Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | சிற்றினக்கோட்பாடு (Concept of Species)
   Posted On :  05.01.2024 09:44 am

11 வது விலங்கியல் : பாடம் 1 : உயிருலகம்

சிற்றினக்கோட்பாடு (Concept of Species)

சிற்றினம் என்பது வகைப்பாட்டின் அடிப்படை அலகாகும்.

சிற்றினக்கோட்பாடு (Concept of Species)

சிற்றினம் என்பது வகைப்பாட்டின் அடிப்படை அலகாகும். சிற்றினம் என்ற சொல் ஜான் ரே என்பவரால் உருவாக்கப்பட்டது. 1693ம் ஆண்டில் வெளியான அவருடைய தாவரங்களின் பொது வரலாறு (Historia Generalis Plantarum (மூன்று தொகுதிகள்) என்ற நூலில் பொது மூதாதையரிடமிருந்து உருவான, புறத்தோற்றத்தில் ஒத்தமைந்த உயிரினக்குழுவே சிற்றினம் ஆகுமென அவர் விளக்கியுள்ளார். கரோலஸ் லின்னேயஸ் தன்னுடைய இயற்கையின் முறை (Systema naturae) என்னும் நூலில் சிற்றினம் என்பது வகைப்பாட்டின் அடிப்படை அலகு என குறிப்பிட்டுள்ளார். புறத்தோற்றத்திலும் உடற்செயலியலிலும் ஒத்த பண்புகளைக் கொண்டு, தங்களுக்குள் இனப்பெருக்கம் செய்து இனப்பெருக்கத்திறன் கொண்ட வழித்தோன்றல்களை உருவாக்கும் உயிரினத் தொகுதி சிற்றினம் என வரையறுக்கப்பட்டுள்ளது. 1859ல் சார்லஸ் டார்வின் 'சிற்றினங்களின் தோற்றம்' (Origin of Species) என்ற நூலில் இயற்கை தேர்வின் மூலம் சிற்றினங்களுக்கு இடையேயான பரிணாமத் தொடர்புகளை விளக்கியுள்ளார்.


11th Zoology : Chapter 1 : The Living World : Concept of species in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 1 : உயிருலகம் : சிற்றினக்கோட்பாடு (Concept of Species) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 1 : உயிருலகம்