பாறைக்கோளம் - உள் இயக்கச் செயல்முறைகள் | புவியியல் - வெப்ப உமிழ்வு சுழற்சி | 11th Geography : Chapter 3 : Lithosphere: Endogenic Processes
வெப்ப உமிழ்வு சுழற்சி
(Convection cell)
புவித் தட்டுகள் ஏன் நகர்ந்து
கொண்டே இருக்கின்றன என்று நீங்கள் நினைக்கலாம். வெப்ப உமிழ்வு சுழற்சியின் காரணமாக
புவித் தட்டுகள் நகர்கின்றன. புவிக் கருவில் உள்ளவெப்பத்தின் காரணமாக பாறை
குழம்பு சுழல்வதை வெப்ப உமிழ்வு சுழற்சி என்கிறோம். படம் 3.13 ஐ பார்க்கும் பொழுது ஏன் புவித்
தட்டுகள் வெவ்வேறு திசைகளில் நகர்கின்றன என்பதை புரிந்து கொள்வீர்கள்.
படம் 3.13 வெப்ப உமிழ்வு சுழற்சி
பாறை குழம்பு (மாக்மா) வெவ்வேறு
திசைகளில் சுழல்வதால் புவித் தட்டுகளை வெவ்வேறு திசைகளில் உந்தி அல்லது இழுத்து
நகர்த்துகின்றது. எனவே புவித் தட்டானது ஒன்றை நோக்கி மற்றொன்றும், ஒன்றைவிட்டு மற்றொன்று
விலகியும் மற்றும் பக்கவாட்டிலும் நகர்கிறது.
மடிப்பு, பிளவு, நிலநடுக்கம், எரிமலை, போன்றவைகள் புவித் தட்டு
நகர்வினால் உருவாகின்றன. நாம் இப்பொழுது இயக்க சக்திகளின் காரணங்கள், தாக்கங்கள் மற்றும் பரவலைப்
பற்றி காணலாம்.
உள் இயக்க சக்திகள் (Internalforces)
உள் இயக்க சக்திகளை டெக்டானிக் (tectonic force ) சக்திகள் எனவும் அழைக்கலாம். இவை பொதுவாக புவித் தட்டு
எல்லைகளில் நடைபெறுகின்றன. வெப்ப உமிழ்வு சுழற்சி மற்றும் புவித் தட்டு நகர்வினால்
உள் இயக்க சக்திகள் ஏற்படுகின்றன. உள் இயக்கச் சக்திகளால் மடிப்பு, பிளவு, நிலநடுக்கம் மற்றும் எரிமலை
போன்றவை உருவாகின்றன.