Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | சரியான விடையைத் தேர்வு செய்க

உயிரியல் மூலக்கூறுகள் | வேதியியல் - சரியான விடையைத் தேர்வு செய்க | 12th Chemistry : UNIT 14 : Biomolecules

   Posted On :  18.08.2022 10:01 pm

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 14 : உயிரியல் மூலக்கூறுகள்

சரியான விடையைத் தேர்வு செய்க

வேதியியல் : உயிரியல் மூலக்கூறுகள் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் : சரியான விடையைத் தேர்வு செய்க

வேதியியல் : உயிரியல் மூலக்கூறுகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க 


1. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தளமுனைவுற்ற ஒளியின் தளத்தை  ப்புறமாக சுழற்றுகிறது? (NEET Phase - II) 

) D(+) குளுக்கோஸ் 

) L(+) குளுக்கோஸ் 

) D(-) ஃபிரக்டோஸ் 

) D(+) காலக்டோஸ்

விடை: ) D(-) ஃபிரக்டோஸ் 


2. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு ஆல்டோஸ்களின் அமைப்புகளின் அடிப்படையில் அமைந்த சரியான பெயர் வரிசை முறையே, (NEET Phase - 1) 


) L-எரித்ரோஸ், L-த்ரியோஸ், L-எரித்ரோஸ், D-த்ரியோஸ் 

) D-த்ரியோஸ்,D-எரித்ரோஸ், L-த்ரியோஸ், L-எரித்ரோஸ் 

) L-எரித்ரோஸ், L-த்ரியோஸ், D-எரித்ரோஸ், D-த்ரியோஸ் 

) D-எரித்ரோஸ், D-த்ரியோஸ், L-எரித்ரோஸ், L-த்ரியோஸ்

விடை: ) D-எரித்ரோஸ், D-த்ரியோஸ், L-எரித்ரோஸ், L-த்ரியோஸ் 


3. கீழே கொடுக்கப்பட்டைவைகளுள் எந்த ஒன்று ஒடுக்காச் சர்க்கரை? (NEET Phase - I)

) குளுக்கோஸ் 

) சுக்ரோஸ் 

) மால்டோஸ் 

) லாக்டோஸ்

விடை: ) சுக்ரோஸ் 


 

) ஹெப்டனாயிக் அமிலம் 

) 2-அயோடோஹெக்ஸேன் 

) ஹெப்டேன் 

) ஹெப்டனால் CH

விடை: ) ஹெப்டனாயிக் அமிலம்



5. கூற்று : சுக்ரோஸின் நீர்க்கரைசல் வலஞ்சுழி திருப்புத்திறனைப் பெற்றுள்ளது. ஆனால், சிறிதளவு ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் முன்னிலையில் நீராற்பகுக்கும்போது அது இடஞ்சுழியாக மாறுகிறது. (AIIMS) காரணம் : சுக்ரோஸ் நீராற்பகுத்தலில் சம்மற்ற அளவில் குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸ் உருவாகின்றன. இதன் காரணமாக சுழற்சியின் குறியில் மாற்றம் உண்டாகிறது.

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம், கூற்றுக்கான சரியான விளக்கமாகும் 

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம், கூற்றுக்கான சரியான விளக்கமல்ல 

) கூற்று சரி ஆனால் காரணம் தவறு 

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு 

விடை: ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம், கூற்றுக்கான சரியான விளக்கமாகும் 


6. மூலக்கூறு மரபியல் கோட்பாட்டின் படி மரபுத் தகவல்கள் பின்வரும் எந்த வரிசையில் கடத்தப் படுகின்றன. (NEET Phase - II) 

) அமினோ அமிலங்கள் புரதங்கள் DNA 

) DNA கார்போஹைட் ரேட்டுகள் புரதங்கள் 

) DNA RNA புரதங்கள் 

) DNA RNA கார்போஹைட் ரேட்டுகள் 

விடை: ) DNA RNA புரதங்கள் 


7. புரதங்களில் பல்வேறு அமினோ அமிலங்கள் மூலம் பிணைக்கப்பட்டுள்ளன. (NEET Phase - 1) 

) பெப்டைடு பிணைப்பு 

) கொடை பிணைப்பு 

) α - கிளைக்கோசிடிக் பிணைப்பு 

) β - கிளைக்கோசிடிக் பிணைப்பு

விடை: ) பெப்டைடு பிணைப்பு 


8. பின்வருவனவற்றுள் சீர்மை தன்மையுடைய அமினோ அமிலம் (AIIMS) 

) 2-எத்திலலனின் 

) 2-மெத்தில் கிளைசீன் 

) 2-ஹைட்ராக்ஸிமெத்தில் செரீன் 

) ட்ரிப்டோஃபேன்

விடை: ) 2-ஹைட்ராக்ஸிமெத்தில் செரீன் 


9. RNA மற்றும் DNA வைப் பொருத்தவரையில் சரியான கூற்று (NEET Phase - I) 

) RNA விலுள்ள சர்க்கரைக் கூறு அராபினோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு ரிபோஸ் 

) RNA விலுள்ள சர்க்கரைக் கூறு 2’- டிஆக்ஸிரிபோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு அராபினோஸ் 

) RNA விலுள்ள சர்க்கரைக் கூறு அராபினோஸ் - மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு 2'- டிஆக்ஸிரிபோஸ் 

) RNA விலுள்ள சர்க்கரைக் கூறு ரிபோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு 2'- டிஆக்ஸிரிபோஸ் 

விடை: ) RNA விலுள்ள சர்க்கரைக் கூறு ரிபோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு 2'-டிஆக்ஸிரிபோஸ்


10. நீர்த்த கரைசல்களில் அமினோ அமிலங்கள் பெரும்பாலும் -----அமைப்பில் உள்ளன

) NH2-CH(R)-COOH 

) NH2-CH(R)-COO

) H3N+-CH(R)-COOH 

) H3N+-CH(R)-COO

விடை: ) H3N+-CH(R)-COO


11. பின் வருவனவற்றுள் எந்த ஒன்று உடலில் தயாரிக்கப்படாதது

) DNAT 

) நொதிகள் 

) ஹார்மோன்கள் 

) வைட்டமின்கள்

விடை: ) வைட்டமின்கள் 


12. ஃபிரக்டோஸிலுள்ள sp2 மற்றும் sp3 இனக் கலப்படைந்த கார்பன் அணுக்களின் எண்ணிக்கை முறையே 

) 1 மற்றும்

) 4 மற்றும்

) 5 மற்றும் 1

 ) 1 மற்றும் 5

விடை: ) 1 மற்றும்


13. வைட்டமின்கள் B2 ஆனது .........எனவும் அறியப்படுகிறது

) ரிபோஃபிளாவின் 

) தையமின் 

) நிகோடினமைடு

 ) பிரிடாக்ஸின்

விடை: ) ரிபோஃபிளாவின் 


14. DNA வில் காணப்படும் பிரிமிடின் காரங்கள்

) சைட்டோசின் மற்றும் அடினைன் 

) சைட்டோசின் மற்றும் குவானைன் 

) சைட்டோசின் மற்றும் தையமின் 

) சைட்டோசின் மற்றும் யுராசில்

விடை: ) சைட்டோசின் மற்றும் தையமின் 


15. பின்வருவனவற்றுள் L-செரீன் எது?


