Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி
   Posted On :  04.01.2024 04:25 am

11 வது வேதியியல் : அலகு 13 : ஹைட்ரோகார்பன்கள்

பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி

11 வது வேதியியல் : அலகு 13 : ஹைட்ரோகார்பன்கள் : பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி

31. பின்வருவனவற்றிற்கு IUPAC முறையில் பெயரிடுக


4) எத்தில் ஐசோபுரப்பைல் அசிட்டிலீன்

5) CH ≡ C – C ≡ C – C ≡ CH

விடை :



32. பின்வரும் தொடர் வினைகளில் A,B,C மற்றும் D சேர்மங்களைக் கண்டறி


விடை :



33. அரோமேட்டிக் எலக்ட்ரான் கவர் பொருள் பதிலீட்டு வினைகளில் ஆர்த்தோ, பாரா ஆற்றுப்படுத்திகளை விளக்குக.

விடை :

எலக்ட்ரான் அடர்வினை அதிகரிக்கச் செய்யும் தொகுதிகள் ஆர்த்தோ, பாரா ஆற்றுப்படுத்திகள் என அழைக்கப்படுகின்றன.

அனைத்து கிளர்வுறுத்தும் தொகுதிகளும் ஆர்த்தோ - பாரா ஆற்றுப்படுத்திகளாகும்.

.கா : -OH, -NH2, -NHR, -NHCOCH3 –OCH3, -CH3, -C2H5 முதலியன.

இப்பொழுது ஃபீனாலிக் -OH தொகுதியின் ஆற்றுப்படுத்தும் தன்மையை நாம் கருதுவோம். பீனாலின் உடனிசைவு அமைப்பின் இனகலப்பு.


இந்த உடனிசைவு அமைப்புகளில் எதிர்மின் சுமையானது வளையத்தின் ஆர்த்தோ மற்றும் பாரா இடங்களில் காணப்படுகின்றன.

எனவே, எலக்ட்ரான் அடர்வு அதிகமாக ஆர்த்தோ மற்றும் பாரா நிலைகளில் உள்ளன.

ஆதலால் ஃபீனாலிக் தொகுதியானது பென்சீன் வளையத்தினை கிளர்வுறச் செய்வதுடன், புதிதாக உள்வரும் எலக்ட்ரான் கவர் பொருளை ஆர்த்தோ அல்லது பாரா இடத்திற்கு ஆற்றுப்படுத்துகிறது.


34. ஒரு ஆல்கைல் டைஹேலைடிலிருந்து புரப்பைனை எவ்வாறு தயாரிக்கலாம் ?

விடை :



35. C6H13 Brஎன்ற மூலக்கூறு வாய்பாடுடைய ஒரு ஆல்கைல் ஹாலைடானது ஹைட்ரோ ஹாலஜன் நீக்க வினைக்கு உட்பட்டு X மற்றும் Y ஆகிய C6H12 மூலக்கூறு வாய்பாட்டினை உடைய இரு மாற்றிய ஆல்கீன்களைத் தருகிறது. ஓடுக்க ஓசேனேற்றத்திற்கு உட்படுத்தும் போது X மற்றும் Y ஆகியன CH3 COCH3, CH3CHO, CH3CH2CHO, and (CH3)2 CHCHOஆகியனவற்றைத் தருகின்றன. ஆல்கைல் ஹாலைடைக் கண்டறிக.

விடை :

C4H13Br என்ற மூலக்கூறு வாய்பாடு உகந்த ஆல்கைல் ஹாலைடு


எனவே, ஆல்கைல் ஹாலைடு -3- புரோமோ - 2- மெத்தில் புரப்பேன் ஆகும்.


36. பென்சீனின் நைட்ரோ ஏற்ற வினையின் வினை வழிமுறையினை விளக்குக.

விடை :


வினை காரணி : அடர் HNO3/H2SO4; எலக்ட்ரான் கவர்பொருள் : NO+2 (நைட்ரோனியம் அயனி

வினை வழிமுறை:

படி 1: எலக்ட்ரான் கவர்பொருள் NO+2 உருவாதல் HNO3 + H2SO→ NO+2 + HSO-4 + H2O

படி 2 : NO+2 (எலக்ட்ரான் கவர் பொருள்) அரோமேட்டிக் வளையத்தினை தாக்குவதால் கார்பன் நேர்அயனி இடைநிலை உருவாகிறது. இது உடனிசைவால் நிலைப்புத் தன்மையினைப் பெறுகின்றது.


படி 3 : காரம் (H2SO-4) முன்னிலையில் கார்பன் நேர் அயனி இடைநிலை லிருந்து புரோட்டான் இழக்கப்பட்டு நைட்ரோ பென்சீன் கிடைக்கிறது.



37. ஒரு சேர்மத்தின் அரோமேட்டிக் தன்மையைப் ஹக்கல் விதிப்படி எவ்வாறு தீர்மானிக்கலாம்.

விடை :

ஒரு சேர்மம் அரோமேட்டிக் தன்மையை பெற்றிருக்க கீழ்க்கண்ட விதிகளை நிறைவு செய்ய வேண்டும்

1. மூலக்கூறு சமதளத்தில் அமைய வேண்டும்.

2. வளையத்தில் உள்ள π எலக்ட்ரான்கள் முழுமையும் உள்ளடங்காத் தன்மையினைப் பெற்றிருக்க வேண்டும்

3. வளையத்தில் (4n+2) π எலக்ட்ரான்கள் இருக்க வேண்டும். இங்கு n என்பது முழுக்கள் ஆகும். (n = 0,1,2....) இதுவே ஹக்கல் விதி எனப்படும்


38. பென்சீனிலிருந்து பின்வரும் சேர்மங்களைத் தயாரிக்க உதவும் வழிமுறையினைத் தருக.

1) 3 - குளோரோ நைட்ரோ பென்சீன்

2) 4- குளோரோ டொலுவீன்

3) புரோமோ பென்சின்

4) m - டை நைட்ரோ பென்சீன்

விடை :



39. புரப்பேன் மற்றும் புரப்பீனை வேறுபடுத்தி அறிய உதவும் எளிய சோதனையைக் கூறுக.

விடை :

1. சிறிதளவு செம்பழுப்பு நிறமுடைய புரோமின் நீர் புரப்பீனுடன் சேர்க்கும் போது, டைபுரோமோ சேர்மத்தை உருவாக்குவதால் நிறமற்ற கரைசலாக மாற்றுகின்றது. இதுவே புரப்பேன், புரோமின் நீர்க்கரைசலை நிறமிழக்கச் செய்யவில்லை.

2. புரப்பீன் ஊதா நிறமுடைய அமிலம் கலந்த KMnO4 கரைசலை நிறமிழக்கச் செய்கிறது. இதுவே புரப்பேனை நிறமிழக்கச் செய்யவில்லை


40. ஐசோபியூட்டைலினை அமிலம் கலந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட்டுடன் வினைபடுத்தும் போது என்ன நிகழும்?

விடை :

ஐசோபியூட்லினை அமிலம் கலந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட்டுடன் வினைபுரிந்து அசிட்டோனை தருகிறது.



41. எத்தில் குளோரைடை பின்வருவனவாக எவ்வாறு மாற்றுவாய்

1) ஈத்தேன் 2) n - பியூட்டேன்

விடை :



42. n பியூட்டேனின் வச அமைப்புகளை விவரிக்க

விடை :

ஈத்தேனில் உள்ள இரு கார்பன் அணுக்களில் ஒவ்வொன்றிலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு ஹைட்ரஜன் அணுவை மெத்தில் தொகுதியால் பதிலீடு செய்வதால் பெறப்படும் ஈத்தேனின் பெறுதியாக n-பியூட்டேனைக் கருதலாம்

மறைத்தல் வச அமைப்பு :

இவ்வச அமைப்பில், இரு மெத்தில் தொகுதிகளுக்கு இடையே உள்ள தொலைவு


பிணைப்பு சுழற்றும் கோணம் ϕஐப் பொருத்து பியூட்டேன் மூலக்கூறின் வரைபடம்


குறைந்தபட்சமாக உள்ளது.

எனவே, அவைகளுக்கிடையே விலக்குவிசை அதிகமாக காணப்படுகிறது. மேலும், இவ்வமைப்பு குறைந்தபட்ச நிலைப்புத் தன்மை உடைய வச அமைப்பாகும்.

எதிரெதிர் அமைப்பு:

இவ்வச அமைப்பில், இரு மெத்தில் தொகுதிகளுக்கு இடையே உள்ள தொலைவு அதிகபட்சமாக உள்ளது. எனவே அவைகளுக்கிடையே விலக்குவிசை குறைவாக காணப்படுகிறது.

மேலும், இவ்வமைப்பு அதிக நிலைப்புத் தன்மை உடைய வச அமைப்பாகும்.

