Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | சுருக்கமாக விடையளி

உயிரியல் மூலக்கூறுகள் | வேதியியல் - சுருக்கமாக விடையளி | 12th Chemistry : UNIT 14 : Biomolecules

   Posted On :  18.08.2022 10:28 pm

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 14 : உயிரியல் மூலக்கூறுகள்

சுருக்கமாக விடையளி

வேதியியல் : உயிரியல் மூலக்கூறுகள் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் : சுருக்கமாக விடையளி

வேதியியல் : உயிரியல் மூலக்கூறுகள்

II. சுருக்கமான விடையளி


1. எவ்வகையான பிணைப்புகள் DNA விலுள்ள ஒற்றை அலகுகளை ஒன்றாக இருத்தி வைத்துள்ளன

DNA விலுள்ள ஒற்றை அலகுகளை பாஸ்போடைஎஸ்டர் பிணைப்புகள் இருத்தி வைத்துள்ளன.


2. புரதங்களின் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை அமைப்புகளை வேறுபடுத்துக.


முதல் நிலை அமைப்பு 

i) அமினோ  அமிலங்களால் ஆன பாலிபெப்டைடு சங்கிலிகளாகும்

ii)  நேரான சங்கிலி அமைப்பு 

iii) அமினோ அமிலங்களுக்கு இடையே உருவாகும் பெப்டைடு பிணைப்பினால் ஆனது.

இரண்டாம் நிலை அமைப்பு 

i) α. - சுருள் மற்றும் β - இழைகள் அல்லது தாள்கள் உருவாக்கும் பெப்டைடு சங்கிலி

ii) α.- சுருள் அல்லது  β - தாள் அமைப்பு 

iii) பாலி பெப்டைடு சங்கிலியில் உள்ள அமினோ அமிலங்கள் கார்பனைல் ஆக்சிஜனுக்கும் (C=O) அருகிலுள்ள அமின் ஹைட்ரஜனுக்கும் (-NH) இடையே ஹைட்ரஜன் - பிணைப்பினால் உருவாகும் அதி ஒழுங்கான அமைப்பு.


3. பின்வரும் குறைபாட்டு நோய்களை உருவாக்கும் வைட்டமின்களின் பெயர்களை எழுதுக

 i) ரிக்கட்ஸ் 

ii) ஸ்கர்வி

i) ரிக்கட்ஸ் - வைட்டமின் D குறைபாடு 

ii) ஸ்கர்வி - வைட்டமின் C குறைபாடு


4. அலனினின் சுவிட்டர் அயனி அமைப்பை எழுதுக.



5. DNA மற்றும் RNA க்கு இடையே உள்ள ஏதேனும் மூன்று வேறுபாடுகளை எழுதுக.


 DNA

i)  இது முக்கியமாக உட்கரு, மைட்டோ காண்டிரியா மற்றும் பசுங்கணிகங்களில் காணப்படுகிறது

 ii) டிஆக்ஸிரிபோஸ் சர்க்கரையை கொண்டுள்ளது

 iii) கார இணைகள் A = T மற்றும் G=C

RNA 

i) பாராக இது முக்கியமாக சைட்டோபிளாசம், உட்கருத்திரள் மற்றும் ரிபோசோம்களில் காணப்படுகிறது.

ii)  ரிபோஸ் சர்க்கரையை கொண்டுள்ளது

iii) கார இணைகள் A =U மற்றும் C=G


6. பெப்டைடு பிணைப்பு பற்றி சிறுகுறிப்பு வரைக

• அமினோ அமிலங்கள் பெப்டைடு பிணைப்புகளால் சகப்பிணைக்கப்பட்டுள்ளன

• முதல் அமினோ அமிலத்தின் கார்பாக்ஸில் தொகுதியானது இரண்டாம் அமினோ அமிலத்தின் அமினோ தொகுதியுடன் வினைப்பட்டு, இரண்டு அமினோ அமிலங்களுக்கிடையே அமைடு பிணைப்பு உருவாகிறது

• இந்த அமைடு பிணைப்பானது பெப்டைடு பிணைப்பு எனப்படும். பெப்டைடு பிணைப்பு

• பெப்டைடு பிணைப்பு 

• இறுதியில் கிடைக்கும் சேர்மம் டைபெப்டைடு எனப்படும் 


• பெப்டைடில் இணைந்துள்ள அமினோ அமிலங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அது பாலிபெப்டைடு எனப்படும்

• பெப்டைடில் இணைந்துள்ள அமினோ அமிலங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அது புரதம் எனப்படும்


7. ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின்களுக்கிடையே உள்ள இரண்டு வேறுபாடுகளை தருக.

ஹார்மோன்கள் 

i)  ஹார்மோன் என்பது ஒரு திசுவினால் சுரக்கப்பட்டு இரத்த ஒட்டத்தில் கலக்கப்படும் கரிமச் சேர்மமாகும்.

ii) இது மற்ற செல்களில் உடலியல் துலங்கலைத் தூண்டுகிறது. (.கா:) வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றம்

வைட்டமின்கள் 

i) நமது உடலால் தொகுக்க இயலாத, ஆனால் சில குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கு அத்தியாவசியமான உணவின் மூலம் பெறக்கூடிய சிறிய கரிமச் சேர்மங்களாகும்

ii) இவற்றின் தேவை மிகக்குறைவே எனினும், இவற்றின் பற்றாக்குறை அல்லது மிகுதியளவு நோய்களை உண்டாக்குகின்றன.


8. புரதங்களின் இயல்பிழத்தல் பற்றி குறிப்பு வரைக.

• ஒவ்வொரு புரதமும், தனிச்சிறப்பு வாய்ந்த முப்பரிமாண அமைப்பைக் கொண்டுள்ளன

• இந்த முப்பரிமாண அமைப்புகளில், டைசல்பைடு பிணைப்பு, ஹைட்ரஜன் பிணைப்பு, நீர்விலக்கும் மற்றும் நிலை மின்னியல் இடையீடுகள் காணப்படுகின்றன

• புரதங்களை உயர் வெப்பநிலைகளுக்கு உட்படுத்துவதாலோ, யூரியா போன்ற வேதிப்பொருட்களுடன் சேர்ப்பதாலோ, pH மற்றும் கரைசலின் அயனி வலிமையை மாற்றுவதாலோ, இந்த இடையீடுகளை சிதைக்க முடியும்

• இவை முப்பரிமாண அமைப்பை பகுதியளவோ அல்லது முற்றிலுமாகவோ இழக்கச் செய்கின்றன.

• ஒரு புரதம், அதன் முதல்நிலை அமைப்பு பாதிக்கப்படாமல், உயர்நிலை அமைப்பை மட்டும் இழக்கும் நிகழ்வு இயல்பிழத்தல் எனப்படும்

• ஒரு புரதத்தின் இயல்பிழத்தலின்போது அதன் உயிரியல் செயல்பாடுகளும் முற்றிலுமாக இழக்கப்படுகிறது

• முதல்நிலை அமைப்பானது நிலையாக இருப்பதால், சில புரதங்களின் இயல்பிழத்தலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரமுடியும்.

• தன்னிச்சையாகவோ அல்லது சேப்ரான்கள் எனப்படும் சிறப்புவகை நொதிகளின் உதவியுடனோ புரதங்கள் தங்களின் பழைய நிலையை அடைய முடியும். .கா: வெப்பத்தின் காரணமாக முட்டை வெண்கரு கெட்டிப்படுதல்.


9. ஒடுக்கும் மற்றும் ஒடுக்கா சர்க்கரைகள் என்பவை யாவை?

ஒடுக்கும் சர்க்கரைகள் 

கிளைக்கோஸிடிக் பிணைப்பாக்கலில் ஈடுபடாத ஆல்டிஹைடு கார்பனை கொண்ட, ஒடுக்கும் தன்மையுடைய கார்போஹைட்ரேட்டுகள் ஒடுக்கும் சர்க்கரைகள் எனப்படும்

ஒடுக்கா சர்க்கரைகள்

கிளைக்கோஸிடிக் பிணைப்பாக்கலில் ஈடுபட்டுள்ள கார்பனைல் கார்பனை கொண்ட, ஒடுக்கும் தன்மையற்ற கார்போஹைட்ரேட்டுகள் ஒடுக்கா சர்க்கரைகள் எனப்படும்


10. கார்போஹைட்ரேட்டுகள் பொதுவாக ஒளிசுழற்றும் தன்மையை பெற்றுள்ளன. ஏன்?