விடை: இ


16. புரதத்தின் இரண்டாம் நிலை அமைப்பானது எதை குறிக்கிறது

) பாலிபெப்டைடு முதுகெலும்பின் நிலையான வசஅமைப்பு 

) நீர்வெறுக்கும் இடையீடுகள் 

) α-அமினோ அமிலங்களின் வரிசை

 ) α-சுருள் முதுகெலும்பு

விடை: α-சுருள் முதுகெலும்பு


17. பின்வருவனவற்றுள் நீரில் கரையும் வைட்டமின் எது

) வைட்டமின்

) வைட்டமின்

) வைட்டமின்

) வைட்டமின் B

விடை: ) வைட்டமின் B


18. செல்லுலோஸை முழுமையாக நீராற்பகுக்கும் போதுகிடைப்பது

) L-குளுக்கோஸ் 

) D-ஃபிரக்டோஸ் 

) D-ரிபோஸ் 

) D-குளுக்கோஸ்

விடை: ) D-குளுக்கோஸ்


19. பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல

) ஓவால்புமின் என்பது முட்டை வெண்கரு விலுள்ள ஓர் எளிய உணவு 

) இரத்த புரதங்களான த்ராம்பின் மற்றும் பைபிரினோஜென் ஆகியன இரத்தம் உறைதலில் பங்கேற்கின்றன

) இயல்பிழத்தலினால் புரதங்களின் வினைத்திறன் அதிகரிக்கிறது 

) இன்சுலின் மனித உடலில் சர்க்கரையின் அளவை பராமரிக்கிறது.

விடை: ) இயல்பிழத்தலினால் புரதங்களின் வினைத்திறன் அதிகரிக்கிறது


20. குளுக்கோஸ் ஒரு ஆல்டோஸ் ஆகும். பின்வரும் எந்த ஒரு வினைக்கு குளுக்கோஸ் உட்படுவதில்லை ?

 ) இது ஆக்சைம்களை உருவாக்குவதில்லை 

) இது கிரிக்னார்டு வினைக்காரணியுடன் வினை புரிவதில்லை 

) இது ஓசசோன்களை உருவாக்குவதில்லை 

) இது டாலன்ஸ் வினைக்காரணியை ஒடுக்குவ தில்லை 

விடை: ) இது கிரிக்னார்டு, வினைக்காரணியுடன் வினைபுரிவதில்லை


21. DNA வின் ஒரு இழையானது 'ATGCTTGA' எனும் கார வரிசையை பெற்றுள்ளது. எனில், அதன் நிரப்பு இழையின் கார வரிசை, மார்ச் - 2020 

) TACGAACT 

) TCCGAACT 

) TACGTACT 

) TACGRAGT

விடை: ) TACGAACT


22. இன்சுலின் ஹார்மோன் என்பது வேதியியலாக ஒரு

) கொழுப்பு 

) ஸ்டீராய்டு 

) புரதம்

) கார்போஹைட்ரேட்

விடை : ) புரதம் 


23. α-D (+) குளுக்கோஸ் மற்றும் β-D (+) குளுக்கோஸ் ஆகியன 

) எபிமர்கள் 

) ஆனோமர்கள் 

) இனன்ஷியோமர்கள் 

) வசமாற்றியங்கள் 

விடை: ) ஆனோமர்கள்


24. பின்வருவனவற்றுள் எவை எபிமர்கள் ஆகம்

) D(+)-குளுக்கோஸ் மற்றும் D(+)-காலக்டோஸ் 

) D(+)-குளுக்கோஸ் மற்றும் D(+)-மான்னோஸ் 

) () மற்றும் () இரண்டுமல்ல 

) () மற்றும் () இரண்டும்

விடை: ) () மற்றும் () இரண்டும்


25. பின்வரும் அமினோ அமிலங்களில் எது சீர்மையுடையது

) அலனின் 

) லியுசின் 

) புரோலின் 

) கிளைசீன்

விடை: ) கிளைசீன்


Tags : Biomolecules | Chemistry உயிரியல் மூலக்கூறுகள் | வேதியியல்.
12th Chemistry : UNIT 14 : Biomolecules : Choose the correct answer Biomolecules | Chemistry in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 14 : உயிரியல் மூலக்கூறுகள் : சரியான விடையைத் தேர்வு செய்க - உயிரியல் மூலக்கூறுகள் | வேதியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 14 : உயிரியல் மூலக்கூறுகள்