பாறை மற்றும் மண் | அலகு 1 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - பாறைகளின் வகைபாடுகள் | 8th Social Science : Geography : Chapter 1 : Rocks and Soils
பாறைகள்
பாறைகள்
என்பது திட கனிம பொருட்களால் புவியின் மேற்பரப்பில் மற்ற கோள்களில் உள்ளது போல் உருவானதாகும்.
புவியின் மேலோடு (நிலக்கோளம் - Lithosphere) பாறைகளால் உருவானது. பாறைகள், ஒன்று அல்லது
பல கனிமப்பொருட்களால் ஆனவை. இது ஒரு திடநிலையில் உள்ள ஒரு முக்கியமான இயற்கை வளம் ஆகும்.
பாறைகள் இயற்கையிலேயே கடின மற்றும் மென்தன்மைக் கொண்டதாகும். புவியின் மேற்பரப்பில்
2000 வகையிலான கனிம வகைகள் உள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் பொதுவாக புவி முழுவதும்
8 அடிப்படை கனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கனிமங்கள் வேதி மூலங்களின் தொகுதிகளால் ஆனவை.
பாறைகள் என்பது கனிமங்கள் தனித்த கூறுகளாகவோ அல்லது கூட்டுக்கலவையாகவோ உருவாகலாம்.
பாறைகளின் வகைபாடுகள்
புவி
பரப்பில் காணப்படும் பாறைகளை, அவை தோன்றும் முறைகளின் அடிப்படையில் மூன்று வகைகளாகப்
பிரிக்கலாம்.
(1) தீப்பாறைகள்
(Igneous Rocks)
(2) படிவுப்
பாறைகள் (Sedimentary Rocks)
(3) உருமாறியப் பாறைகள் அல்லது மாற்றுருப் பாறைகள் (Metamorphic Rocks)
1. தீப்பாறைகள்
தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக் குமம் தப்பாறைகள் (Magma) உறைந்து உருவானதாகும். இப்பாறைகளிலிருந்து மற்ற பாறைகள் உருவாகின்றதால் இவற்றை முதன்மைப் பாறைகள் (Primary Rocks) அல்லது தாய்ப் பாறைகள் (Parent Rocks) என்று அழைக்கிறோம்.
உங்களுக்குத் தெரியுமா?
இக்னியஸ் (Igneous) என்ற சொல் இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது.
இக்னியஸ் என்றால் "தீ" என்று பொருள்படும்.
தீப்பாறைகளின் பண்புகள்
1. இந்தப்
பாறைகள் கடினத் தன்மை உடையவை.
2. இவை
நீர்புகாத் தன்மைக் கொண்டவை
3. உயிரினப்
படிமப்பொருள்கள் (Fossils) இப்பாறைகளில் இருக்காது.
4. தீப்பாறைகள்
எரிமலை செயல்பாடுகளோடு தொடர்புடையவை.
5. இப்பாறைகள்
கட்டுமான வேலைகளுக்குப் பயன்படுகின்றன.
தீப்பாறைகளின் வகைகள்
தீப்பாறைகளை
இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை:
1. வெளிப்புறத்
தீப்பாறைகள் (Extrusive Igneous Rocks)
2. ஊடுருவிய
தீப்பாறைகள் (Intrusive Igneous Rocks)
1. வெளிப்புறத் தீப்பாறைகள்
(Extrusive
Igneous Rocks)
எரிமலையில்
இருந்து வெளியேறும் லாவாவை நீங்கள் பார்த்ததுண்டா?
புவியின்
உட்பகுதியில் இருந்து அதன் மேல் பகுதிக்கு வரும் செந்நிற , உருகிய பாறைக் குழம்பு
'லாவா' (LAVA) எனப்படும். பாறைக் குழம்பு புவியின் மேற்பரப்பிற்கு வந்தவுடன் குளிர்ந்து
பாறைகளாக மாறுகிறது. இவ்வாறு புவி மேலோட்டின் மேற்பரப்பில் உருவாகும் பாறைகள் வெளிப்புறத்
தீப்பாறைகள் என்று அழைக்கப்படுகிறது. இப்பாறைகள் விரைவாக குளிர்வதால் மெல்லிழைகள் மற்றும்
கண்ணாடி தன்மை கொண்டதாக இருக்கும். இந்தியாவின் வடமேற்கு தீபகற்ப பகுதிகளில் காணப்படும்
கருங்கல் (Basalt) வகை பாறைகள் வெளிப்புறத் தீப்பாறைகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
2. ஊடுருவிய தீப்பாறைகள்
(Intrusive Igneous Rocks)
பாறைக்குழம்பு
புவிபரப்பிற்கு கீழே பாறை விரிசல்களிலும், பாறைகளிலும் ஊடுருவிச் சென்று உறைந்து உருவாகும்
பாறைகள் ஊடுருவிய தீப்பாறைகள் எனப்படும். இவை மெதுவாக குளிர்வதால் பேரிழைகளாக உருவாகும்.
