ஆட்சித்துறை | இந்திய அரசியல் அறிவியல் - அருஞ்சொற்பொருள் | 12th Political Science : Chapter 3 : Executive

   Posted On :  02.04.2022 06:26 pm

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : ஆட்சித்துறை

அருஞ்சொற்பொருள்

இந்திய அரசியல் அறிவியல் / ஆட்சித்துறை

அருஞ்சொற்பொருள்



* முன் மொழிதல்: ஒரு விருது, கௌரவம் அல்லது தேர்தலில் போட்டியிடுவதற்காக பெயரை முறையாக அறிவித்தல்


* உறுதி மொழி: ஒருவரின் எதிர்கால நடவடிக்கை அல்லது நடத்தையை உறுதி செய்யும் விதத்தில் பெரும்பாலும் கடவுளின் பெயரால் கூறப்படும் வாக்குறுதி 


* கண்டன தீர்மானம்: அரசமைப்பு பதவியில் உள்ள ஒருவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானம்


* கூடுவதற்கான அழைப்பு: நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் கூடுவதற்காக குடியரசுத்தலைவர் அல்லது ஆளுநரால் விடுக்கப்படும் அழைப்பு 


* ஒத்தி வைப்பு: நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தின் கூட்டத் தொடரினிடையே சில அமர்வுகள் தள்ளி வைக்கப்படுதல்


* மறுதலித்தல்: குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுநருக்கு உள்ள ரத்து செய்யும் அதிகாரம்


* அவசரச்சட்டம்: நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றகூட்டத் தொடர் நடைபெறாதபோது, குடியரசுத்தலைவர் அல்லது ஆளுநரால் பிறப்பிக்கப்படும் சட்டம்


* நீக்குதல்: ஒரு சட்டம், உரிமை அல்லது ஒப்பந்தத்தை சட்டப்படி நீக்குதல் 


* அலுவல் வழி தலைமை: ஒருவர் சட்டப்பூர்வமாக வகிக்கும் பதவியின் காரணமாக, வேறு ஒரு பதவிக்கும் பொறுப்பாக இருத்தல்


* அமைச்சரின் துறை: ஒரு அமைச்சர் தலைமை நிர்வாக பொறுப்பேற்றிருக்கும் துறை 


* அதிகார பூர்வ பேச்சாளர்: ஒரு கட்சி அல்லது அரசாங்கத்தின் சார்பாக நியமிக்கப்பட்டிருக்கும் பேச்சாளர் 


* ஒப்புரிமை உடைய: ஒரே மாதிரி கருத்துடைய 


* பறைசாற்று: வெளிப்படையாக தெரிவித்தல் 


* சட்டமன்ற கலைப்பு: ஒரு சட்டமன்றத்தை முறைப்படி முடித்து வைத்தல் 


* சபை ஒத்திவைப்பு: நாடாளுமன்றம் அல்லது சட்டமன்ற கூட்டத் தொடரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்தி வைத்தல்


* முன்வரைவிற்கான ஒப்புதல் :  சட்ட மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முன்வரைவிற்கு குடியரசுத்தலைவர் அல்லது ஆளுநர் அளிக்கும் ஒப்புதல்


* வெஸ்ட்மினிஸ்டர் முறை: இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்ட்டர் பகுதியில் ஆங்கிலேய நாடாளுமன்றம் அமைந்திருப்பதால், அந்நாட்டு நாடாளுமன்றமுறை வெஸ்ட்மினிஸ்டர் முறை எனப்படுகிறது.

 

* ஒருமைப்பாடு: நாடு அல்லது ஒரு குழுவிற்குள் ஒவ்வொருவருக்கும் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமை


* வாக்கு சீட்டு: ஒரு வாக்கெடுப்பைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு காகிதம்


* தீர்மானம்: ஒரு சட்டமன்றம் அல்லது மற்ற முறையான கூட்டத்தினால் ஒப்புக் கொள்ளப்பட்ட கருத்து அல்லது விருப்பத்தின் ஒரு முறையான வெளிப்பாடு


* வெற்றிடம்: செல்லுபடியாகாத அல்லது சட்டபூர்வமாக பிணைப்பு இல்லை


* சட்ட உரிமை கட்டளை: ஒரு குறிப்பிட்ட முறையில் செயல்படுவதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம்.


* கூட்டணி: கூட்டு நடவடிக்கைக்கான ஒரு தற்காலிக கூட்டு, குறிப்பாக அரசியல் கட்சிகள் இதன் மூலம் ஒரு அரசாங்கத்தை உருவாக்குகின்றன


* சுயவிருப்புரிமை: ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய சட்டம் அளித்திருக்கும் சுதந்திரம்.


* ஆட்சி எல்லை : ஒரு அரசின் அதிகாரபூர்வ எல்லை .


* ஆக்கிரமிப்பு: தூண்டுதல் இல்லாமல் தாக்கும் நடவடிக்கை.


*கலகம்: ஒருநிறுவப்பட்ட அரசாங்கத்திற்கோ அல்லது தலைமைக்கெதிராகவோ ஆயுதமேந்திய எதிர்ப்பு.


Tags : Executive | India Political Science ஆட்சித்துறை | இந்திய அரசியல் அறிவியல்.
12th Political Science : Chapter 3 : Executive : Glossary Executive | India Political Science in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : ஆட்சித்துறை : அருஞ்சொற்பொருள் - ஆட்சித்துறை | இந்திய அரசியல் அறிவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : ஆட்சித்துறை