உயிரிதொழில்நுட்பவியல் - தாவரத் திசு வளர்ப்பின் மைல் கற்கள் | 12th Botany : Chapter 5 : Plant Tissue Culture
தாவரத் திசு வளர்ப்பின் மைல் கற்கள்
முழுஆக்குத் திறன் கருத்தை முன்மொழிந்தார். அதாவது ஆய்வுகூடச் சோதனை முறையில் தனித்து எடுக்கப்பட்ட தாவரச் செல்கள் அல்லது திசுவிலிருந்து முழுத் தாவரத்தை வளர்த்தல். குளுக்கோஸ் மற்றும் பெப்டோன் கொண்ட வளர்ப்பு ஊடகத்தில் (நாஃப்ஸ் உப்பு கரைசல்) செயற்கையான நிலையில் ஆய்வுகூடச் (கண்ணாடி கலனில்) சோதனை முறையில் வளர்த்தல் மற்றும் கேலஸ் வளர்ச்சி (செல்கள் அல்லது திசுக்களின் முறையற்ற வளர்ச்சி)
பைரிடாக்சின், தயமின், மற்றும் நிக்கோட்டினிக் அமிலம் போன்ற மூன்று வைட்டமின்களுடன் கூடிய நாஃப்ஸ் உப்புக் கரைசலைப் பயன்படுத்தி வேர் வளர்ப்பை உண்டாக்கினார்.
தாவரத் திசு வளர்ப்பில் இளநீரைப் பயன்படுத்தினார். மேலும் கேரட் பிரிகூறிலிருந்து செல்கள் பெருக்கமடைந்து கிடைத்தன.
வைரஸ் அற்ற டாலியா மற்றும் உருளைக்கிழங்கு தாவரத்தைத் தண்டு ஆக்குத்திசு வளர்ப்பின் மூலம் உருவாக்கினார்கள்.
திசு வளர்ப்பு ஊடகத்தை முறைப்படுத்தினார்கள். இது திசு வளர்ப்பில் ஒரு மைல் கல் ஆகும். இது அனைத்து வகையான திசு வளர்ப்புக்களுக்கும் பெரும்பாலும் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய வளர்ப்பு ஊடகமாகும்.
பூக்கும் தாவரங்களில் சோதனை குழாய் கருவுறுதலை உண்டாக்கினர்.
டிராடஸ்கான்ஷியா ரிஃப்லக்ஸா திசு வளர்ப்பில் தனிச் செல்கள் மற்றும் கேலஸ்களை உருவாக்கினர்.
டாட்டூராவின் மகரந்தப் பையிலிருந்து ஒற்றை மடியக் கருவினை ஆய்வுக்கூடச் சோதனை முறையில் வளர்த்தார்கள்.
நுண் பெருக்க முறையில் தனித்தெடுக்கப்பட்ட ஒற்றைச் செல்லிலிருந்து வேறுபாடடைந்த முழுப் புகையிலைத் தாவரத்தை உருவாக்கினார்கள்.
பிரித்தெடுக்கப்பட்ட இலை இடைத் திசுவின் புரோட்டோபிளாஸ்ட்டிலிருந்து முழுப் புகையிலை தாவரத்தை மீண்டும் உருவாக்கினார்கள்.
நிக்கோட்டியான குளாக்கா, நிக்கோட்டியான லாங்ஸ்டோர்ஃபி தாவரங்களுக்கிடையே புரோட்டோபிளாஸ்ட்டை இணைத்துப் பெற்றனர். மேலும் 1971ல் முதல் சிற்றினங்களுக்கிடையே உடல் கலப்பினங்களை உருவாக்கினர்.
உருளைக்கிழங்கு, தக்காளி ஆகிய பேரினங்களுக்கிடையே போமாட்டோ எனும் கலப்பினத்தை உருவாக்கினார்கள்.
வெளிமரபணு நுழைப்பு மூலம் மாற்றி அமைக்கப்பட்ட ஒற்றைச் செல்லிலிருந்து மாற்றப்பட்ட முழுப் புகையிலைத் தாவரத்தை உருவாக்கினார்கள்
அக்ரோபாக்டீரியத்தின் மூலம் மரபணு மாற்றம் செய்து மரபணு மாற்றப்பட்ட புகையிலைத் தாவரத்தை உருவாக்கினார்கள்
நாஃப்ஸ் கரைசல்: தாவரங்களின் வளர்ச்சி சோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஊட்டக் கரைசல் கொண்டுள்ள பகுதிப் பொருள்கள் :
கால்சியம் நைட்ரேட் 3.0 கி,
பொட்டாசியம் நைட்ரேட் 1.0 கி,
சுக்ரோஸ் 50.0 கி (மிதமான),
மெக்னீசியம் சல்ஃபேட் 1.0 கி,
இரட்டைக் காரத்துவ பொட்டாசியம் பாஸ்ஃபேட் 1.0 கி,
அயனி நீக்கப்பட்ட நீர் 1000.0 மி.லி.