Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி

உயிருலகம் | விலங்கியல் - பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி | 11th Zoology : Chapter 1 : The Living World

   Posted On :  05.01.2024 09:46 am

11 வது விலங்கியல் : பாடம் 1 : உயிருலகம்

பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி

11 வது விலங்கியல் : பாடம் 1 : உயிருலகம் : பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி, புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

9. பயன் தரும் பாக்டீரியாவை நோயூக்கி பாக்டீரியாவிலிருந்து வேறுபடுத்துக.


பயன் தரும் பாக்டீரியா

1. பாலை தயிராக மாற்றுகிறது

.கா. லேக்டோபேசில்லஸ்

2. குப்பைகளை மக்கச் செய்கிறது

3. நொதித்தல் செயலால் வினிகர் தயாரிக்க உதவுகிறது

.கா. அசட்டோபாக்டர்

நோயூக்கி பாக்டீரியா

1. தாவரம் மற்றும் விலங்குகளுக்கு நோயை உண்டாக்குகிறது.

2. தாவர நோய்கள் : தக்காளி - வாடல் நோய் 

விலங்கு நோய்கள்: ஆந்தராக்ஸ், காசநோய் நிமோனியா, டெட்டானஸ்


10. கோவேறுக்கழுதை (Mule) ஏன் மலட்டுத்தன்மை உடையதாக உள்ளது

ஆண் கழுதையை பெண் குதிரையுடன் இனப்பெருக்கம் செய்யும்போது கோவேறுக் கழுதை உருவாகிறது.

கழுதை அதன் சிற்றினத்துக்குள்ளேயே இனப்பெருக்கம் செய்யாத காரணத்தால் இதன் சேய்கள் மலட்டுத் தன்மையைப் பெறுகிறது.


11. ஃபெலிடே குடும்பத்தின் ஐந்து முக்கியப் பண்புகளை எழுதுக.

1. இரையைப் பிடிக்கவும் சாப்பிடவும் கூர்மையான நகங்களை பெற்றுள்ளது.

2. இறைச்சியை வெட்ட, வெட்டும் பல்லையும், பெரிய கூர்மையான கோரைப்பல்லையும் பெற்றுள்ளது

3. பெரும்பாலும் இவை தனித்து வாழ்பவை

4. இரவு நேரங்களில் உணவுக்காக வெளியில் வரும்

5. பலமான உடலமைப்பை பெற்றுள்ளது

6. கூர்மையான உணர் உறுப்புக்களை பெற்றுள்ளது. .கா. கேட்டல், வாசனை, பார்வை, தொடுதல்.

7. இதன் எடை 2 கிலோ முதல் 300 கிலோ வரை இருக்கும்.


12. சிற்றினக் கோட்பாட்டில் சார்லஸ் டார்வினின் பங்கு யாது?

• 1859ல் சார்லஸ் டார்வின் சிற்றினங்களின் தோற்றம் என்ற நூலை எழுதினார்.

இந்நூலில் இயற்கை தேர்வின் மூலம் சிற்றினங்களுக்கிடையேயுள்ள பரிணாமத் தொடர்பை விளக்கியுள்ளார்.


13. யானைகளும் வனவிலங்குகளும் மனித வாழ்விடத்தில் நுழைய காரணம் என்ன?

1. வீடுகள், அணைகள் மற்றும் தொழிற்சாலைகள் கட்டுவதற்காக காடுகள் அழிக்கப்படுகிறது. இதனால் காடுகளின் பரப்பளவு குறைகிறது.

2. ஆண் யானைகளை அதன் தந்தத்திற்காக வேட்டையாடுவதால், பெண் யானைகள் இனப்பெருக்க காலத்தில் ஊருக்குள் வருகிறது.


14. விலங்கு காட்சிச் சாலைக்கும் வனவிலங்கு சரணாலயத்திற்கும் உள்ள வேறுபாடு யாது?


விலங்குகாட்சி சாலை

1. இது செயற்கையாக அமைக்கப்பட்ட இடம்

2. விலங்குகள் கூண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ளது

3. பொழுது போக்கு நோக்கத்திற்காக உண்டாக்கப்பட்டது.

