறுத்தம்
ஆ) பெற்றோர் தாவரங்களை தேர்ந்தெடுத்தலின் மதிப்பாய்வு
இ) மரபணுக்கூறு தொகுப்பு
ஈ) மறுசேர்க்கையில் உயர்ந்தவற்றை தேர்ந்தெடுத்தல்
விடை : இ) மரபணுக்கூறு தொகுப்பு
10. அரைகுட்டை
கோதுமை இரகத்திற்கு எடுத்துக்காட்டு?
அ) IR 8
ஆ) சோனாலிகா
இ) டிரிடிகம்
ஈ) சக்காரம்
விடை : ஆ) சோனாலிகா
11. துரு
நோயுயிரியால் உருவாகும் நோயை எதிர்க்கும் திறனுடைய ஹிம்கிரி கலப்புறுத்தம் மூலம் பெறப்பட்டது.
இது எதனுடைய இரகம்?
அ) மிளகாய்
ஆ) சோளம்
இ) கரும்ப
ஈ) கோதுமை
விடை : ஈ) கோதுமை
12 கனிமங்கள்,
வைட்டமின்கள், புரதங்கள் நிறைந்த தாவரங்களை பெருக்கம் செய்யும் முறை?
அ) உடல கலப்புறுத்தம்
ஆ) உயிரிவழி ஊட்டம் சேர்த்தல்
இ) உயிரி பெரிதாக்குதல்
ஈ) நுண் பெருக்கம்
விடை : ஆ) உயிரிவழி ஊட்டம் சேர்த்தல்
13. கலப்பின
வீரியத்தை தக்க வைத்துக் கொள்வதில் உடல் இனப்பெருக்கம் செய்யும் தாவரங்கள் சிறந்து
விளங்குவதற்கான காரணம்?
அ) அதிக நோய் எதிர்ப்புத்திறனை பெற்றுள்ளதால்
ஆ) விரும்பியகலப்புயிரிதோன்றிய பின் அவற்றில்
தோன்றிய பண்பு மறையாதிருத்தல்
இ) எளிதாக இனப்பெருக்கம் செய்ய இயலும்
ஈ) அதிக வாழ்நாளை பெற்றிருப்பதால்
விடை : ஆ) விரும்பியகலப்புயிரிதோன்றிய பின் அவற்றில் தோன்றிய பண்பு மறையாதிருத்தல்
14. அதிசய
கோதுமை என்ற புதிய கோதுமை இரகம் இதனால் உருவாக்கப்பட்டது?
அ) மெக்சிகோவின் சர்வதேச கோதுமை மற்றும் சோள
மேம்பாட்டு மையம் ஆ) இந்திய தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிலையம்
இ) ஆஸ்திரேலிய பயிர் மேம்பாட்டு மையம்
ஈ) ஆப்பிரிக்க பயிர் மேம்பாட்டு மையம்
விடை : அ) மெக்சிகோவின் சர்வதேச கோதுமை மற்றும் சோள மேம்பாட்டு மையம்