அறிமுகம் - புவியியல் - பாறைக்கோளம் - உள் இயக்கச் செயல்முறைகள் | 11th Geography : Chapter 3 : Lithosphere: Endogenic Processes
பாறைக்கோளம் - உள் இயக்கச்
செயல்முறைகள்
அத்தியாயக் கட்டகம்
3.1
அறிமுகம்
3.2
புவியின் உள் அமைப்பு
3.3
கண்ட நகர்வுக் கோட்பாடு
3.4
புவித்தட்டு அமைப்பியல்
3.5
புவித் தட்டு எல்லைகள்
3.6
வெப்ப உமிழ்வு சுழற்சி
3.7
மடிப்பு
3.8
பிளவு
3.9
நிலநடுக்கம்
3.10
எரிமலைகள்
3.11
பாறைகள்
3.12
பாறை சுழற்சி
அறிமுகம்
இரஷ்யர்கள் புவியின் நடுவே குழி
தோண்டி செல்ல முயற்சித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அது உண்மையில் தைரியமான
முயற்சிதான்.
மனிதன் புகழ்மிக்க வாயேஜர் 1 செயற்கைக் கோளை (விண்கலம்)
சூரியக் குடும்பத்திற்கு வெளியே அனுப்ப 26 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட வேளையில், (புவியிலிருந்து 16.5 பில்லியன் கி.மீ தூரம்) அதே
நேரத்தை (24 ஆண்டுகள்) புவிக்கடியில் வெறும்
12.3 கி.மீ
கற்றல் நோக்கங்கள்
• புவியின் உள் அமைப்பு
மற்றும் அதன் கூறுகளை புரிந்து கொள்ளுதல்.
• கண்ட நகர்வுக் கொள்கை
பற்றிய நுண்ணறிவை வளர்த்துக் கொள்ளுதல்.
• புவித்தட்டுக் கொள்கையின்
கருத்தைவிவரிப்பது.
• புவி உள் சக்திகளை
பட்டியலிட்டு அவற்றின் பண்புகளை ஒப்பிடுதல்.
• பாறை வகைகள் மற்றும் பாறை
சுழற்சியை விளக்குதல்.
தூரம் செல்ல எடுத்துக்
கொண்டார்கள். இரஷ்யர்கள் "கோலா" சூப்பர் ஆழ்துளையை 1970க்கும் 1994க்கும் இடைப்பட்ட காலத்தில்
தோண்டினார்கள். 12.3 கிலோ மீட்டர் ஆழம் கொண்ட 'நட்சத்திர வழி' (SG-3) என்பது இதன் மிக ஆழமான
பகுதியாகும்.
புவியின் மேற்பரப்பானது உள் மற்றும் வெளி இயக்க சக்திகளால்
தொடர்ச்சியாக மாற்றி அமைக்கப்படுகின்றது. உள் மற்றும் வெளி இயக்கச் சக்திகள் புவி
மேற்பரப்பின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்களை புவிப்புற செயல்முறை என்கிறோம்.
(படம் 3.3) பாறைகளின் நகர்வு மற்றும்
இடப்பெயர்வு மூலமாக புவி மேற்பரப்பின் தோற்றத்தை மாற்றி அமைக்கும் செயல்முறையை
ஒட்டுரு அழிதல் (Diastrophism) என அழைக்கிறோம். ஒட்டுரு அழிதல் கண்ட ஆக்க நகர்வு மற்றும்
மலையாக்க நகர்வு செயல்முறைகளை கொண்டுள்ளது.
புவியுடனான நமது அனுபவம்
பெரும்பாலும் புவியின் மேற்பரப்பு வரையில் தான் உள்ளது. ஆனால் புவியானது மிகச்
சிக்கலான உள் அமைப்பைக் கொண்டுள்ளது. புவியானது பாறைக்கோளம், நீர்க்கோளம், வளிக்கோளம் மற்றும்
உயிர்க்கோளம் ஆகியவற்றால் ஆனது.
பாறைக்கோளம் புவியின் கடினமான மேலோட்டினை
பாறைக்கோளம் என்கிறோம். இது மேலோடு மற்றும் கவச அடுக்கின் மேற்பகுதியை
உள்ளடக்கியது. பாறைக்கோளம் என்ற வார்த்தை லித்தோஸ்பியர் என்ற கிரேக்க
சொல்லிலிருந்து பெறப்பட்டது. 'லித்தோஸ்' என்பதன் பொருள் 'பாறை' மற்றும் 'ஸ்பேரா' என்பதன் பொருள் 'கோளம்' என்பதாகும். பாறைக்கோளம் என்ற சொல் ஜோசப் பேரல் என்ற
அமெரிக்க நில அமைப்பியல் வல்லுநரால் அறிமுகப்படுத்தப்பட்டது.