வனவிலங்கு சரணாலயம்

1. இது இயற்கை சூழலில் உள்ள இடம்

2. விலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறது.

3. பொழுது போக்கு நோக்கத்திற்காக வளர்க்கவில்லை


15. நவீன மூலக்கூறுக்கருவிகளைக் கொண்டு விலங்குகளை அடையாளம் கண்டு வகைப்படுத்தலாமா?

1. ஒரு உயிரியின் DNA-ல் உள்ள குறுகிய மரபுக் குறியீடுகளை வைத்து, அந்த உயிரி குறிப்பிட்ட சிற்றினத்தைச் சார்ந்ததா? என்று அறியலாம். இதற்கு DNA வரிக்குறியீடு தொழில் நுட்பம் உதவுகிறது.

2. ஒரு மரபு குழுமத்தில் உள்ள ஜீன்களுக்கிடையேயுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை DNA வரிசையமைப்பு மூலம் கண்டறியலாம். இதற்கு – DNA கலப்பு ஆக்கம் தொழில் நுட்பம் உதவுகிறது

3. DNA-வில் உள்ள சிறப்பு அமைப்புகளை அறிந்து ஒப்பிடுவதன் மூலம் ஒரு உயிரியை அடையாளம் காணலாம். இதற்கு கைரேகை தொழில் நுட்பம் உதவுகிறது.

4. ஒத்தமைவு DNA மூலக்கூறுகளின் வரிசை அமைப்பில் உள்ள வேற்றுமைகளை DNA மாதிரி மூலம் அறியலாம். இதற்கு வரையறுக்கப்பட்ட துண்டங்களின் பல்வேறு தன்மைகளின் பகுப்பாய்வு என்று பெயர்.

5. ஒரு ஜீன் அல்லது ஜீனின் பகுதியை பாலிமரேஸ் சங்கிலி வினையைப் பயன்படுத்தி, பெருக்கி, அதனை வகைப்பாட்டு கருவியாக பயன்படுத்தலாம்.


16. உயிரியல் பாடத்தில் இலத்தீன் மற்றும் கிரேக்கப் பெயர்களின் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்குக?

1. நவீன காலத்திற்கும், முந்தைய காலத்திற்கும் அறிவு பெறும் மொழியாக கிரேக்கமும் இலத்தீனும் காணப்பட்டது.

2. கற்றறிந்தவர்கள், அறிவியலாளர்கள் இவ்விரண்டினையும் கற்றிருந்ததால், மற்றவர்கள் அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளை மற்றும் terms பயன்படுத்தினார்கள்.

3. அந்த காலக்கட்டத்தில் முதல்நிலை மொழியாக மேற்கத்திய ஐரோப்பா நாடுகளில் காணப்பட்டதால் அது அறிவியலின் மொழியாக அங்கீகரிக்கப்பட்டது

4. சொல்லப்போனால் லத்தீனைவிட கிரேக்கம் இன்னும் அதிக அறிவியல் மொழியாகக் காணப்பட்டது

5. தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் சாதாரணப் பெயர்கள் பல்வேறு மொழிகளில் காணப்பட்டது அவை, சர்வதேச அளவில் பயன்பாட்டிற்கு ஒரு பெயரிடுதல் முறை தேவைப்பட்டது.

6. கரோலஸ் லின்னேயஸ் தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் இரு சொற்களால் பெயரிடு முறைக்கு இம்மொழிகளையே பயன்படுத்தி - அதற்கு உலகளாவிய அங்கீகாரம் பெற்றுத்தந்தார்.

7. அது மட்டுமல்ல ICBN, ICZN எனப்படும் சர்வதேச தாவரவியல், மற்றும் விலங்கினப் பெயர் சூட்டும் சட்டம் கண்டிப்பாக தாவர மற்றும் விலங்குகளின் -பெயர்களோடு அவற்றின் முதன்மைவிளக்கங்களும் லத்தீனில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பது அவசியம் என அறிவுறுத்தியது.

Tags : The Living World | Zoology உயிருலகம் | விலங்கியல்.
11th Zoology : Chapter 1 : The Living World : Answer the following questions The Living World | Zoology in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 1 : உயிருலகம் : பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி - உயிருலகம் | விலங்கியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 1 : உயிருலகம்