ஊடுருவிய
தீப்பாறைகள் இரண்டு வகைப்படும். அவை:
1. அடியாழப்
பாறைகள் (அ) பாதாளப் பாறைகள் (Plutonic Rocks)
2. இடையாழப்
பாறைகள் (Hypabysal Rocks)
புவியின்
அதிக ஆழத்தில் உறைந்து உருவாகும் பாறைகள் அடியாழப் பாறைகள் எனப்படும்.
இடையாழப்
பாறைகள் புவி மேற்பரப்பிலிருந்து கீழே புவியின் குறைந்த ஆழத்தில் பாறைக்குழம்புஉறைவதால்
உருவாகும் பாறைகள் இடையாழப் பாறைகள் எனப்படும்.
கிரானைட்,
டயரைட் மற்றும் எறும்புக்கல் ஆகியன அடியாழப்பாறைகளுக்குச் சிறந்த உதாரணமாகும். மேலும்
டொலிரைட் இடையாழப்பாறைக்கு சிறந்த உதாரணமாகும். ஊடுருவிய தீப்பாறைகள் பெரிய அளவிலான
படிகங்களைக் கொண்டிருப்பதால் இவைகள் படிகப் பாறைகள் (Crystalline Rocks) என்றும் அழைக்கப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
இத்தாலியில் உள்ள மவுண்ட் வெசூவியஸ், மவுண்ட் ஸ்ட்ராம் போலி மற்றும்
மவுண்ட் எட்னா ஹவாய் தீவுகளில் உள்ள மவுனாலோவா மற்றும் மௌனாக்கியா ஆகியவை உலகின் முக்கியமான
செயல்படும் எரிமலைகளாகும்.
2. படிவுப் பாறைகள்
செடிமென்டரி
(sedimentary) சொல் ‘செடிமென்டம்’ என்ற இலத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டது அதன் படிவுப்
பாறைகள் பொருள் படியவைத்தல் என்பதாகும்.
படிவுப்
பாறைகள் அரிப்பு காரணிகளால் அரிக்கப்பட்டு (காற்று, நீர், பனியாறுகள்) படிய வைக்கப்பட்ட
படிவுகள் நீண்ட காலமாக அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக இறுகியதால் படிவுப்
பாறைகள் உருவாகின்றன. இப்பாறைகள் பல அடுக்குகளை உள்ளடக்கியுள்ளன. பல்வேறு காலக்கட்டத்தில்
படியவைக்கப்பட்ட பொருள்கள் பல படிநிலைகளைக் கொண்டிருப்பதால் இவைகள் அடுக்குப்பாறைகள்
(Stratified Rocks) என அழைக்கப்படுகின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
படிவுப் பாறைகள் நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை வாயு போன்ற இயற்கை
வளங்கள் உருவாக முக்கிய ஆதாரமாகும்.
படிவுப்பாறைகளின் பண்புகள்
1. இப்பாறைகள்
பல அடுக்குகளைக் கொண்டது.
2. இப்பாறைகள்
படிகங்களற்ற பாறைகளாக உள்ளது.
3. இப்பாறைகளில்
உயிரின படிமங்கள் (Fossil) உள்ளன.
4. இப்பாறைகள்
மென் தன்மையுடையதால் எளிதில் அரிப்புக்கு இவை உட்படுபடுகின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
படிவுப் பாறைகளின் வகைப்பாடு
படிவுப் பாறைகளின் வகைகள்:
படிவுகளின்
தன்மை, படியவைக்கும் செயல் முறைகள் மற்றும் படிவுகளின் மூலாதாரம் போன்ற அம்சங்களின்
அடிப்படையில் படிவுப் பாறைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை :
1. உயிரினப் படிவுப் பாறைகள் (Organic sedimentary rocks)
இவ்வகையான
பாறைகள் இறந்து சிதைக்கப்பட்ட விலங்கின மற்றும் தாவர படிவுகள் இறுகித் தோன்றியதாகும்.
இவை உயிரினப் படிமங்களால் ஆனவை. சாக் (Chalk), பட்டுக்கல் (Talc), டோலமைட்
(Dolomite) மற்றும் சுண்ணாம்புப் பாறைகள் (Limestones) போன்றவை, இவ்வாறு உருவானவையாகும்.
