பாறை மற்றும் மண் | அலகு 1 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - பாறை சுழற்சி (Rock Cycle) | 8th Social Science : Geography : Chapter 1 : Rocks and Soils
பாறை சுழற்சி
(Rock Cycle)
தீப்பாறைகள்
என்பது புவியில் தோன்றிய முதன்மையான பாறையாகும். இப்பாறைகள் சிதைவடைந்து, அரித்தல்,
கடத்துதல் மற்றும் படியவைத்தலால் படிவுப்பாறைகளாக உருவாகின்றன. தீப்பாறைகளும் படிவுப்
பாறைகளும் வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக உருமாறியப் பாறைகளாக மாற்றம் அடைகின்றன.
உருமாறிய பாறைகள் சிதைக்கப்பட்டும், கடத்தப்பட்டும் மற்றும் படியவைப்பதால் படிவுப்
பாறைகள் உருவாகின்றன. உருகிய பாறைக்குழம்பு புவியின் உட்பகுதியிலிருந்து வெளியேறி புவியின்
மேற்பரப்பிலோ அல்லது புவிக்கு உட்பகுதியிலோ குளிர்ந்து தீப்பாறைகளாக மாறுகிறது. புவியின்
மேலோட்டுப் பகுதியில் பாறைகள் பல்வேறு இயற்கை சக்திகள் மற்றும் அக மற்றும் புறக்காரணிகளால்
பாறைகள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுகின்றன. இத்தொடர்ச்சியான செயலே பாறைச்சுழற்சி
ஆகும்
உங்களுக்குத் தெரியுமா?
குவார்ட்சைட் மற்றும் சலவைக் கற்கள் பொதுவாக கட்டுமானம் மற்றும் சிற்ப
வேலைபாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. சலவைக்
கற்கள் பரவலாக அழகான சிலைகள், அலங்கார பொருள்கள் குவளை, சிறிய பரிசு பொருள்கள் தயாரிக்கப்
பயன்படுகின்றன. சலவைக்கற்களின் துகள்களிலிருந்து நெகிழி (Plastic), காகிதம் போன்ற பொருள்கள்
உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.
பாறைகளின் பயன்கள்
பாறைகள்
வரலாற்று காலம் முதல் மனித குலத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாறைகள் அனைத்தும்
பொருளாதார அம்சங்களில் ஒரு மதிப்புமிக்க பொருளாக உள்ளன. உலோகங்கள், கனிமங்கள் மனித
நாகரிக வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருந்து வந்துள்ளது. மேலும் பாறைகள் நம்முடைய வாழ்க்கையில்
பல முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பாறைகளின் பயன்கள்
1. சிமெண்ட்
தயாரித்தல்
2. சுண்ண
எழுதுகோல்
3. தீ
(நெருப்பு)
4. கட்டடப்
பொருள்கள்
5. குளியல்
தொட்டி
6. நடைபாதையில்
பதிக்கப்படும் கல்
7. அணிகலன்கள்
8. கூரைப்
பொருள்கள்
9. அலங்காரப்
பொருள்கள்
10. தங்கம்
வைரம் மற்றும் நவரத்தினங்கள் போன்ற மதிப்புமிக்க பொருள்கள்.
செயல்பாடு
பல்வேறு வகையான பாறைகளை சேகரித்து வகுப்பறையில் காட்சிப்படுத்தவும்