• ஏறத்தாழ அனைத்து கார்போஹைட்ரேட்டுகளும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சீர்மையற்ற, கார்பன்களை கொண்டிருப்பதால் ஒளி சுழற்றும் தன்மையை பெற்றுள்ளன

• ஒளி சுழற்சி மாற்றியங்களின் எண்ணிக்கை = 2n n என்பது சீர்மையற்ற கார்பன்களின் எண்ணிக்கை

• சீர்மையற்ற கார்பன்களின் எண்ணிக்கையை பொறுத்து ஒளி சுழற்று மாற்றியங்களின் எண்ணிக்கை அமைகிறது


11. பின்வருவனவற்றை மோனோசாக்கரைடுகள், ஒலிகோசாக்கரைடுகள் மற்றும் பாலிசாக்கரைடுகள் என வகைப் படுத்துக

i) ஸ்டார்ச் 

ii) ஃபிரக்டோஸ் 

iii) சுக்ரோஸ் 

iv) லாக்டோஸ் 

xv) மால்டோஸ்


மோனோ சாக்கரைடுகள்

ஃபிரக்டோஸ்

ஒலிகோ சாக்கரைடுகள்

சுக்ரோஸ் 

லாக்டோஸ் 

மால்டோஸ்

பாலி சாக்கரைடுகள்

ஸ்டார்ச்


12. வைட்டமின்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன

• நீர் அல்லது கொழுப்பில் கரையும் தன்மையின் அடிப்படையில் வைட்டமின்கள் இரண்டு வகைப்படும்.

i) கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்

• இந்த வைட்டமின்கள் கொழுப்பு உணவுடன் எடுக்கப்படும்போது சிறப்பாக உறிஞ்சப்பட்டு கொழுப்பு திசுக்கள் மற்றும் கல்லீரலில் சேமிக்கப்படுகின்றன.

• இவை நீரில் கரைவதில்லை. எனவே கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் எனப்படும்

•  (.கா:) வைட்ட மின் A, D, E & K 

ii) நீரில் கரையும் வைட்டமின்கள்

• இவை நீரில் எளிதாக கரைகின்றன

• நமது உடலில் இவற்றை சேமிக்க இயலாது

• தொடர்ந்து உணவின் மூலம் இவை நமது உடலுக்குள் செலுத்தப்பட வேண்டும்

• அதிகப்படியாக உள்ள வைட்டமின்கள் சிறுநீரின் வழியாக வெளியேற்றப்படுகின்றன

(.கா:) வைட்ட மின் B (B1, B2, B3, B5, B6, B7, B9 & B12) மற்றும் வைட்டமின்


13. ஹார்மோன்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக

• ஹார்மோன் என்பது ஒரு திசுவினால் சுரக்கப்பட்டு, இரத்த ஓட்டத்தில் கலக்கப்படும் கரிமச் சேர்மமாகும். (.கா: பெப்டைடு அல்லது ஸ்டீராய்டு

• இது மற்ற செல்களில் உடலியல் துலங்கலைத் தூண்டுகிறது. (.கா: வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றம்

• இது செல்களுக்கிடைப்பட்ட சமிக்ஞை மூலக்கூறாகும்

• நாளமில்லா சுரப்பிகள் சிறப்புத்தன்மை வாய்ந்த ஹார்மோன்களை சுரக்கும் செல் தொகுப்புகளாகும். (.கா: இன்சுலின், எபினைஃபிரைன், ஈஸ்ட்ரோஜன், ஆண்ட்ரோஜன்)


14. கிளைசின் மற்றும் அலனின் ஆகியவற்றிலிருந்து உருவாக வாய்ப்புள்ள அனைத்து டைபெப்டைடுகளின் வடிவங்களையும் வரைக



15. நொதிகள் வரையறு

• நொதிகள் என்பவை உயிர் வேதி வினையூக்கிகளாகும்

• இவை ஒரு குறிப்பிட்ட உயிர்வேதிவினைக்கு தேர்ந்து செயலாற்றுகின்றன

• இவை இடைநிலையை நிலைப்படுத்துவதன் மூலம் கிளர்வு கொள் ஆற்றலை குறைத்து வினையை ஊக்குவிக்கின்றன.

• நொதிகள் சிறப்பு வகை புரதங்கள் ஆகும்

இந்த உயிர்வேதி வினையூக்கிகள் வினைகளின் வேகத்தை 105 மடங்குகள் அளவிற்கு வேகப்படுத்துகின்றன

• இவை அதிதேர்ந்து செயலாற்றும் தன்மை கொண்டவை.