2. பௌதீக படிவுப் பாறைகள் (Mechanical sedimentary rocks)
பௌதீக
படிவுப் பாறைகள், தீப்பாறைகளும் உருமாறிய பாறைகளும் சிதைந்து உருவாகின்றன. ஆறு, காற்று,
பனியாறு போன்ற இயற்கைக் காரணிகளால் அரிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் அவை சாதகமான இடங்களில்
படியவைக்கப்படுகின்றன. இவை நீண்ட காலத்திற்கு பிறகு இறுகி பாறைகளாக மாறுகின்றன. மணற்பாறைகள்
(Sand stones), மாக்கல் (Shale) மற்றும் களிப்பாறை (Clay) இப்பாறைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
3. இரசாயன படிவுப் பாறைகள் (Chemical sedimentary rocks)
இரசாயன
படிவுப் பாறைகள், பாறைகளில் உள்ள கனிமங்கள் நீரில் கரைந்து, இரசாயன கலவையாக மாறுகிறது.
இவை ஆவியாதல் மூலமாக உருவாகின்றன. இப்பாறைகள் உப்புபடர் பாறைகள் (Evaporite Rocks)
என்றும் அழைக்கப்படுகிறது. ஜிப்சம் இவ்வகையான பாறைகளுக்கு உதாரணமாகும்.
உருமாறிய பாறைகள்
(Metamorphic rocks)
மெட்டமார்பிக்
என்ற வார்த்தை இரண்டு கிரேக்க சொல்லான மெட்டா (Meta) மற்றும் மார்பா (Morpha) என்ற
வார்த்தையில் இருந்து பெறப்பட்டதாகும். மெட்டா என்பது மாற்றம் என்றும், மார்பா என்பது
வடிவம்' என்றும் பொருள்படும். அதிக வெப்ப அழுத்தம் காரணமாகதீப்பாறைகளும் படிவுப்பாறைகளும்
மாற்றமடைந்து உருமாறிய பாறைகள் என பெயர் பெறுகிறது.
உருமாறிய
பாறைகள் இரண்டு வகைப்படும். அவை:
1. வெப்ப
உருமாற்றம் (Thermal Metamorphism)
2. இயக்க
உருமாற்றம் (Dynamic Metamorphism)
1. வெப்ப உருமாற்றம்: பாறைக்குழம்பு
பாறைகளில் ஊடுருவி செல்லும் போது அப்பாறைக்குழம்பின் வெப்பம், அங்குள்ள பாறைகளை உருமாற்றம்
செய்துவிடுகிறது. இது வெப்ப உருமாற்றம் எனப்படும்.
2. இயக்க உருமாற்றம்: பாறைக்குழம்பு
பாறைகளில் ஊடுருவிச் செல்லும் போது அப்பாறைக் குழம்பின் அழுத்தத்தால், அங்குள்ள பாறைகளை
உருமாற்றம் செய்துவிடுகிறது. இது இயக்க உருமாற்றம் எனப்படும்.
உங்களுக்குத் தெரியுமா?
உலக அதிசயங்களில ஒன்றான இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் -உருமாறிய பாறையிலிருந்து உருவான வெள்ளை பளிங்கு கற்களால்
(White Marble) கட்டப்பட்டது.
தீப்பாறையில் இருந்து உருமாறிய பாறை:
1. இயக்க
உருமாற்றத்தினால், கிரானைட் (Granite) பாறை “நைஸ்” (Gneiss) பாறையாக உருமாறுகிறது.
2. வெப்ப
உருமாற்றத்தினால் "கருங்கல்" (Basaite) பாறை பலகைப் பாறையாக (Slate
rock) உருமாறுகிறது.
படிவுப்
பாறையிலிருந்து உருமாறியப் பாறை:
1. வெப்ப
உருமாற்றத்தினால் மணற் பாறைகள் (Sand stone), வெண் கற்பாறையாக (Quartz) மாறுகின்றன.
2. மாக்கல்
(Shale), பலகைப்பாறையாகவும் (Slate) மாறுகின்றன.
உருமாறியப் பாறைகளின் பண்புகள்
1. உருமாறியப்
பாறைகள் பெரும்பாலும் படிக தன்மைக் கொண்டவை.
2. உருமாறிய பாறைகளின் பல்வேறு பட்டைகள் ஒரு பகுதி வெளிர் நிற கனிமங்களை கொண்டதாகவும், மற்றொரு பகுதி கருமை நிற கனிமங்களை கொண்டதாகவும் உள்ளன.