Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | கார்போஹைட்ரேட்கள்

அமைப்பு, அமைப்பு வாய்ப்பாடு, வகைப்பாடு | உயிரியல் மூலக்கூறுகள் | வேதியியல் - கார்போஹைட்ரேட்கள் | 12th Chemistry : UNIT 14 : Biomolecules

   Posted On :  07.08.2022 03:48 am

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 14 : உயிரியல் மூலக்கூறுகள்

கார்போஹைட்ரேட்கள்

கார்போஹைட்ரேட்கள் என்பவை அனைத்து உயிரினங்களிலும் மிக அதிகளவில் காணப்படும் கரிம சேர்மங்கள் ஆகும்.

கார்போஹைட்ரேட்கள்:

கார்போஹைட்ரேட்கள் என்பவை அனைத்து உயிரினங்களிலும் மிக அதிகளவில் காணப்படும் கரிம சேர்மங்கள் ஆகும். இவற்றில் பெரும்பாலனவை இனிப்பு சுவை கொண்டவைகளாக இருப்பதன் காரணத்தால் சாக்கரைடுகள் (சர்க்கரை எனும் பொருள்படும் , sakcharon' எனும் கிரேக்க சொல்லிலிருந்து வருவிக்கப்பட்டது) எனவும் அறியப்படுகின்றன. இவை நீரேற்றமடைந்த கார்பன்கள் என கருதப்படுகின்றன, மேலும் இவை நீரில் காணப்படும் அதே விகிதத்தில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் அணுக்களை கொண்டுள்ளன. வேதியியலாக இவை பாலிஹைட்ராக்ஸி ஆல்டிஹைடுகள் அல்லது கீட்டோன்கள் ஆகும், இவற்றின் பொது வாய்ப்பாடு Cn (H2O)n  சில பொதுவான எடுத்துக்காட்டுகள் : குளுக்கோஸ் (மோனோ சாக்கரைடு), சுக்ரோஸ் (டைசாக்கரைடு) மற்றும் ஸ்டார்ச் (பாலிசாக்கரைடு)

படம் 14.1. கார்போஹைட்ரேட்களின் அமைப்பு


பச்சை தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின்போது கார்போஹைட்ரேட்கள் தொகுக்கப்படுகின்றன. ஒளிச்சேர்க்கை எனும் சிக்கலான செயல்முறையில் கார்பன் டையாக்சைடு மற்றும் நீர் ஆகியவற்றை குளுக்கோஸ் மற்றும் ஆக்ஸிஜன் ஆக மாற்ற தேவையான ஆற்றலை சூரிய ஒளி வழங்குகிறது. அதன் பின்னர் குளுக்கோஸ் மற்ற கார்போஹைட்ரேட்களாக மாற்றமடைகிறது. இது விலங்குகளால் உண்ணப்படுகிறது.

6CO2 + 6 H2O சூரியஒளி C6H12O6 + 6O2



கார்போஹைட்ரேட்களின் அமைப்பு வாய்ப்பாடு:

ஏறத்தாழ அனைத்து கார்போஹைட்ரேட்களும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சீர்மையற்ற கார்பன்களை கொண்டிருப்பதால் ஒளிசுழற்றும் தன்மையை பெற்றுள்ளன. சீர்மையற்ற கார்பன் அணுக்களின் எண்ணிக்கையை பொருத்து ஒளிசுழற்று மாற்றியங்களின் எண்ணிக்கை அமைகிறது. (2n மாற்றியங்கள், இங்கு n என்பது சீர்மையற்ற கார்பன்களின் எண்ணிக்கை). ஒரு கரிம சேர்மத்தின் வடிவத்தை குறிப்பிடும் பிஷர் அமைப்பு வாய்ப்பாட்டைப் பற்றி நாம் XI வகுப்பில் முன்னரே கற்றறிந்தோம். கிளிசரால்டிஹைடின் இரண்டு இனன்ஷியோமர்களில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தும் வகையில் ஒரு கார்போஹைட்ரேட்டின் அமைப்பு வாய்ப்பாட்டை பிஷர் திட்டமிட்டார். (படம் 14.2).

படம் 14.2 கார்போஹைட்ரேட்களின் அமைப்பு வாய்ப்பாடு


மேற்காண் அமைப்புகளின் அடிப்படையில் கார்போஹைட்ரேட்கள் D அல்லது 1 என பெயரிடப்படுகின்றன. கார்போஹைட்ரேட்கள் பொதுவாக D அல்லது 1 மற்றும் அதைத் தொடர்ந்து (+) அல்லது (-) ஆகிய இரண்டு முன்னொட்டுகளுடன் பெயரிடப்படுகின்றன. கிளிசரால்டிஹைடில் உள்ள -CH2OH தொகுதியுடன் இணைந்துள்ள கார்பன் அணுவின் வடிவமைப்புடன் ஒப்பிட்டு கார்போஹைட்ரேட்கள் D அல்லது 1 என குறியிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, குளுக்கோஸில் உள்ள ஐந்தாவது கார்பன் அணுவுடன் இணைந்துள்ள H மற்றும் OH தொகுதிகளின் அமைவிடமும் D-கிளிசரால்டிஹைடில் இரண்டாவது கார்பன் அணுவுடன் இணைந்துள்ள H மற்றும் OH தொகுதிகளின் அமைவிடமும் ஒன்றாக இருப்பதன் காரணமாக D-குளுக்கோஸ் என பெயரிடப்படுகிறது.

