அலகு 2 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - இந்தியக் குடியுரிமையை இழத்தல் | 8th Social Science : Civics : Chapter 2 : Citizens and Citizenship
இந்தியக்
குடியுரிமையை இழத்தல்
குடியுரிமை
இழப்பு பற்றிய மூன்று வழிமுறைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டாவது பகுதியின்
5 முதல் 11 வரையிலான விதிகள் குறிப்பிடுகின்றன.
குடியுரிமையை துறத்தல் (தானாக முன்வந்து குடியுரிமையைத் துறத்தல்)
ஒருவர்
வெளி நாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரின் இந்தியக் குடியுரிமை அவரால் கைவிடப்படுகிறது.
குடியுரிமை முடிவுக்கு வருதல் (சட்டப்படி நடைபெறுதல்)
ஒர் இந்தியக்
குடிமகன் தாமாக முன்வந்து வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரது இந்தியக்
குடியுரிமை தானாகவே முடக்கப்படுகிறது.
குடியுரிமை மறுத்தல் (கட்டாயமாக முடிவுக்கு வருதல்)
மோசடி,
தவறான பிரதிநிதித்துவம் அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல் ஆகியவற்றின்
மூலம் இந்தியக் குடியுரிமையை பெறும் ஒருவரின் குடியுரிமையை இந்திய அரசு ஓர் ஆணை மூலம்
இழக்கச் செய்கிறது.
உங்களுக்குத் தெரியுமா?
நாட்டுரிமை மற்றும் குடியுரிமை
பூர்வீகம், பிறப்பு மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட
நாட்டினர் இயல்பாக பெறும் நிலை நாட்டுரிமை எனப்படும். சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு
ஒரு நாட்டின் அரசாங்கத்தால் தனி ஒருவருக்கு வழங்கப்படுவது குடியுரிமை எனப்படும்.