மேலேக்கண்ட நிலை ஆற்றல் வரைபடமானது n-பியூட்டேனின் பல்வேறு வச அமைப்புகளின் ஒப்பீட்டு நிலைப்புத்தன்மையைக் காட்டுகின்றது.


43. புரப்பேனின் எரிதல் வினைக்கான வேதிச்சமன்பாட்டினைத் தருக.

விடை :

புரப்பேனின் எரிதல் வினை 

C3H8 +5O2 → 3O2 + 4H2O


44. மார்கோவ்னிகாப் விதியினை தகுந்த உதாரணத்துடன் விளக்குக.

விடை :

மார்கோவ்னிகாஃப் விதிப்படி, "ஓர் சீர்மையற்ற ஆல்கீனுடன் ஹைட்ரஜன் ஹாலைடு வினைபுரியும் போது, அதிலுள்ள ஹைட்ரஜனானது, அதிக ஹைட்ரஜன் அணுக்களை உடைய கார்பனிடமும் ஹாலஜனானது குறைந்த ஹைட்ரஜன் அணுக்களை உடைய கார்பனிடமும் சேர்க்கின்றன

எடுத்துக்காட்டு



45. எத்திலீனை குளிர்ந்த காரம் கலந்த பொட்டாசியம் பெரமாங்கனேட்டுடன் வினைபடுத்தும் போது நிகழ்வது யாது?

விடை :

எத்திலீனை குளிர்ந்த காரம் கலந்த KMnO4 வினைபடுத்தும் போது எத்திலீன் கிளைக்கால் கிடைக்கிறது.



46. பின்வரும் ஆல்கேன்களுக்கு வடிவமைப்பை எழுதுக.

1) 2, 3 – டைமெத்தில் - 6 - (2 -மெத்தில் புரப்பைல்) டெக்கேன்

2) 5-(2-எத்தில் பியூட்டைல் ) – 3, 3 - டைமெத்தில் டெக்கேன்

3) 5- (1,2 -டைமெத்தில் புரப்பைல்) 2- மெத்தில் நானேன்

விடை :



47. கொழுப்பு அமிலங்களின் சோடியம் உப்புகளிலிருந்து புரப்பேனை எவ்வாறு தயாரிப்பாய்?

விடை :

சோடியம் பியூட்டனேட்டை, சோடா சுண்ணாம்பு உடன் வெப்பப்படுத்தும் போது புரப்பேனைத் தருகிறது



48. CH3 - CH (CH3) - CH (OH) - CH3


 (B) அதிகளவு உருவாகும் விளைபொருள் 

(A) மற்றும் (B) ஐக் கண்டறிக.

விடை :



49. பின்வருவனவற்றை நிறைவு செய்க:


விடை :



50. 1- பியூட்டைன் மற்றும் 2 - பியூட்டைனை எவ்வாறு வேறுபடுத்தி அறிவாய்.?

விடை :

1-பியூட்டைன் ஒர் இறுதி ஆல்கைன். ஆனால் 2-பியூட்டைன் ஓர் இறுதியற்ற ஆல்கைன். எனவே, 1-பியூட்டைன் அம்மோனியா கலந்த சில்வர் நைட்ரேட் கரைசலை (டாலான் காரணி ) வழியே செலுத்தினால் வெண்மை நிற வீழ்படிவை தருகிறது. அதுவே, அம்மோனியா கலந்த குப்ரஸ் குளோரைடுடன் சிவப்புநிற வீழ்படிவை தருகிறது. 2-பியூட்டைன் இச் சோதனைகளுக்கு உட்படாது. ஏனெனில் அமில ஹைட்ரஜன் இல்லை.

CH3 – CH2 - C ≡ CH + 2AgNO3 + 2NH4OH → CH3CH2C ≡ C - Ag  ↓ + 2NH4NO3 + 2H2O

1-பியூட்டைன்                               வெண்மை வீழ்படிவு

CH3 CH2 - C ≡ CH + Cu2Cl2 + 2NH4OH → CH3CH2C ≡ C - Cu  ↓ + 2NH4NO3 + 2H2O

                                                       சிவப்பு வீழ்படிவு


11th Chemistry : UNIT 13 : Hydrocarbons : Brief questions and answers: Chemistry: Hydrocarbons in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 13 : ஹைட்ரோகார்பன்கள் : பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 13 : ஹைட்ரோகார்பன்கள்