குறியீடுகள் (+) மற்றும் (-) ஆகியன முறையே வலஞ்சுழி சுழற்றுத் தன்மை மற்றும் இடஞ்சுழி சுழற்றுத் தன்மை ஆகியவற்றை குறிப்பிடுகின்றன. வலஞ்சுழி சுழற்றுச் சேர்மங்கள், தளமுனைவுற்ற ஒளியின் தளத்தை கடிகார முள் திசையில் சுழற்றுகின்றன. அதே சமயம் இடஞ்சுழி சுழற்றுச் சேர்மங்கள் கடிகார முள் எதிர் திசையில் சுழற்றுகின்றன. D அல்லது L மாற்றியங்கள் வலஞ்சுழி சுழற்றுச் சேர்மங்களாகவோ அல்லது இடஞ்சுழி சுழற்றுச் சேர்மங்களாகவோ இருக்க இயலும். வலஞ்சுழி சுழற்றுச் சேர்மங்கள் D (+) அல்லது (+) எனவும் இடஞ்சுழி சுழற்றுச் சேர்மங்கள் D (-) அல்லது (-) எனவும் குறிப்பிடப்படுகின்றன


கார்போஹைட்ரேட்களின் வகைப்பாடு:

கார்போஹைட்ரேட்களை அவற்றின் நீராற்பகுப்பின் அடிப்படையில், மோனோ சாக்கரைடுகள், ஒலிகோ சாக்கரைடுகள் மற்றும் பாலிசாக்கரைடுகள் என மூன்று பெரும் பிரிவுகளாக வகைப்படுத்த முடியும்

மோனோ சாக்கரைடுகள்:

மோனோ சாக்கரைடுகள் என்பவை மேலும் எளிய சர்க்கரைகளாக நீராற்பகுக்க முடியாத கார்போஹைட்ரேட்கள் ஆகும். இவை எளிய சர்க்கரைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. மோனோ சாக்கரைடுகள் Cn(H2O)n எனும் பொது மூலக்கூறு வாய்ப்பாட்டை பெற்றுள்ளன. பல மோனோ சாக்கரைடுகள் கண்டறியப்பட்டிருந்தாலும் இவற்றில் ஏறத்தாழ 20 மோனோசாக்கரைடுகள் மட்டுமே இயற்கையில் காணப்படுகின்றன. குளுக்கோஸ், ஃபிரக்டோஸ், ரிபோஸ், எரித்ரோஸ் ஆகியன சில பொதுவான எடுத்துக்காட்டுகளாகும்.

மோனோ சாக்கரைடுகளை அவற்றிலுள்ள வினைச் செயல்தொகுதி (ஆல்டோஸ்கள் அல்லது கீட்டோஸ்கள்) மற்றும் சங்கிலியிலுள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கையின் (டிரையோஸ்கள், டெட்ரோஸ்கள், பென்டோஸ்கள், ஹெக்ஸோஸ்கள் போன்றவை) அடிப்படையில் மேலும் வகைப்படுத்தப்படுகின்றன. கார்பனைல் தொகுதியானது ஆல்டிஹைடு தொகுதியாக இருந்தால் அந்த சர்க்கரை, ஆல்டோஸ் எனவும், கார்பனைல் தொகுதியானது கீட்டோன் தொகுதியாக இருந்தால் அந்த சர்க்கரை கீட்டோஸ் எனவும் அறியப்படுகின்றன. பொதுவாக மோனோ சாக்கரைடுகள் மூன்று முதல் எட்டு கார்பன் அணுக்களை பெற்றுள்ளன. அட்டவணை 

14.1 மோனோ சாக்கரைடுகளின் பல்வேறு வகைகள்:



Tags : Structure, Configuration, Classification | Biomolecules | Chemistry அமைப்பு, அமைப்பு வாய்ப்பாடு, வகைப்பாடு | உயிரியல் மூலக்கூறுகள் | வேதியியல்.
12th Chemistry : UNIT 14 : Biomolecules : Carbohydrates Structure, Configuration, Classification | Biomolecules | Chemistry in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 14 : உயிரியல் மூலக்கூறுகள் : கார்போஹைட்ரேட்கள் - அமைப்பு, அமைப்பு வாய்ப்பாடு, வகைப்பாடு | உயிரியல் மூலக்கூறுகள் | வேதியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 14 : உயிரியல் மூலக்கூறுகள்