அலகு 1 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - பாறை மற்றும் மண் | 8th Social Science : Geography : Chapter 1 : Rocks and Soils
புவியியல்
அலகு - 1
பாறை மற்றும் மண்
கற்றலின்
நோக்கங்கள்
>பாறைகளின் தன்மைகள்; அதன் வகைகள் மற்றும் பயன்களைப் புரிந்து கொள்ளுதல்
>பல்வேறு வகையான பாறைகளை அடையாளம் காணல்
>மண்ணின் தன்மை அதன் கூட்டமைப்புப் பற்றி அறிதல்
>மண்வளப் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுதல்
அறிமுகம்
உங்கள்
இருப்பிடத்திற்கு அருகிலோ அல்லது பயணத்தின் போதோ மலைகள் அல்லது பாறைகளைப் பார்த்திருக்கிறீர்களா?
உங்களின் விடுமுறை நாட்களில் ஏதேனும் மலைப்பகுதிகளுக்குச் சென்றது உண்டா ? இவைகள் புவியின்
மேற்பரப்பில் எப்படி உருவாயின என்று உங்களுக்குத் தெரியுமா? கோயில்கள், கட்டடங்கள்,
சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் போன்றவற்றின் கட்டுமானங்களில் எந்த வகையான பொருள்கள்
பயன்படுத்தப்படுகின்றன என உங்களுக்குத் தெரியுமா? இந்தப் பாடத்தில் நாம் பாறைகள் மற்றும்
மண்ணைப் பற்றி அறிந்துகொள்வோம்.
கீழ்
வகுப்புகளில் நாம் புவியின் நான்கு பகுதிகளான நிலக்கோளம், நீர்க்கோளம், வளிக்கோளம்
மற்றும் உயிர்க்கோளம் பற்றி படித்திருக்கிறோம். புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க
முக்கியத்துவம் வாய்ந்த கோளம் நிலக்கோளமாகும். இது திடப்பாறைகள் மற்றும் திடமற்ற பொருள்களைக்
கொண்டதாகும். நிலக்கோளம் என்பது இயல்பாகவே ஒரு "பாறையின் கோளமாகும்".
உங்களுக்குத் தெரியுமா?
-பாறையியல் என்பது 'புவி மண்ணியலின்' ஒரு பிரிவு ஆகும். இது பாறைகள்
ஆய்வுடன் தொடர்புடையது. பாறையியல் (Petrology) என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டது.
"பெட்ரஸ்" (Petrus) என்பது பாறைகளையும் Logos "லோகோஸ் என்பது அதைப்
பற்றி படிப்பு ஆகும்
கண்டறிக
வீடு
கட்டப்படும்போது அதன் அடித்தளம் எதைக் கொண்டு உருவாக்கப்படுகிறது.