Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | கணிப்பொறி நன்னெறியின் பிரச்சினைகள்
   Posted On :  25.09.2022 10:05 pm

11வது கணினி அறிவியல் : அலகு 17 : கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு

கணிப்பொறி நன்னெறியின் பிரச்சினைகள்

நன்னெறி பிரச்சினை என்பது ஒரு பிரச்சினை அல்லது தனி மனிதனுக்கோ அல்லது நிறுவனத்திற்கோ ஏற்படும், போது எது சரி (நன்னெறி) அல்லது தவறு (நன்னெறி அல்லாதது) இவற்றின் ஒன்றை தேர்வு செய்யும் முறை ஆகும்.

நன்னெறியின் பிரச்சினைகள் (ETHICAL ISSUES)


நன்னெறி பிரச்சினை என்பது ஒரு பிரச்சினை அல்லது தனி மனிதனுக்கோ அல்லது நிறுவனத்திற்கோ ஏற்படும், போது எது சரி (நன்னெறி) அல்லது தவறு (நன்னெறி அல்லாதது) இவற்றின் ஒன்றை தேர்வு செய்யும் முறை ஆகும். இந்த பிரச்சினை ஆனது தீர்க்கப்பட்டு சமூகத்தில் ஒரு நேர்மறையான அணுகுமுறையை கொண்டுவரவேண்டும். சில பொதுவான நன்னெறி பிரச்சினைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

சைபர் குற்றம் (cyber crime) 

மென்பொருள் உரிமையில்லா நகலாக்கம் (software piracy) 

அங்கீகரிக்கப்படாத அணுகுதல் (un Authorized access)

ஹேக்கிங் (Hacking) 

கணிப்பொறியை பயன்படுத்தி மோசடி செய்தல் (Use of computers to commit fraud) 

நச்சு நரல் (Virus) மூலம் நாசவேலை 

கணிப்பொறி மூலம் தவறான உரிமை கோருதல். 


இணைய குற்றம் (Cyber Crime)


சைபர் குற்றம் என்பது அறிவுசார் வெள்ளைக்காலர் குற்றமாகும். இந்த குற்றங்களை செய்வோர் பொதுவாக கணிப்பொறியை திறன்பட இயக்குபவராக இருப்பார்கள்.

உதாரணமாக - சட்ட விரோத பண பரிவர்த்தனை இணையத்தின் வழியாக நடைபெறுவதை உதாரணமாக கூறலாம். கணிப்பொறி குற்றங்களில் சில உதாரணமாக கொடுக்கப்பட்டுள்ளது.

அட்டவணை 17.1



மென்பொருள் திருட்டு (SOFTWARE PIRACY) 


மென்பொருள் திருட்டு என்பது ஒரு தனிப்பட்ட அல்லது ஒரு நிறுவனத்தால் முதலில் உருவாக்கப்பட்ட மென்பொருளை பதிப்புரிமை பெறாமல், சட்ட விரோதமாக குறியீடுகள், தகவல்கள், நிரல்கள் மற்றும் பிற தகவல்களை திருடுதல். அங்கீகாரம் இல்லாமல், நகல்களின் பிரதிகளை உருவாக்கி இந்த தரவை சொந்த நலனுக்காக, அல்லது வணிக இலாபத்திற்காக பயன்படுத்துவது ஆகும். 

எளிமையான கூறவேண்டுமெனில் மென்பொருள் திருட்டு என்பது “மென்பொருள்களின் அங்கீகரிக்கப்படாத நகல்” ஆகும்.


பெரும்பாலான மென்பொருள்கள் ஒரே கணிப்பொறியில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன அல்லது ஒரே நேரத்தில் ஒரு பயனரால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பயனர் மென்பொருளை வாங்கும் போது அதன் மென்பொருள் உரிமம் பெற்ற பயனராகிறார். காப்புரிமை பயன்பாட்டிற்கான நகல்களில் பிரதிகள் தயாரிக்க அனுமதிக்கப்படுவர். நகல்களை மற்றொருவருக்கு விநியோகம் செய்வது சட்ட விரோதமானது. 

மென்பொருள் திருட்டிற்கு முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை பகிர்மான மென்பொருள் என அழைக்கப்படுகின்றன. நகலெடுப்பதில் இருந்து மக்களை தடுக்க முயற்சிப்பதால் பயனில்லை. மாறாக மக்களுக்கு நேர்மையை உணரச்செய்யலாம். 

நிரலை உருவாக்கியவர்க்கு நேரடியாக ஒரு பதிவு கட்டணத்தை செலுத்தி, பயனர்களும், சக ஊழியர்களும், நிரல்களை நகலெடுக்க பகிர்மான மென்பொருள் ஊக்கப்படுத்தப்படுகிறது. சட்ட விரோதமாக பொதுமக்களுக்கு கிடைக்ககூடிய வணிக நிரல்கள் பெரும்பாலும் வார்ஸ்கள் (warez) என்று அழைக்கப்படுகின்றன. 


