Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு
   Posted On :  25.09.2022 10:01 pm

11வது கணினி அறிவியல் : அலகு 17 : கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு

கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு

இணையம் என்பது எளிதாக தொடர்பு கொள்ளக்கூடிய மற்றும் அனைவறாலும் பயன்படுத்தக்கூடிய சாதனமாக உள்ளது.

கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு

கற்றலின் நோக்கங்கள் :


இந்த பாடத்தை கற்றபின் மாணவர்கள் :

• இணைய குற்றங்கள் பற்றி அறிந்து கொள்வார்கள். 

• இணைய உலகத்தில் இணையப் பாதுகாப்பு பற்றிய வழி காட்டுதல்கள் மற்றும் அவற்றின் தேவைகள் பற்றி அறிந்துக் கொள்ளுவார்கள். 

• இணையப் பாதுகாப்பு பற்றிய சிக்கல்கள் பற்றி தெரிந்துக்கொள்வார்கள். 

• பிராக்ஸி சேவையகம் மற்றும் பயர்வால் செயல்பாடுகள் பற்றி அறிந்துக்கொள்வார்கள். 

• மறையாக்கம் மற்றும் குறியாக்கத்தின் அடிப்படை பற்றி கற்றுக்கொள்வார்கள். 

• தகவல் தொழில்நுட்ப சட்டங்கள், விதிகள், செயல்படுத்துதல் பற்றி அறிந்துக்கொள்வார்கள்.


அறிமுகம் 

இணையம் என்பது எளிதாக தொடர்பு கொள்ளக்கூடிய மற்றும் அனைவறாலும் பயன்படுத்தக்கூடிய சாதனமாக உள்ளது. தகவல் தொழில்நுட்பம் என்பது கணிப்பொறிகள், கைப்பேசிகள் மற்றும் இணையம் வழியாக பரந்து விரிந்துள்ளது. தகவல் தொழில் நுட்பத்தின் நோக்கங்கள் பலவாக இருந்தாலும், அதை தவறாக பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

கணிப்பொறி அமைப்பு என்பது பொதுவாக பாதிக்கப்பட கூடியது. அது தனிமனிதனின் அல்லது தொழில்களில், தினசரி வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மதிப்பு மிக்க தரவுகளை தவறாக பயன்படுத்துவரின் கைகளில் கிடைத்து விடாமல், சிறப்பு பாதுகாப்பு கொடுத்து பாதுகாக்க வேண்டும். ஆகவே, தரவுகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இணைய குற்றங்கள் என்பது கணிப்பொறியிலும், வலைப்பின்னல்களிலும், ஈடுபடுத்தப்படுகிறது. இது வளர்ந்து வரும் சமூகத்தின் மீது குற்றவாளிகள், பொறுப்பற்ற தனிமனிதனால் வலைதளத்தை பயன்படுத்தி தாக்குதல்கள் ஏற்படலாம். இது முக்கிய சவாலாக தகவல் தொழில் நுட்பம் பயன்படுத்துவோர் மீது உள்ளது. இணைய குற்றம், நேர்மை, பாதுகாப்பு மற்றும் வணிக அமைப்பின் வளர்ச்சியின் மீது அச்சுறுத்துவதாக உள்ளது. 



நன்னெறி (ETHICS)

நன்னெறி என்பதன் அர்த்தம் "எது தவறு மற்றும் எது சரி" இது கணிப்பொறி யார் பயன்படுத்துகிறார்களோ, அவர்களின் தார்மீக கொள்கையின் தொகுப்பு ஆகும். ஒவ்வொரு தனிமதனிதரும் சரியான நெறிமுறை, தர்மீகத்தை பின்பற்றுவதைப் பற்றி அறிந்துக் கொள்வதே நன்னெரி ஆகும்.

அறநெறி என்பது சமூகத்தில் (Morals) உள்ள நல்லவை, கெட்டவைகளை ஏற்று நடப்பது ஆகும். இன்றைய இணைய உலகில் சில தர நிலைகள் உள்ளன. அவை

• திருட்டு மென்பொருளை பயன்படுத்தாமல் இருப்பது. 

• அடுத்த பயனரின் கணக்கை அனுமதியின்றி பயன்படுத்தாமல் இருப்பது. 

• அடுத்தவரின் கடவுச்சொல்லை திருடாமல் இருப்பது. 

• ஊடுருவல் செய்யாமல் இருப்பது.

கணிப்பொறியின் நன்னெறியின் முக்கிய பிரச்சினைகள், இணைய சேவை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள், பதிப்புரிமம் பெற்ற தரவை வெளியிடுதல். உரிமம் பெறாமல் இலக்கமுறையிலுள்ள தகவல்களை வெளியிடுதல் மற்றும் இணையத்தளத்துடன் ஊடாகுதல், மென்பொருள் மற்றும் தொடர்புடைய சேவைகள்.


கணிப்பொறி நன்னெறி (COMPUTER ETHICS)


இணையத்தின் உதவியால் உலகமானது உலக கிராமமாக தற்போது உள்ளது. தனிமனிதன் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மேலும் தொழிற்நிறுவனங்கள் இணையத்தின் உதவியால் பிரபலமாகி உள்ளது என்பதை இணையதளம் நிருபித்துள்ளது. மின்வணிகம், தொழில்களில் மிகவும் பிரபலமாகியுள்ளது, ஏனென்றால் இது பல்வேறு தரப்பிலான நுகர்வோரை அணுக மற்ற வழிகளை விட வேகமாக பயன்படுகிறது.

கணிப்பெறி நன்னெறி நெறிமுறைகள் செயல்முறை, மதிப்புகள் மற்றும் நுகர்வோர் கணினி தொழிற்நுட்பத்தின் செயல்முறையை நிர்வகிக்கும் நடைமுறைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. அதனுடன் தொடர்புடைய துறைகளில் எந்த தனிநபரின் ஒழுக்க நெறிகளும் நம்பிக்கையும் பாதிக்கப்படுவதோ அல்லது மீறாமல் செயல்படுகிறது..

 

நன்னெறியின் வழிகாட்டுதல்கள் (GUIDELINES OF ETHICS)


பொதுவாக, பின்வரும் வழிகாட்டுதல்கள் கணிப்பொறி பயன்படுத்துவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

1. நேர்மை (Honesty) : இணையத்தை பயன்படுத்தும் பயனர் உண்மையுள்ளவராக இருத்தல். 

2. நம்பகத்தன்மை (Confidentiality): பயனர் அங்கீகரிக்கப்படாதவர்களிடம் முக்கிய தகவல்களை பரிமாற்றம் செய்யாமல் இருத்தல். 

3. மரியாதை (Respect) : மற்ற பயனருக்கு உள்ள தனி உரிமைக்கு உரிய மரியாதையை ஒவ்வொரு பயனரும் கொடுத்தல். 

4. தொழில்முறை (Professionalism) : தொழில்முறையில் ஒவ்வொரு பயனரும் தொழில் முறை நடத்தையுடன் இருத்தல். 

5. பயனர் கணிப்பொறி பயன்பாட்டின்போது சைபர் சட்டத்திற்கு கண்டிப்பாக கீழ்படிதல் வேண்டும். 

6. பொறுப்பு (Responsibility) : ஒவ்வொரு பயனர் அவர்களின், ஒவ்வொரு செயலுக்கும் உடைமையாளராக பொறுப் பேற்றுக் கொள்ளுதல்.

உங்களுக்குத் தெரியுமா?

நன்னெறி என்பது அறநெறி கோட்பாடுகின் தொகுப்பாகும். அதுவே சமூகத்தில் ஒரு தனி மனிதனின் நடத்தையை கையாளுகின்றது. மேலும் கணிப்பொறி பயன்படுத்தும் பயனரை கட்டுப்படுத்துகிறது.


11th Computer Science : Chapter 17 : Computer Ethics and Cyber Security : Computer Ethics and Cyber Security in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 17 : கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு : கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 17 : கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு