விலங்கியல் - சரியான விடையை தெரிவு செய்க | 11th Zoology : Chapter 1 : The Living World
மதிப்பீடு:
1. உயிருள்ளவை உயிரற்றவைகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?
அ) இனப்பெருக்கம்
ஆ) வளர்ச்சி
இ) வளர்சிதை மாற்றம்
ஈ) மேற்குறிப்பிட்ட அனைத்தும்
விடை: ஈ) மேற்குறிப்பிட்ட அனைத்தும்
2. ஒத்த பண்புகளின் தரத்தைப் பெற்ற உயிரினக்குழு ----------------- -ஆகும்.
அ) சிற்றினம்
ஆ) வகைப்பாட்டுத் தொகுதி
இ) பேரினம்
ஈ) குடும்பம்
விடை: அ) சிற்றினம்
3. தரத்தைப் பற்றி கருதாமல், வகைப்பாட்டின் ஒவ்வொரு அலகு --------- ஆகும்.
அ) டாக்சான்
ஆ) வகை
இ) சிற்றினம்
ஈ) ஸ்ட்ரெயின்
விடை: அ) டாக்சான்
4. கீழ்க்கண்டவற்றுள் எது சமதரத்தில் இல்லை
அ) பிரைமேட்டா
ஆ) ஆர்த்தோப்டீரா
இ) டிட்டிரா
ஈ) இன்செக்டா
விடை: ஈ) இன்செக்டா
5. எந்த வகைப்பாட்டு கருவி டாக்சான் பற்றிய முழுவிவரங்களைக் கொண்டுள்ளது?
அ) வகைப்பாட்டுத் திறவுகோல்
ஆ) ஹெர்பேரியம்
இ) தாவரம்
ஈ) மோனோஃகிராப்
விடை: அ) வகைப்பாட்டுத் திறவுகோல்
6. பல்லுயிர் தன்மை என்ற பதத்தைச் சூட்டியவர் யார்?
அ) வால்டர் ரோஸன்
ஆ) எ.ஜி. டான்ஸ்லே
இ) அரிஸ்டாடில்
ஈ) எபி.டி. காண்டோல்
விடை: அ) வால்டர் ரோஸன்
7. கிளாடோகிராம் என்பது கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டுள்ளது
அ) உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல்
ஆ) பரிணாமப் பண்புகள் மற்றும் மரபுவழிப் பண்புகள்
இ) பல்லுயிர் தன்மை மற்றும் இனத்தொடர்பு தொகுப்பமைவு
ஈ) மேற்குறிப்பிட்ட ஏதுமில்லை
விடை: ஆ) பரிணாமப் பண்புகள் மற்றும் மரபுவழிப் பண்புகள்
8. மூலக்கூறு வகைப்பாட்டின் கருவியில் இது அடங்கியுள்ளது.
அ) டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ
ஆ) மைட்டோகான்டிரியா மற்றும் எண்டோபிளாசவலை
இ) செல்சுவர் மற்றும் பிளாஸ்மா புரோட்டின்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை: அ) டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