16. α-D (-) குளுக்கோபைரனோஸின் அமைப்பை வரைக.



17. செல்லில் காணப்படும் RNA வின் வகைகள் யாவை

i) ரிபோசோம் RNA (rRNA) 

ii) தூது RNA (mRNA) 

iii) இடமாற்று RNA (tRNA)


18. α- சுருள் உருவாதல் பற்றி குறிப்பு வரைக.  PTA - 6

• சுருள் துணை அமைப்பில், அமினோ  அமிலங்கள் செங்குத்து சுருள் அமைப்பில் ' அமைக்கப்பட்டுள்ளன

• இவை ஒரு அமினோ அமிலத்திலுள்ள (nவது பகுதிக்கூறு) கார்பனைல் தொகுதி ஆக்சிஜனுக்கும் ஐந்தாவது அமினோ அமில (n+4வது பகுதிக்கூறு) அமினோ ஹைட்ரஜனுக்கும் இடையே உருவாகும் ஹைட்ரஜன் பிணைப்புகளால் நிலைப்படுத்தப்படுகின்றன

• அமினோ அமிலங்களின் பக்கச்சங்கிலிகள் சுருளின் வெளிப்பக்கமாக நீட்டிக் கொண்டுள்ளன

α-சுருள் அமைப்பின் ஒவ்வொரு சுற்றிலும் ஏறத்தாழ 3.6 அமினோ அமில கூறுகள் உள்ளன, மேலும் இதன் நீளம் ஏறத்தாழ 5.4 Å ஆகம்

• புரோலின் எனும் அமினோ அமிலம் சுருள் அமைப்பில் ஒரு இடைமுறிவை உருவாக்குகிறது. மேலும், இறுக்கமான வளைய அமைப்பின் காரணமாக இது சுருள் பிரிப்பான் என்றழைக்கப்படுகிறது.


19. உயிரினங்களில் லிப்பிடுகளின் செயல்பாடுகள் யாவை?

லிப்பிடுகளின் உயிரியல் முக்கியத்துவம்

• லிப்பிடுகள் செல்களின் ஒருங்கிணைந்த ஆக்கக்கூறாக விளங்குகின்றன. அவை செல்லின் ஒட்டுமொத்த அமைப்பிற்கு இன்றியமையாதவை 

• விலங்குகளில் ஆற்றல் சேமிப்பாக செயல்படுதலே ட்ரைகிளிசரைடுகளின் முக்கிய பணி ஆகும். கார்போஹைட்ரேட்கள் மற்றும் புரதங்களை விட இவை அதிக ஆற்றலை வழங்குகின்றன

• நீர்வாழ் உயிரினங்களில் லிப்பிடுகள் பாதுகாப்பு அடுக்காக செயலாற்றுகின்றன

• இணைப்பு திசுக்களிலுள்ள லிப்பிடுகள் உள்ளுறுப்புகளுக்கு பாதுக்காப்பளிக்கின்றன

• லிப்பிடுகள், கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் உறிஞ்சப்படுதலிலும், கடத்தப்படுதலிலும் உதவிபுரிகின்றன

லிப்பிடுகள், லிப்பேஸ்கள் போன்ற நொதிகளை கிளர்வுறச்செய்ய மிக இன்றியமையாதவை

லிப்பிடுகள், கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் பால்மக்காரணிகளாக செயல்படுகின்றன.


20. பின்வரும் சர்க்கரையானது, D - சர்க்கரையா? அல்லது 1 - சர்க்கரையா?


 விடை: 

• இது ஒரு L-சர்க்க ரை ஆகும்

ஏனெனில் C4 ல் உள்ள H மற்றும் OH ஆனது Lகிளிசரால்டிஹை டின் C2 கார்பனை போன்று அமைந்துள்ளது



Tags : Biomolecules | Chemistry உயிரியல் மூலக்கூறுகள் | வேதியியல்.
12th Chemistry : UNIT 14 : Biomolecules : Short Answer Questions Biomolecules | Chemistry in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 14 : உயிரியல் மூலக்கூறுகள் : சுருக்கமாக விடையளி - உயிரியல் மூலக்கூறுகள் | வேதியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 14 : உயிரியல் மூலக்கூறுகள்