அங்கீகரிக்கப்படாத அனுமதி


அங்கீகாரமற்ற அணுகல் என்பது ஒரு வலைதளம், நிரல், சேவையகம் அல்லது பிற முறைமைக்கான அணுகல் முறையான பயனர் கணக்கை மீறுவதன் மூலம் அது அங்கீகரிக்கப்படாத அணுகல் எனப்படும். எடுத்துக்காட்டாக ஒருவருடைய பயனர் கணக்கும் பெயர், கடவுச்சொல்லை பயன்படுவதையே அங்கீகரிக்கப்படாத அனுமதியாகும். 

அங்கீகரிக்கப்படாத அணுகுதலை தடுக்க பயர்வால்கள், இன்டிருஷன் டிடெக்டிக் சிஸ்டம்ஸ் (Intrusion Detection Systems - IDS), நச்சு நிரல் மற்றும் உள்ளடக்க வருடிகள் பயன்படுத்தப்படுகின்றன.


ஹேக்கிங்


ஹேக்கிங் என்பது ஒரு கணிப்பொறியின் உரிமையாளரின் அனுமதி இல்லாமல், தனிப்பட்ட தரவு அல்லது கடவுச் சொல்லை குற்றம் சார்ந்த நடவடிக்கையாகவோ அல்லது பொழுது போக்கிற்காகவோ திருடுதல். இது மேலும் கணிப்பொறி அமைப்பில் அனுமதி பெறாமல் அணுகுதலாகும். மேலும் அதிலுள்ள பொருளடக்கத்தை மாற்றுதலாகும். இதை பொழுதுபோக்கு சவாலாக செய்தால் இதை நெறிமுறை ஹேக்கிங்காகும். இத்தகைய நெறிமுறை ஹேக்கிங் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் என நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.



கிராக்கிங் 

நிரலை பதிப்பித்து அதை பயனருக்கு தேவையற்றதாக மாற்றுவது கிராக்கிங்காகும். கிராகர் (ஒரு கருப்பு தொப்பி அல்லது இருண்ட பக்க ஹேக்கர் என்று அழைக்கப்படுவர்). கணிப்பொறி அமைப்பில் சட்டவிரோதமாக தரவுகளை திருடுதல் அல்லது மாற்றம் செய்தல்.

கிராக்கர் என்பவர் மற்றொரு கணிப்பொறி கட்டமைப்பில் இணையம் மூலம் நுழைந்து அவரின் கடவுச் சொல்லை அல்லது உரிமத்தை சட்டவிரோதமாக கண்டறிந்து வேலை செய்தல்.

மென்பொருள் சிதைவு என்பது மிகவும் அடிக்கடி ஏற்படுத்தப்படும் சிதைவு வகை ஆகும். கடவுச்சொல் விரிசல் என்று மற்றொரு வகை உள்ளது. இது கடவுச் சொற்களை அழிக்கப்பயன்படுகிறது. தானியங்கு திட்ட நிரல்களை பயன்படுத்தி கடவுச் சொல் கிராக் செய்வது அல்லது கைமுறையிலும் செய்யலாம்.

கிராக்கிங் என்பது ஒரு சுவாரசியமான உண்மை, சமூக கட்டமைப்பு ஆகும். மனிதனுடைய பலவினத்தைப் பயன்படுத்தி, கடவுச் சொற்கள் மட்டும் தகவல்களை பெறும் வழியாகும். இது மென்பொருள் அல்ல தகவல்களைப் பெறுவதற்கு தொலைபேசியை பயன்படுத்தலாம். உங்கள் நண்பர்களாக இருப்பதுடன் இணைய ரிலே அரட்டை ( IRC) அல்லது நல்லவராக உங்களுடன் பேசி தகவல்களை பெறலாம். மின்னஞ்சல் அவர்களுக்கு ஒரு அதிகாரபூர்வ மின்னஞ்சலாக, வங்கி அல்லது பிற அதிகாரபூர்வ நிறுவனங்களின் மின்னஞ்சல் போல் தோன்றலாம்.

உங்களின் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் கண்டுபிடித்து கடவுச்சொல்லை யூகிக்க முயற்சி செய்கிறார்கள். தனிப்பட்ட நன்மைக்காக அவர்களே கண்டுபிடித்து அவற்றை சுரண்டுவதில் உள்ள பாதிப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம். 


11th Computer Science : Chapter 17 : Computer Ethics and Cyber Security : Computer Ethical Issues in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 17 : கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு : கணிப்பொறி நன்னெறியின் பிரச்சினைகள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 17 : கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு