Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | மத்திய அமைச்சர்கள் குழு

அமைச்சர்கள் குழுவின் நியமனம், தனிப்பட்ட மற்றும் கூட்டுப்பொறுப்பு - மத்திய அமைச்சர்கள் குழு | 12th Political Science : Chapter 3 : Executive

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : ஆட்சித்துறை

மத்திய அமைச்சர்கள் குழு

அரசமைப்பு 74-வது உறுப்பின்படி குடியரசுத்தலைவருக்கு உதவவும், ஆலோசனை வழங்கவும், பிரதம அமைச்சரைத் தலைவராகக் கொண்ட ஓர் அமைச்சர்கள் குழு இருக்கும். குடியரசுத்தலைவர் தமது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் இந்த அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைப்படி நடந்துகொள்வார்.

மத்திய அமைச்சர்கள் குழு

அரசமைப்பு 74-வது உறுப்பின்படி குடியரசுத்தலைவருக்கு உதவவும், ஆலோசனை வழங்கவும், பிரதம அமைச்சரைத் தலைவராகக் கொண்ட ஓர் அமைச்சர்கள் குழு இருக்கும். குடியரசுத்தலைவர் தமது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் இந்த அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைப்படி நடந்துகொள்வார். அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையை குடியரசுத்தலைவர் ஏற்றுக் கொள்கிறார். அமைச்சர்கள் குழுவில் மூன்று வகையான அமைச்சர்கள் இருப்பர். அவை 

(1) காபினட் அமைச்சர்கள் 

(2) அமைச்சர்கள் 

(3) துணை அமைச்சர்கள். 

காபினட் அமைச்சர்கள் கொள்கை முடிவுகளை எடுப்பதில் ஈடுபடுபவர்கள். மற்ற இரு பிரிவு அமைச்சர்களும் நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொள்பவர்கள். இந்த மூன்று பிரிவு அமைச்சர்களுக்கும் வெவ்வேறு விதமான பதவி, ஊதியம் உள்ளிட்ட படிகள் அரசியல் முக்கியத்துவம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. அனைவருக்கும் உச்சமாகப் பிரதமர் நாட்டின் மிக உயர்ந்த ஆட்சி அதிகாரம் கொண்டவராக இருக்கிறார்.


அமைச்சர்கள் குழுவின் நியமனம்

அரசமைப்பு 75-வது உறுப்பின்படி குடியரசுத்தலைவரால் பிரதமர் நியமிக்கப்படுகிறார். பிரதமரின் ஆலோசனையின் பேரில் மற்ற அமைச்சர்கள் குடியரசுத்தலைவரால் நியமிக்கப் படுகின்றனர். குடியரசுத்தலைவரின் விருப்பம் உள்ளவரை அமைச்சர்கள் பதவியில் இருப்பர். குடியரசுத்தலைவரின் விருப்பத்தின் பேரிலேயே அமைச்சர்கள் நியமனம் என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் அவர்கள் பிரதமராலேயே தேர்வு செய்யப்படுகின்றனர். பிரதமரால் பரிந்துரைக்கப்படாத யாரையும் குடியரசுத்தலைவர் அமைச்சராக நியமனம் செய்ய முடியாது.


நிழல் அமைச்சரவை

இங்கிலாந்து நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு துறையிலும் உள்ள விவகாரங்களைப் பற்றி ஆராய தமது உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைக்கிறது. இதன் மூலம் எதிர்க்கட்சிகள் அரசு தொடர்பான பிரச்சனைகளை தெளிவாக அறிந்து கொள்ளவும் அரசினை விழிப்பாக இருக்கச் செய்யவும் முடிகிறது. இது நிழல் அமைச்சரவை என்று அழைக்கப்படுகிறது.


செயல்பாடு

மாணவர்கள் இந்தியாவில் இந்த நிழல் அமைச்சரவை இருப்பதாக பாவித்து இரு குழுக்களாகப் பிரிந்து விவாதிக்கவும்


அமைச்சர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டுப்பொறுப்பு

இந்திய அரசமைப்புபடி அமைச்சர்கள் தனியாகவும், கூட்டாகவும் மக்களவைக்கு பொறுப்பானவர்கள். கூட்டுப்பொறுப்பு என்பது, அரசின் நடவடிக்கைகளுக்கு அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களும் கூட்டாக மக்களவைக்குப் பொறுப்பானவர்கள் ஆகின்றனர் என்று பொருள். அனைத்து அமைச்சர்களும் பொதுவெளியில் தங்களுக்குள்ளான வேறுபாடுகளை வெளிக்காட்டக் கூடாது என்பதும் இதன் பொருள் எனலாம். எந்த ஒரு பொதுப் பிரச்சனையிலும், பொது நிகழ்விலும் அனைத்து அமைச்சர்களும் அரசின் நிலைப்பாட்டை ஒருமித்து ஆதரிக்க வேண்டும்.


குடும்ப அமைச்சரவை என்றால் என்ன?

குடும்ப அமைச்சரவை என்பது அமைச்சரவைக்குள்ளேயே ஒரு சிறு குழுவாகச் செயல்படும் அமைச்சர்களின் குழு. இது முறை சாரா குழு எனினும் உண்மையான அதிகார மையமாகும். இந்தியாவின் ஒவ்வொரு பிரதமருக்கும் இப்படி ஒரு அமைச்சரவைக் குழு இருந்துள்ளது. முக்கியமான அரசியல் பிரச்சனைகளில் முடிவுகள் எடுப்பதில் ரகசியத்தைப் பாதுகாக்கப் பிரதமருக்கு இந்த அமைச்சரவைக் குழு முறை உதவியாய் உள்ளது.


Tags : Appointment, Collective and Individual responsibility அமைச்சர்கள் குழுவின் நியமனம், தனிப்பட்ட மற்றும் கூட்டுப்பொறுப்பு.
12th Political Science : Chapter 3 : Executive : Central Council of Ministers Appointment, Collective and Individual responsibility in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : ஆட்சித்துறை : மத்திய அமைச்சர்கள் குழு - அமைச்சர்கள் குழுவின் நியமனம், தனிப்பட்ட மற்றும் கூட்டுப்பொறுப்பு : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : ஆட்சித்துறை