அமைச்சர்கள் குழுவின் செயல்பாடுகள், அமைச்சரவைக் குழுச் செயலர் - ஒன்றிய (மத்திய) அமைச்சர்கள் குழு | 12th Political Science : Chapter 3 : Executive
ஒன்றிய (மத்திய) அமைச்சர்கள் குழு
அமைச்சரவையின் ஓர் உட்குழுவாக இது இருக்கிறது. அமைச்சரவையிலிருந்து அமைக்கப்படும் இந்த உட்குழு அரசமைப்பில் குறிப்பிடப்படாத ஒன்றாகும். அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களும் ஒன்றாக அமர்ந்து கொள்கை முடிவுகளை எடுப்பதுவோ, அலுவல்களை விவாதிப்பதோ இல்லை. மாறாக ஒன்றிய அமைச்சரவைக் குழு எனப்படும். அமைச்சர்குழுவின் உட்குழுவைச் சேர்ந்தவர்கள் தான் பிரதமர் தலைமையில் ஒன்றாகக்கூடி அம்முடிவுகளை எடுக்கிறார்கள் அவற்றை அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைகளாக குடியரசுத்தலைவருக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். இந்திய அரசின் நிர்வாக விவகாரங்களைப் பார்த்துக்கொள்ளும் உச்சமான ஆட்சிக் குழுவாக அமைச்சரவைக் குழு விளங்குகிறது அமைச்சர்கள் குழுவின் கருவாக அது செயல்படுகிறது.
1. அமைச்சரவைக் குழுதான் உயர்ந்தபட்ச முடிவுகளை எடுப்பதற்கான மற்றும் கொள்கைகளை வகுப்பதற்கான அதிகாரம் பெற்ற அமைப்பாகும்.
2. இது அனைத்து முக்கியமான சட்ட, நிதி மற்றும் வெளியுறவு விவகாரங்களையும் கையாளுகிறது.
3. அரசமைப்பு ரீதியான அனைத்து நியமனங்களையும் மூத்த செயலக நிர்வாகிகளையும் இது கட்டுப்படுத்துகிறது.
4. நாடாளுமன்றம் நடைபெறாதபோது அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்க குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்கிறது.
5. இது விசாரணைக் குழுக்களை நியமிக்கிறது மற்றும் துறைகளுக்கு இடையிலான சிக்கல்களைத் தீர்த்து வைக்கிறது.
6. நெருக்கடி நிலையை பிரகடனம் செய்வதற்கும், மக்களவையைக் கலைத்து விடவும், நாடாளுமன்றக் கூட்டங்களை முடித்து வைக்க அல்லது ஒத்தி வைக்குமாறு குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்யவும் அதிகாரம் கொண்டுள்ளது.
அமைச்சரவைக் குழுவில் உள்ள ஒவ்வொரு அமைச்சருக்கும் உதவி செய்ய ஒரு செயலர் இருப்பர். அத்தகைய அமைச்சரவைக் குழு செயலர்களின் முதன்மை இடம் முதன்மைச் செயலருக்குத் தரப்பட்டுள்ளது. உயர்த் தேர்வுக் குழுவின் (Board) தலைவராக அவர் இருப்பர். அக்குழுதான் மத்திய தலைமைச் செயலகத்தின் இணைச் செயலர்களை நியமிக்கும். அந்த முதன்மைச் செயலர்தான் ஆண்டுதோறும் நடைபெறும் (மாநில) தலைமைச் செயலர்களின் மாநாடுகளுக்கு தலைமை வகிக்கிறார். நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களிலும், கொள்கைகளிலும் பல்வேறு நிர்வாகத்துறைகளுக்கும் நிர்வாகப் பணியினருக்கும் அரசியல் அமைப்புகளுக்கு இடையில் தொடர்பாகச் செயல்படுபவரும் முதன்மைச் செயலரே ஆவார்.
செயல்பாடு
கீழ்க் காணுபவற்றைப் பட்டியலிடவும்
1. இன்றுவரையிலான இந்தியப் பிரதமர்களின் பட்டியல்
2. மத்திய, மாநில அரசுகளில் இன்றுள்ள அமைச்சரவைக் குழு அமைச்சர்களும், அவர்களது துறைகளும் (ஒவ்வொன்றுக்கும் 5 அமைச்சர்களைக்) கொண்ட பட்டியல்