புவியியல் - புவித் தட்டு அமைப்பியல் | 11th Geography : Chapter 3 : Lithosphere: Endogenic Processes
புவித் தட்டு அமைப்பியல்
(Plate Tectonics)
இரண்டு கண்டங்களுக்கு இடையில்
மூழ்கி நீந்துவதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது ஐஸ்லாந்தில் உள்ள சில்ஃபரா
(Silfra) பிளவில் சாத்தியம் தான். (படம் 3.7) ஐ பார்க்கவும். இது
திங்வெள்ளிர் (Tingvellir) தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. இது சரியாக வட அமெரிக்க
புவித் தட்டிற்கும் யுரேசிய புவித் தட்டிற்கும் இடையில் அமைந்துள்ளது. இது இரண்டு
தட்டுகளுக்கு இடையே அமைந்துள்ள நம்மால் காணக்கூடிய எல்லையாகும்.
நீங்கள் கண்ட நகர்வுக் கொள்கையை
பற்றி ஏற்கனவே படித்திருக்கிறீர்கள். இப்போது நாம் புவித் தட்டு எல்லைகளைப் பற்றி
பார்ப்போம்.