Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு)

தாவரத் திசு வளர்ப்பு - தாவரவியல் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு) | 12th Botany : Chapter 5 : Plant Tissue Culture

   Posted On :  09.08.2022 05:52 pm

12 வது தாவரவியல் : அலகு 5 : தாவரத் திசு வளர்ப்பு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு)

தாவரவியல் : தாவரத் திசு வளர்ப்பு : உயிரியல் தாவரவியல் குழு புத்தக வினாக்கள் மற்றும் முக்கியமான கேள்விகள் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

தாவரவியல் : தாவரத் திசு வளர்ப்பு


Iசரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு)

மதிப்பீடு 

 

1. முழுஆக்குத்திறன் என்பது 

அ) மரபணு ஒத்த தாவரங்களை உருவாக்கும் திறன் 

ஆ) எந்த தாவர செல் / பிரிகூறிலிருந்து ஒரு முழு தாவரத்தை உருவாக்கும் திறன் 

இ) கலப்பின புரோட்டோபிளாஸ்ட்களை உருவாக்கும் திறன் 

ஈ) நோயற்றத் தாவரங்களில் இருந்து வளமான தாவரங்களை மீளப்பெறுதல்

விடை : ஆ) எந்த தாவர செல்/ பிரிகூறிலிருந்து ஒரு முழு தாவரத்தை உருவாக்கும் திறன் 

 

2. நுண்பெருக்கம் இதை உள்ளடக்கியது 

அ) நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி தாவரங்களில் உடல் வழிப்பெருக்கமடையச் செய்தல் 

ஆ) சிறிய பிரிகூறுகளைப் பயன்படுத்தி தாவரங்களில் உடல் வழிப்பெருக்கமடையச் செய்தல் 

இ) நுண்வித்துக்களைப் பயன்படுத்தி தாவரங்களில் உடல் வழிப்பெருக்கமடையச் செய்தல் 

ஈ) நுண் மற்றும் பெரு வித்துக்களைப் பயன்படுத்தி தாவரங்களில் உடல் வழி அற்ற முறையில் பெருக்கமடையச் செய்தல்

விடை : ஆ) சிறிய பிரிகூறுகளைப் பயன்படுத்தி தாவரங்களில் உடல் வழிப்பெருக்கமடையச் செய்தல் 

 

3. கீழ்கண்டவற்றை பொருத்துக. 


   1 | 2 | 3 | 4 | 

அ C A D  B 

ஆ. A  C  B  D 

இ. B  A  D  C 

ஈ. D  B C A

விடை : இ) 1-B, 2-A, 3-D, 4-C 

 

4. தன்னழுத்தக்கலனைப் பயன்படுத்தி நுண்ணுயிர் நீக்கம் செய்வதற்கு ---------நிமிடங்கள் மற்றும் வெப்பநிலையில் மேற்கொள்ளப்படுகிறது 

அ) 10 முதல் 30 நிமிடங்கள் மற்றும் 125°C 

ஆ) 15 முதல் 30 நிமிடங்கள் மற்றும் 121°C 

இ) 15 முதல் 20 நிமிடங்கள் மற்றும் 125°C 

ஈ) 10 முதல் 20 நிமிடங்கள் மற்றும் 121°C

விடை : ஆ) 15 முதல் 30 நிமிடங்கள் மற்றும் 121°C 

 

5. பின்வருவனவற்றில் சரியான கூற்று எது? 

அ) அகார் கடற்பாசியில் இருந்து பிரித்தெடுக்கப் படுவதில்லை

ஆ) கேலஸ் வேறுபாடுறுதலை மேற்கொண்டு உடல் கருக்களை உற்பத்தி செய்கிறது  

இ) மெர்குரிக் புரோமைடைப் பயன்படுத்தி பிரிகூறுகளை புறப்புரப்பு நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுகிறது  

ஈ) வளாப்பு ஊடகத்தின் PH 5.0 முதல் 6.0 

விடை : ஆ) கேலஸ் வேறுபாடுறுதலை மேற்கொண்டு உடல்கருக்களை உற்பத்தி செய்கிறது 

 

6. பின்வரும் கூற்றிலிருந்து தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும் 

அ) இதய அடைப்பிற்கு பயன்படுத்தப்படும் ஊட்ட பானம் டிஜிடாலிஸ் பர்பியூரியாவிலிருந்து கிடைக்கிறது 

ஆ) மூட்டு வலியை குணப்படுத்த பயன்படுத்தப் படும் மருந்து காப்சிகம் அனுவத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது 

இ) மலேரியா எதிர்ப்பு மருந்து சின் கோனா அபிசினாலிஸ் தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது 

ஈ) புற்றுநோய் எதிர்ப்பு பண்பானது கேதராந்தஸ் ரோசியஸ் தாவரத்தில் காணப்படவில்லை 

விடை : ஈ) புற்றுநோய் எதிர்ப்பு பண்பானது கேதராந்தஸ ரோசியஸ் தவரத்தில் காணப்படவில்லை 

 

7. வைரஸ் அற்ற தாவரங்கள் ----- இல் இருந்து உருவாக்கப்படுகின்றன

அ) உறுப்பு வளர்ப்பு 

ஆ) ஆக்குத்திசு வளர்ப்பு 

இ) புரோட்டோபிளாச வளர்ப்பு 

ஈ) செல் வளர்ப்பு 

விடை : ஆ) ஆக்குத்திசு வளர்ப்பு 

 

8. பெருமளவில் உயிரி நேர்மை இழப்பைத் தடுப்பது

அ) உயிரிகாப்புரிமம் 

ஆ) உயிரி அறநெறி 

இ) உயிரி பாதுகாப்பு 

ஈ) உயிரி எரிபொருள்

விடை : இ) உயிரி பாதுகாப்பு

 

9. உறை குளிர்பாதுகாப்பு என்பது தாவர செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளை பாதுகாக்கும் செயல்முறைகளுக்கு 

அ) ஈதரைப் பயன்படுத்தி மிக குறைந்த வெப்ப நிலைக்கு உட்படுத்துவது 

ஆ) திரவ நைட்ரஜனைப் பயன்படுத்தி மிக உயர் வெப்பநிலைக்கு உட்படுத்துவது 

இ) திரவ நைட்ரஜனைப் பயன்படுத்தி மிக குறைந்த வெப்பநிலையான -196°Cக்கு உட்படுத்துவது 

ஈ) திரவ நைட்ரஜனைப் பயன்படுத்தி மிக குறைந்த வெப்பநிலைக்கு உட்படுத்துவது 

விடை : இ) திரவ நைட்ரஜனைப் பயன்படுத்தி மிக குறைந்த வெப்பநிலையான -196°Cக்கு உட் படுத்துவது

 

10. தாவர திசு வளர்ப்பில் திடப்படுத்தும் காரணியாகப் பயன்படுத்தப்படுவது 

அ) நிக்கோட்டினிக் அமிலம் 

ஆ) கோபால்ட்டஸ் குளோரைடு 

இ) EDTA 

ஈ) அகார் 

விடை : ஈ) அகார்

Tags : Plant Tissue Culture | Botany தாவரத் திசு வளர்ப்பு - தாவரவியல்.
12th Botany : Chapter 5 : Plant Tissue Culture : Choose the Correct Answers (Pure Science Group) Plant Tissue Culture | Botany in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 5 : தாவரத் திசு வளர்ப்பு : சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு) - தாவரத் திசு வளர்ப்பு - தாவரவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 5 : தாவரத் திசு வளர்ப்பு