மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது | அலகு 2 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - முடிவுரை, மீள்பார்வை, கலைச்சொற்கள் | 8th Social Science : Civics : Chapter 2 : Citizens and Citizenship
முடிவுரை
நமது
அரசியலமைப்புச் சட்டம் ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது. இதன் மூலம் இந்தியமக்கள்
அனைவருக்கும் சம உரிமையை வழங்குகிறது. ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கும் பொருட்டு,
இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் நமது அரசியலமைப்பு ஊக்குவிக்கிறது.
மீள்பார்வை
•ஒரு
அரசால் அளிக்கப்பட்ட சட்ட உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்கும் ஒருவர் குடிமகன்
எனப்படுகிறார்.
•இந்திய
அரசியலமைப்பின் பகுதி – || 5 முதல் 11 வரையிலான விதிகள் இந்தியக் குடியுரிமை பற்றி
குறிப்பிடுகிறது.
•1955
ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டம், ஒருவர் இந்தியக் குடியுரிமையைப் பெறுதலையும்,
இழத்தலையும் பற்றி குறிப்பிடுகின்றது.
•இந்திய
அரசியலமைப்புச் சட்டம் ஒற்றைக் குடியுரிமையை நமக்கு வழங்குகிறது.
இணையச் செயல்பாடு
குடிமக்களும் குடியுரிமையும்
படிநிலைகள்
• கீழ்க்காணும்
உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ
இணையப் பக்கத்திற்குச் செல்க.
• "Act/Rules/Regulations"
என்பதைத் தேர்வு செய்து இந்தியக் குடியுரிமைப் பெறுவதற்கான அரசியலமைப்பு நடைமுறைகளை
அறிந்து கொள்க.
• திரையின்
கீழ்ப்பகுதியில் காணப்படும் "Required Documents" என்பதைத் தேர்வு செய்து
முக்கிய ஆவணங்கள் பற்றித் தெரிந்து கொள்க.
•
"Sample Forms" என்பதைச் சொடுக்கி குடியுரிமைப் பெற விண்ண ப்பிக்கத் தேவையான
படிவங்களின் மாதிரிகளை அறிந்து கொள்க.
உரலி:
https://indiancitizenshiponline.nic.in/Home.aspx