Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | குறியாக்கம் மற்றும் மறை குறியாக்கம்
   Posted On :  25.09.2022 10:34 pm

11வது கணினி அறிவியல் : அலகு 17 : கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு

குறியாக்கம் மற்றும் மறை குறியாக்கம்

குறியாக்கம் மற்றும் மறை குறியாக்கம் என்பது அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே தகவலை அணுக முடியும் என்ற இரகசியத்தை உறுதிப்படுத்தும்.

குறியாக்கம் மற்றும் மறை குறியாக்கம்

குறியாக்கம் மற்றும் மறை குறியாக்கம் என்பது அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே தகவலை அணுக முடியும் என்ற இரகசியத்தை உறுதிப்படுத்தும். குறியாக்கமானது எளிய உரைத் தரவு, சீரற்ற மற்றும் சிக்கனமான தரவுகளாக சிபர் உரை மாற்றும் முறை ஆகும். மறைக்குறியாக்கமானது சீரற்ற மற்றும் சிக்கனமான தரவுகளை எளிய உரைகளாக மாற்றும் தலைகீழ் முறையாகும். குறியாக்கம் மற்றும் மறைகுறியாக்கம் ஆகிய இரண்டும் குறிமுறையாக்கத்தைக் கொண்டு செய்யப்படுகிறது. குறிமுறையாக்கத்தின் திறவுகோல் என்பது குறிமுறையாக்க நெறிமுறையின் வெளியீடைக் கண்டறியும் தகவலின் ஒரு பகுதியாகும்.


குறியாக்கம் என்பது இரகசிய குறியீடுகளை பயன்படுத்தி அரசாங்கம் மற்றும் இராணுவத்தை தொடர்பு கொள்ள பயன்படுத்தும் இரகசிய மொழியாக பயன்படுகிறது. பொதுமக்கள் அமைப்புகளில் தகவலை பாதுகாக்க பயன்படுகிறது. உதாரணமாக, வலைதளம், தொலைபேசி, கம்பியில்லா நுண்ணிய தொலைபேசி, புளுடூத் மற்றும் தானியங்கி கருவிகள் போன்றவற்றில் தகவலைப் பாதுகாக்கிறது. அண்மை ஆண்டுகளில் தகவல் தொடர்பில் குறிப்பிடத்தக்க குறுக்கீடுகள் உள்ளதாக எண்ணிலடங்கா குற்றச்சாட்டுக்கள் உள்ளன. 

தரவுகள் வலையமைப்புகளுக்கிடையே அனுப்பப்படும்போது வலைதள போக்குவரத்தில் அங்கீகரிக்கப்படாத பயனர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக குறியாக்கம் செய்யப்படவேண்டும்.

11th Computer Science : Chapter 17 : Computer Ethics and Cyber Security : Encryption and Decryption in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 17 : கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு : குறியாக்கம் மற்றும் மறை குறியாக்கம் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 17 : கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு